தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Cooku With Comali 5 Which Has Raised Expectations.. Madhapatti Rangaraj Joined Hands With Chef Thamu

Cooku with Comali 5: எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள குக் வித் கோமாளி.. செஃப் தாமுவுடன் கைகோர்த்த மாதம்பட்டி ரங்கராஜ்..!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 19, 2024 06:59 AM IST

Cooku with Comali 5: குக்வித் கோமாளியில் செஃப் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் தாமுவுடன் கைகோர்த்துள்ளார். இது குறித்த ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோ குக் வித் கோமாளி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

குக்வித் கோமாளி சீசன் 5
குக்வித் கோமாளி சீசன் 5 ( Vijay Television / Twitter)

ட்ரெண்டிங் செய்திகள்

சமையலில் மிகவும் கண்டிப்பாக இருக்கும் இவர்கள் அதேசமயத்தில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுடன் அடிக்கும் லூட்டிகள் பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். நிகழ்ச்சியில் குக்குகளை விட கோமாளிகள் சமயத்தில் பார்வையாளர்களின் மனதை கவர்ந்து விடுவர்.

ஏற்கனவே 4 சீசன்களை நிறைவு செய்த இந்த நிகழ்ச்சி தற்போது தன்னுடைய 5 ஆவது சீசனை நோக்கி நகர்கிறது. இந்த நிலையில் இந்த சீசனிலும் ஏற்கனவே நடுவர்களாக இருந்தவர்களே நடுவர்களாக இருப்பார்கள் என்ற தகவல் ஆரம்பத்தில் உலாவிக்கொண்டிருந்தன. இந்த நிலையில் அதனை செஃப் வெங்கடேஷ் பட் மறுத்தார். தான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வில்லை என்று அதிகாரப்பூர்வமான அறிவித்திருந்தார். நிகழ்ச்சியின் இயக்குநரும் திடீரென விலகினார்.

இதற்கிடையில் வெங்கடேஷ் பட் விலகியிருந்தாலும் செஃப் தாமு அந்த நிகழ்ச்சியின் நடுவராக தொடர்வார் என சொல்லப்பட்டது.

இதனால் செஃப் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலான அந்த நிகழ்ச்சியில் புதிய நடுவராக யார் வருவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் நேற்று குக்வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சிக்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த புரமோவில் வழக்கம் போல் செஃப் தாமு நடுவராக பங்கேற்பது உறுதியாகி உள்ளது. அதேசமயம் செஃப் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக மெஹந்தி சர்க்கஸ் பட நாயகனான பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தான் புதிய நடுவராக வர உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

மாதம்பட்டி ரங்க ராஜ் தொழிலதிபர். அதுமட்டும் இல்லாமல் மிகப்பெரிய கேட்டரிங் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல பிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகளுக்கு அவரது குழுவினர் கேட்டரிங் குழு சமையல் செய்து உள்ளது.

தற்போது அவர் குக்வித் கோமாளியில் செஃப் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக தாமுவுடன் கைகோர்த்துள்ளார். இது தொடர்பான ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோ குக் வித் கோமாளி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த ப்ரோமோவில் செஃப் தாமு ' எதிர்பார்ககலைல, நான் வருவேன்னு எதிர்பாக்கலைல' என்ற வசனத்துடன் செப் தாமு ஒரு விமானத்தில் இருந்து இறங்கும் காட்சியும் அவரை தொடர்ந்து அவரது பாட்னர் மாதம் பட்டி ரங்கராஜ் விமானத்தில் இருந்து இறங்கும் காட்சியும் ப்ரோமோ வீடியோவில் உள்ளன. இதைத்தொடர்ந்து அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5 ஆவது சீசனில் இவர்கள் தான் நடுவர்கள் என்பது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் குக்வித் கோமாளி சீசன் 5க்கான குக்குகள் மற்றும் கோமாளிகளுக்கான தேர்வு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் அடுத்த ப்ரோமோ வீடியோவில் அது குறித்த தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. இது குக் வித் கோமாளி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எத்தனையோ நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நடந்தாலும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியை குடும்பத்துடன் அனைவரும் அமர்ந்து பார்த்து ரசிக்கும் வகையில் இருப்பதே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்