புஷ்ப ராஜை துரத்தும் சர்ச்சைகள்! தெலங்கானா முதலமைச்சர் முதல் ஏசிபி வரை! பாடாய் படுத்தும் ரசிகர்கள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  புஷ்ப ராஜை துரத்தும் சர்ச்சைகள்! தெலங்கானா முதலமைச்சர் முதல் ஏசிபி வரை! பாடாய் படுத்தும் ரசிகர்கள்!

புஷ்ப ராஜை துரத்தும் சர்ச்சைகள்! தெலங்கானா முதலமைச்சர் முதல் ஏசிபி வரை! பாடாய் படுத்தும் ரசிகர்கள்!

Suguna Devi P HT Tamil
Dec 23, 2024 01:12 PM IST

உத்தரப்பிரேதச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் காதலன் புஷ்பா 2 படம் பார்க்க அழைத்து செல்லாததால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புஷ்ப ராஜை துரத்தும் சர்ச்சைகள்! தெலங்கானா முதலமைச்சர் முதல் ஏசிபி வரை! பாடாய் படுத்தும் ரசிகர்கள்!
புஷ்ப ராஜை துரத்தும் சர்ச்சைகள்! தெலங்கானா முதலமைச்சர் முதல் ஏசிபி வரை! பாடாய் படுத்தும் ரசிகர்கள்!

 கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான RRR படமும் சிறந்த பான் இந்திய படமாக இருந்து வசூலில் அள்ளி குவித்தது. தமிழிலும் பல படங்கள் பான் இந்திய படங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. கன்னடத்தில் கேஜிஎப் படம் வெளிவந்து இந்திய சினிமா திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த அளவிற்கு பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் இந்திய அளவில் வெளியாவது தொடர்கதை ஆகி வருகிறது. 

அல்லு அர்ஜூனின் பாக்ஸ் ஆபீஸ் 

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜூனின் பல படங்கள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் பெற்றுள்ளது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூனின் பான் இந்திய படமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புஷ்பா 1 வந்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா 2 திரைப்படம் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் அதிகமான வசூலை பெற்ற வருகிறது. படம் வெளியானதில் இருந்து இன்றுவரை தொடர்ந்து புஷ்பா 2 படத்தை பல சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன.

இப்படம் புஷ்பா 1 படத்தின் தொடர்ச்சியாக புஷ்பராஜ் வளர்ந்து அவரது ஒட்டுமொத்த அதிகாரத்தில் அந்த மாநிலத்தின் முதலமைச்சரையே கட்டுக்குள் வைக்கிறார். இவ்வாறு புஷ்பா 2 வின் திரைக்கதை அமைந்திருந்தது. மேலும் இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டை பெற்று வருகிறது.

புஷ்பா 2 சர்ச்சைகள் 

புஷ்பா 2 ரிலீஸ் ஆன அன்று இப்படத்தின் கதாநாயகனான அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு பிரிமியர் சோ பார்ப்பதற்காக சென்றிருந்தார். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அல்லு அர்ஜுன் அங்கு சென்றதால் அதிகமான கூட்டம் அவரைக் காண கூடியது. இந்த கூட்ட நெரிசலில் படம் பார்க்க வந்த ரேவதி என்ற இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் அப்பெண்ணின் குழந்தையும் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. இந்த நிலையில் அல்லு அர்ஜூனை சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக போலீசார் கைது செய்தனர் கைது செய்த சில மணி நேரங்களிலேயே பல அரசியல் தலையீடுகளின் படி அல்லு அர்ஜுன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார். 

 மேலும் இது குறித்த தெலங்கானா முதலமைச்சர் ரேவதி சட்டமன்றத்திலும் அல்லு அர்ஜனை குற்றம் சாட்டி பேசியிருந்தார். தற்போது தெலுங்கானா ஏசிபி ஹீரோவை உயர்த்தி காட்டும் படங்களை பார்ப்பதை விட்டு இயக்குனர் பா ரஞ்சித்தின் மிடில் கிளாஸ் படங்களை பார்க்க பரிந்துரை செய்துள்ளார். இதுவும் நேரடியாக புஷ்பா 2 படத்தை தாக்குவதாக அமைந்துள்ளது. மேலும் மேலும் புஷ்பா 2 படத்திற்கு அதிக சர்ச்சைகள் எழுந்து வருகிறது. 

இப்பொழுது நேற்று உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் புஷ்பா 2 படம் பார்க்க காதலன் மறுத்ததால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அப்பெண் இப்பொழுது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.