Manimegalai: ‘என் கேரியர காலி பண்ணிடுவேன்னு.. உனக்கு அவ்வளவு சீனெல்லாம் கிடையாதும்மா’ - பிரியங்காவை பொளந்த மணிமேகலை!-cooku with comali 5 controversy what really happened in cook with comali manimegalai clarification video here - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Manimegalai: ‘என் கேரியர காலி பண்ணிடுவேன்னு.. உனக்கு அவ்வளவு சீனெல்லாம் கிடையாதும்மா’ - பிரியங்காவை பொளந்த மணிமேகலை!

Manimegalai: ‘என் கேரியர காலி பண்ணிடுவேன்னு.. உனக்கு அவ்வளவு சீனெல்லாம் கிடையாதும்மா’ - பிரியங்காவை பொளந்த மணிமேகலை!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 15, 2024 04:44 PM IST

Manimegalai: இவள் என்னையே இப்படிக் கேட்டு விட்டாள் என்ற ரீதியில், குழுவிடம் அந்தப் பிரச்சினையை அவர் எடுத்துச் சென்றார். அவர் நான் என்ன வேண்டுமானாலும் இந்த ஷோவில் நான் செய்வேன். நீங்கள் பொறுத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்பதை என்னிடம் எதிர்பார்த்தார். அதை என்னால் கொடுக்க முடியவில்லை. - மணிமேகலை!

Manimegalai: ‘என் கேரியர காலி பண்ணிடுவேன்னு.. உனக்கு அவ்வளவு சீனெல்லாம் கிடையாதும்மா’ - பிரியங்காவை பொளந்த மணிமேகலை!
Manimegalai: ‘என் கேரியர காலி பண்ணிடுவேன்னு.. உனக்கு அவ்வளவு சீனெல்லாம் கிடையாதும்மா’ - பிரியங்காவை பொளந்த மணிமேகலை!

15 வருட கால உழைப்பு

அதில் அவர் பேசும் போது, “நான் மீடியா துறைக்குள் நுழைந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த பொழுது, சன் மியூசிக் சேனலுக்குள் தொகுப்பாளினியாக பணியாற்றி, என்னுடைய மீடியா பயணத்தை தொடங்கினேன். அதிலிருந்து இப்போது வரை மீடியாவில் எனக்கு கிடைத்த வேலையை, முழு அர்ப்பணிப்போடு, உண்மையாக செய்து வந்திருக்கிறேன். கடந்த நான்கு வருடங்களாக நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று வந்தேன். கடந்த சீசனின் பாதியிலிருந்து அந்த சீசனை தொகுத்து வழங்க நான் நியமிக்கப்பட்டிருந்தேன். இந்த சீசனில் முழுவதுமாக அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நான் கமிட் செய்யப்பட்டிருந்தேன்.

இவ்வளவு உழைப்பை நாம் போடுகிறோம். அதற்கான புகழ், பணம் உள்ளிட்டவை எனக்கு வருகிறது. ஆனால், இவை அனைத்தையும் கடந்த மிக முக்கியமான ஒன்று இருக்கிறது. அதுதான் என்னுடைய சுயமரியாதை. அதை விடுத்து வேறு எதை நீங்கள் கொடுத்தாலும் நான் அதற்காக இறங்கி வர முடியாது. இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்தே என்னுடைய வேலையில் ஒரு போட்டியாளரின் தலையீடு அதிகமாக இருந்தது. அதை முதல் இரண்டு எபிசோடுகளில் நிகழ்ச்சிக்காக நான் சகித்துக்கொண்டேன். 

மணிமேகலை
மணிமேகலை

ஆனால், அது ஒரு எல்லையை கடக்கும் பொழுது, அதை நிகழ்ச்சி குழுவுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. சம்பந்தப்பட்டவரிடமும் முகத்திற்கு நேராகவே நீங்கள் செய்வது தவறு; என்னுடைய வேலையில் தலையிடாதீர்கள் என்று கூறினேன்.

 

ஆனால், அதற்கு அவர் நான் இத்தனை வருடமாக மீடியா துறையில் இருக்கிறேன். என்னிடமே நீ அப்படி பேசுகிறாயா.. இதை எப்படி நான் அனுமதிக்க முடியும்.. இவள் என்னையே இப்படிக் கேட்டு விட்டாள் என்ற ரீதியில் குழுவிடம் அதனை அவர் எடுத்துச் சென்றார். அவர் என்ன வேண்டுமானாலும் இந்த ஷோவில் செய்வார். அதை நான் பொறுத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்பதை என்னிடம் எதிர்பார்த்தார். அதை என்னால் கொடுக்க முடியவில்லை.

 

மணிமேகலை
மணிமேகலை

ஆனால், நிகழ்ச்சி குழுவில் இருந்து அவருக்கு ஆதரவாக பேசச் சொல்லி என்னிடம் கேட்டார்கள். அதாவது, அவர் நிகழ்ச்சியில் என்ன வேண்டுமென்றாலும் பேசிக்கொள்ளட்டும். நான் அமைதியாக இருப்பேன் என்று அவரிடம் நான் கூற வேண்டும் என்று கேட்டார்கள். அதை எப்படி நான் செய்ய முடியும். அப்படி கேட்டுதான் நான் இந்த நிகழ்ச்சியில் இருக்க வேண்டும் என்றால், அந்த நிகழ்ச்சியே எனக்குத் தேவையில்லை என்று கூறினேன்.

பிரியங்கா
பிரியங்கா (vijay tv )

இதையடுத்து அவர்கள் இதன் மூலம் உங்களது கேரியரே சென்றுவிடும் என்று கூறினார்கள். அதில் எனக்கு நம்பிக்கையே கிடையாது. இங்கு உழைத்து சம்பாதிப்பதே சில சமயங்களில் கையில் நிற்க மறுக்கிறது. இதற்கிடையில் மற்றவர்களுக்கு ஐஸ் வைத்து வரும் பணம் நமக்கு எப்படி கையில் நிற்கும். நீங்கள் பெரிய ஆள் என்று சொல்லும் அளவுக்கு அவர் எனக்கு பெரிய ஆளாக தெரிய மறுக்கிறார். அவர்கள் நன்றாக இருக்கட்டும். அவருக்கு நிறைய ஷோக்கள் கிடைக்கட்டும்” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.