Cooku with Comali 6: புதுசா பெருசா.. அதே மாவு.. அதே காமெடி.. விஜய் டிவியின் குக் வித் கோமாளி 6 ப்ரோமோ இங்கே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cooku With Comali 6: புதுசா பெருசா.. அதே மாவு.. அதே காமெடி.. விஜய் டிவியின் குக் வித் கோமாளி 6 ப்ரோமோ இங்கே!

Cooku with Comali 6: புதுசா பெருசா.. அதே மாவு.. அதே காமெடி.. விஜய் டிவியின் குக் வித் கோமாளி 6 ப்ரோமோ இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 14, 2025 08:13 PM IST

Cooku with Comali 6: வெற்றிகரமாக 5 சீசன்களை நிறைவு செய்திருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது 6 வது சீசனில் காலடி எடுத்து வைத்திருக்கிறது.

Cooku with Comali 6: புதுசா பெருசா.. அதே மாவு.. அதே காமெடி.. விஜய் டிவியின் குக் வித் கோமாளி 6 ப்ரோமோ இங்கே!
Cooku with Comali 6: புதுசா பெருசா.. அதே மாவு.. அதே காமெடி.. விஜய் டிவியின் குக் வித் கோமாளி 6 ப்ரோமோ இங்கே!

குக் வித் கோமாளி சீசன் 6

வெற்றிகரமாக 5 சீசன்களை நிறைவு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சி தற்போது 6 வது சீசனில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. அதற்கான ப்ரோமோ வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

அந்த ப்ரோமோவில், ‘ சரத், சுனிதா, ராமர், புகழ் உள்ளிட்டோர் இடம் பெற்று இருக்கிறார்கள். அவர்களை நோக்கி ஒரு பெண்மணி, 5 சீசன்களாக அரைத்த மாவைத்தானே இதிலும் அரைக்கப்போகிறீர்கள்.. அதே காமெடி.. அதே கோமாளி.. இதில் என்ன புதிதாக இருக்கப்போகிறது.. என்று கேட்கிறார். அதற்கு அவர்கள் இந்த நிகழ்ச்சி புதிதாக மட்டுமல்ல, பெரிதாகவும் இருக்கப்போகிறது.. ஸ்ரெஸ்க்கு கொடுங்க ரெஸ்ட்.. இது குக் வித் கோமாளி 6’ என்று சொல்கிறார்கள்.

பார்வையாளர்களை இழந்த நிகழ்ச்சி

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4 சீசன்கள் முடிந்து 5ஆவது சீசன் தொடங்கிய சமயத்திலேயே இந்த நிகழ்ச்சி மக்களின் கவனத்தை ஈர்க்கத் தவறியது. விஜய் டிவி நிர்வாகத்திற்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களான வெங்கடேஷ் பட்- தாமுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியை இதுவரை இயக்கி வந்த தனியார் நிறுவனமும் விஜய் டிவியிலிருந்து வெளியேறியது. அதனை தொடர்ந்து தனியார் நிறுவனமும், வெங்கடேஷ் பட்டும் சேர்ந்து சன் டிவியில் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற புதிய நிகழ்ச்சியை குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக தொடங்கினர். அதில் வெங்கடேஷ் பட்டிற்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜன் நடுவராக நியமிக்கப்பட்டார்.

ஃப்ரஷ்ஷாக வந்த டீம்

ஆனாலும், விஜய் டிவியின் டிஆர்பி மெல்ல மெல்ல சரியத் தொடங்கியது. இதுவரை கோமாளியாக இருந்த மணிமேகலை தொகுப்பாளராக களம் இறங்கினார். அத்துடன் பெரும்பாலான போட்டியாளர்கள் விஜய் டிவியில் இருந்தே களம் இறக்கப்பட்டனர். இது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மார்க்கெட்டை மேலும் குறைத்தது.

ஆரம்பித்த புயல்

பின், இவர்கள் எல்லாம் நிகழ்ச்சிக்குள் ஒட்ட கொஞ்சம் அவகாசம் எடுக்க ஆரம்பித்த நிலையில், புதிதாக வந்த கோமாளிகள் எல்லாம் வித்தியாசமாக நடந்துகொள்ள, ஆரம்பத்தில் நிகழ்ச்சியை தாங்கிப் பிடித்த புகழ் ஓரம்கட்டப்பட்டு குரேஷிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இதுவும் நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் குறைய காரணமாக அமைந்தது. இதை எல்லாவற்றையும் தாண்டி, குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதியில் வைரலாக காரணமாக அமைந்தவர்கள் இரண்டு பேர்.

ஹாட் டாப்பிக்கான குக் வித் கோமாளி

அது தொகுப்பாளர்களான பிரியங்காவும் மணிமேகலையும் தான். இவர்களுக்குள்ளே நடந்த சின்ன சின்ன மனக் குமுறல்கள் சண்டையாக வெடித்து, மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்தே விலகினார். இவர் அதோடு நில்லாமல், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பற்றி கருத்து தெரிவித்து சோசியல் மீடியாலையே பற்ற வைத்து சுமார் ஒரு மாதம் ஹாட் டாப்பிக்காக மாறினார். பின் அவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக சேர்ந்தார்.

Kalyani Pandiyan S

TwittereMail
சு. கல்யாணி பாண்டியன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். 7 வருடங்களுக்கு மேலாக, காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். அண்ணா பல்கலைகழகத்தில் பி இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்திருக்கும் இவர், மூன் டிவி, புதியதலைமுறை, ஏபிபி நாடு உள்ளிட்ட செய்தி நிறுவனங்களை தொடர்ந்து கடந்த 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.