Cook With Comali: விடிவி கணேஷை விட அதிகமாக சம்பளம் வாங்கும் பிரியங்கா.. வெளிவந்த உண்மை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cook With Comali: விடிவி கணேஷை விட அதிகமாக சம்பளம் வாங்கும் பிரியங்கா.. வெளிவந்த உண்மை

Cook With Comali: விடிவி கணேஷை விட அதிகமாக சம்பளம் வாங்கும் பிரியங்கா.. வெளிவந்த உண்மை

Aarthi Balaji HT Tamil
May 08, 2024 07:01 PM IST

Cook With Comali: இந்த முறை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக சுஜிதா, பிரியங்கா, இர்பான், விடிவி கணேஷ், திவ்யா துரைசாமி, ஷாலின் சோயா, அக்ஷய் கமல், ஸ்ரீகாந்த் தேவா, வசந்த், பூஜா வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

விடிவி கணேஷை விட அதிகமாக சம்பளம் வாங்கும் பிரியங்கா.. வெளிவந்த உண்மை
விடிவி கணேஷை விட அதிகமாக சம்பளம் வாங்கும் பிரியங்கா.. வெளிவந்த உண்மை

சமையலில் கண்டிப்பாக இருக்கும் இவர்கள், போட்டியாளர்களுடன் அடிக்கும் லூட்டிகள், நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கின்றன.

குக் வித் கோமாளியின் 5 ஆவது சீசன்

கிட்டத்தட்ட 4 சீசன்களை நிறைவு செய்த இந்த நிகழ்ச்சி, 5 ஆவது சீசனை நோக்கி நகர்ந்தது. இந்த நிலையில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாகவும், புதுதொகுப்பாளினி பிரியங்காஇந்த முறை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக சுஜிதா, பிரியங்கா, இர்பான், விடிவி கணேஷ், திவ்யா துரைசாமி, ஷாலின் சோயா, அக்ஷய் கமல், ஸ்ரீகாந்த் தேவா, வசந்த், பூஜா வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்டு இருப்பவர்கள் ஒரு நாளுக்கு எவ்வளவு சம்பளம் வாங்கி வருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி, 

சம்பள விவரம்

சுஜிதா- 18 ஆயிரம் ரூபாய்

பிரியங்கா- 18 ஆயிரம் ரூபாய்

இர்பான்- 15 ஆயிரம் ரூபாய்

விடிவி கணேஷ்- 15 ஆயிரம் ரூபாய்

திவ்யா துரைசாமி - 12 ஆயிரம் ரூபாய்

ஷாலின் சோயா - 10 ஆயிரம் ரூபாய்

அக்ஷய் கமல் - 10 ஆயிரம் ரூபாய்

ஸ்ரீகாந்த் தேவா - 10 ஆயிரம் ரூபாய்

வசந்த் - 10 ஆயிரம் ரூபாய்

பூஜா வெங்கட்- 9 ஆயிரம் ரூபாய்

போட்டியாளர்களின் சம்பளம் பற்றிய இந்த விவரங்கள் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட நாஞ்சில் விஜயன் , வெளியேறினார்.

”நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விடைபெறுகிறேன். எனக்கும், விஜய் டிவிக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் இதன் பிறகு பாக்ஸ் ஆபிஸ் கம்பெனி தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் நான் வர மாட்டேன். எனக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி” என குறிப்பிட்டு இருந்தார்.

தூள் கிளப்பிய குக் வித் கோமாளி 5 ப்ரோமோ 

பிரபல தமிழ் ஒளிபரப்பாளர் பிரியமான சமையல் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனுக்கான வெளியீட்டு விளம்பரத்துடன் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவர்களில் ஒருவர். குக் வித் கோமாளி 5 ப்ரோமோவுடன் கூடிய ஒரு விமானத்தில் காட்டப்படும் சின்னமான நிகழ்ச்சி லோகோவுடன் தொடங்குகிறது.

இப்படி இருக்கும் நிலையில் கடந்த இரண்டு வாரம் முன்பாக குக் வித் கோமாளியின் 5 ஆவது சீசன் தொடங்கியது. கடந்த நான்கு சீசன்களை விட இந்த முறை காமெடியில் சற்று குறைவு இருக்கிறது. காரணம் கோமாளிகளாக ஏற்கனவே இருந்த பலரும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.