சிவாவிடம் அத்தனை முறை வாய்ப்பு கேட்டேன்.. ஆனா.. பார்த்தா மட்டும் செல்லம்னு.. கங்குவா படத்த நான் பார்க்கவே" - கூல் சுரேஷ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சிவாவிடம் அத்தனை முறை வாய்ப்பு கேட்டேன்.. ஆனா.. பார்த்தா மட்டும் செல்லம்னு.. கங்குவா படத்த நான் பார்க்கவே" - கூல் சுரேஷ்

சிவாவிடம் அத்தனை முறை வாய்ப்பு கேட்டேன்.. ஆனா.. பார்த்தா மட்டும் செல்லம்னு.. கங்குவா படத்த நான் பார்க்கவே" - கூல் சுரேஷ்

Kalyani Pandiyan S HT Tamil
Nov 23, 2024 10:34 AM IST

ஞானவேல் ராஜா என்னை பார்க்கும் பொழுது, தங்கம் செல்லம் என்று பேசுவார். ஆனால் அவரும் இப்போது வரை எனக்கு எந்த வாய்ப்புகளையும் கொடுக்கவில்லை - கூல் சுரேஷ்

சிவாவிடம் அத்தனை முறை வாய்ப்பு கேட்டேன்.. ஆனா.. பார்த்தா மட்டும் செல்லம்னு.. கங்குவா படத்த நான் பார்க்கவே" - கூல் சுரேஷ்
சிவாவிடம் அத்தனை முறை வாய்ப்பு கேட்டேன்.. ஆனா.. பார்த்தா மட்டும் செல்லம்னு.. கங்குவா படத்த நான் பார்க்கவே" - கூல் சுரேஷ்

சென்னையில் நடைபெற்ற காக்கா படத்தின் நிகழ்வில் பேசிய அவர்," கங்குவா படம் குறித்து வந்த எதிர்மறையான விமர்சனங்களுக்கு எதிராக நான் குரல் கொடுத்து இருந்தேன். அதற்கு என்னை எல்லோரும் அப்படி திட்டுகிறார்கள். திருக்குறளில் இல்லாத வார்த்தையெல்லாம் கொண்டு எனக்கு வசைப்பேச்சுகள் வந்து கொண்டு இருக்கின்றன.

எனக்கு பின்னால்தான் ஜோதிகாவே

கங்குவாப்படத்திற்கு முதலில் குரல் கொடுத்தது நான் தான். எனக்கு பின்னால்தான் ஜோதிகாவே குரல் கொடுத்தார்.

இதற்கும் இயக்குனர் சிவாவிடம் அவரது படங்களில் நடிக்க ஆரம்பம் முதலே வாய்ப்பு கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போது வரை அவர் கொடுக்கவில்லை. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னை பார்க்கும் பொழுது, தங்கம் செல்லம் என்று பேசுவார். ஆனால் அவரும் இப்போது வரை எனக்கு எந்த வாய்ப்புகளையும் கொடுக்கவில்லை.

 

என்னை போல் குரல் கொடுக்கவில்லை

ஆனாலும் கங்குவா படத்திற்காக நான் குரல் கொடுத்தேன். அந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் கூட, தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட என்னை போல் குரல் கொடுக்கவில்லை. உண்மையில் நான் கங்குவா படத்தை பார்க்கவே இல்லை. காரணம் என்னவென்றால் அந்த படத்தை பார்த்தால், அந்த படத்தில் இடம் பெற்று இருக்கும் கதாபாத்திரங்களை பார்க்கும் பொழுது அதிலெல்லாம் நான் நடித்திருக்கலாமே என்று தோன்றும் அதனால் தான் அந்த படத்தை நான் பார்க்கவில்லை. அதேபோல ஜெய்பீம் படத்தையும் நான் பார்க்கவில்லை. ஆகையால் என்னை திட்டாதீர்கள்" என்று பேசினார்

நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி முதன்முறையாக ஜோடிபோட்டு நடித்திருந்தார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல், நடராஜன் சுப்ரமணியம், கருணாஸ், போஸ் வெங்கட், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். 

இந்நிலையில் கங்குவா திரைப்படம் சூர்யா கதாநாயகனாக நடித்து 2 வருடங்களுக்குப் பின் திரைக்கு வரும் படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நவம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் 11,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்தது. 

ஞானவேல் ராஜா போட்ட உத்தரவு

படத்தில் நடிகர் சூர்யா கத்திக்கொண்டே இருப்பதாக பெரும்பாலான விமர்சனங்கள் எழுந்தன. இதனால் கங்குவா திரையரங்கு உரிமையாளர்களிடம் வால்யூமை இரண்டு புள்ளிகள் குறைக்கச் சொல்லி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் சொல்லியிருக்கின்றனர். மேலும் கதை புரியவில்லை, எங்கள் டிக்கெட் பணம் வீணானது என ரசிகர்கள் புலம்பிய நிலையில், படம் வெளியான முதல் 3 நாட்களில் படத்தின் இயக்குநர், நடிகர்களை தனிப்பட்ட முறையிலும் மிக மோசமாக விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில், தற்போது சிலர் கங்குவா திரைப்படம் நன்றாக இருக்கிறது எனக் கூறி வரும் நிலையில், படம் வெற்றி பெற வேண்டி, இயக்குநர் சிறுத்தை சிவாவும், நடிகர் சூர்யாவும் சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.