அப்பாவுக்காக கதறி அழுத விஷால்.. அருணுக்கு கிடைத்த ஆறுதல்.. பிக்பாஸில் மாஸாக பேசும் எம்கே!
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினர்களும் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், விஜே விஷாலின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினர்களும் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், விஜே விஷாலின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்பாவைக் கேட்டு அழுத விஷால்
விஷாலின் வீட்டில் இருந்து அவரது அம்மாவும் அக்காவும் வந்தனர். அவர்களை பார்த்ததும் சந்தோஷமடைந்த விஷால், அவர்களை அழைத்துச் சென்றார். பின் அவர்களிடம் பேசும் போது அப்பா வரலையா எனக் கேட்ட போது அவரது அக்கா அது ரொம்ப கஷ்டம் என்றார். அந்த சமயத்தில் அவரின் அம்மா நீ கோவிச்சுட்டு அவர் கிட்ட பேசல. அதுனால அவரும் இங்க வரலன்னு சொன்னதும் விஷால் அழத் தொடங்கி விட்டார்.
அந்த சமயத்தில் பிக்பாஸ் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்ன்னு பாடலை போட விஷால் தன் அப்பா வந்திருப்பதை அறிந்து ஓடி சென்று அவரை வரவேற்றார்.
பின் விஷாலின் குடும்பத்தை பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் வரவேற்றனர்.
சௌந்தர்யா ஃபேன்ஸ்
எங்க வீட்ல, வெளிய எல்லாரும் சௌந்தர்யா பேன்ஸ் தான். எதையும் மனசுல வச்சிக்காம பேசுறதால பிடிக்கும் என விஷாலின் அப்பாவும், சௌந்தர்யா ஒரு குழந்தை மாதிரின்னு விஷாலின் அம்மாவும் கூறினர்.
அருண் விஷால் சண்டை
அருணும் விஷாலும் சண்டை போட்டது குறித்து விஷாலின் அப்பா அருணிடம் கேள்லி கேட்டார். மேலும், நீங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள், நீங்கள் சண்டை போட்டது எனக்கு வருத்தமாக உள்ளது. சில நாட்களில் அருண் வருத்தமா இருந்ததை பார்த்து ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்படி எல்லாம் இருக்காத. நீ நேத்து மிஸ் பண்ணுன நாளை இன்னைக்கு எடுக்க முடியாது. அதுனால மூட் அவுட் ஆக வேண்டாம்.
எங்களால சந்தோஷமா இருக்க முடியல
நாங்க எல்லாம் உங்கள பிரிஞ்சு வீட்டில் இருக்கிறோம். இங்க நீங்க சண்ட போட்டுட்டு இருந்தா எகங்களுக்கு எப்படி இருக்கும். நீங்க சந்தோஷமா சிரிச்சிட்டு இருந்தா தான் நாங்களும் சந்தோஷமா இருக்க முடியும். பல நாள் விஜய் சேதுபதி உங்களை எல்லாம் கேள்வி கேட்கும் போது எனக்கே கோவம் வரும். நீங்க எல்லாம் ஏன் இப்படி இருக்கீங்கன்னு என எதார்த்ததை கூறினார்.
சம்பவம் செய்யும் விஷால் அப்பா
பின் பிக்பாஸ் அனுப்பிய பொருளை விஷால் அவரது அப்பாவிடம் கொடுத்து வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போக சொன்னார். அதற்கு மறுப்பு தெரிவித்த அவரது அப்பா, எல்லாரும் கேம் ஆடி உன்ன மாட்டிவிட பாக்குறாங்க. அதெல்லாம் பண்ணாத. நான் பொருள எடுத்துட்டு போகும் போதே பிக்பாஸ் அங்க இருந்து மைக்ல பேசுவாரு. இது என்னோட பொருள்ன்னு என சொன்னதும் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் குஷியாகி கத்த ஆரம்பித்தனர். அப்போது, தீபக் உள்ள போய் ஒரு மைக் மட்டும் எடுத்து போட்டுட்டு இங்க வந்துடுங்க. நல்லா கேம் விளையாடுறீங்க என கிண்டல் செய்தார்.
சாப்பாடு ஊட்டி விட்ட விஷால் அம்மா
முன்னதாக, விஷாலின் அம்மா அருணுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு ஆறுதலாக பேசினார். அப்போது அருணின் முகம் சோகத்தில் மாறியது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்