சொந்த பொன்னையே போட்டுக் கொடுத்த சவுண்ட் அப்பா.. உன்ன கொஞ்சம் மாத்திக்கோ.. பாசிட்டிவிட்டி பரப்பிய குடும்பம்
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சௌந்தர்யாவின் குடும்பத்தினர் எந்தவித நெகட்டிவிட்டியையும் பரப்பாமல் அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் நடந்து வரும் freeze taskல் போட்டியாளர்களின் ஒவ்வொரு குடும்பத்தினராக பிக்பாஸ் வீட்டிற்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் இன்று சௌந்தர்யாவின் பெற்றோர்கள் வந்துள்ளனர்.
அவர்கள் வரும் போது முட்டை பப்ஸ், கேக் எல்லாம் எடுத்துக் கொண்டு வருவார் என பலமுறை சௌந்தர்யா கூறிய நிலையில், அவர்கள் எதுவும் இல்லாமல் வந்து அனைவரையும் ஏமாற்றி உள்ளனர். பின், பிக்பாஸ் வீட்டில் சௌந்தர்யாவுடன் பேசினர்.
சில விஷயங்கள மாத்திகணும்
அப்போது, "இன்னும் நிறைய விஷயங்கள மாத்திக்கணும். நீ நல்லா விளையாடனும். நீ எல்லாம் குடுத்து வச்ச ஆளு. நீ வீட்ல இருக்க மாதிரி இல்ல. 10 விஷயம் சொன்னா 2 விஷயத்த மட்டும் புரிஞ்சிகிட்டு சண்ட போடுற. அது நல்லது இல்ல. நீ இவ்ளோ நாள் கடந்து வந்துருக்க.
யாருக்காவது தலைவலின்னா கூட அவங்கள விசாரிக்கணும். எதாவது வேணுமான்னு கேக்கணும். உன் பிரண்ட்ஸ்னா நீ பின்னாடி போய் பேசக்கூடாது. அவங்க முகத்துக்கு நேரா சொல்லணும்.
அட்வைஸ் பண்றதுக்கு முன்னாடி யோசி
அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றதுக்கு முன்ன நாம எப்படின்னு பாக்கணும். ஒருத்தவங்க குறை சொல்றாங்கன்னா சும்மா சொல்ல மாட்டாங்க. அத முதல்ல புரிஞ்சிக்க. வீட்ல நல்லா தான் இருந்த. இங்க வந்து கத்துற. உன்கிட்ட கைன்ட்னெஸ் சுத்தமா இல்ல. சேதுபதி சார் எவ்ளோ அழகா டிப்ஸ் குடுக்குறாங்க. அத புரிஞ்சிக்கோ. பிரண்ட்ஸ்ஸ விட்டுக் கொடுக்க சொல்லல. ஆனா, தனியா கேம் விளையாடு.
ஒருத்தவங்க ஒரு விஷயத்த சொல்லிட்டு மறந்துடுவாங்க. ஆனா, நீ அதையே புடிச்சிட்டு பேசிட்டு இருக்காங்க. நல்ல பேர் வாங்கு. உன்கிட்ட யாராவது பேசுனா கொஞ்சம் காதுகுடுத்து கேளு. சாச்சனா கூட போகும் போது உனக்கு அட்வைஸ் பண்ணா. உன்கிட்ட சண்டை போடுற மாதிரி கேரக்கடர் இருக்கு. அதமட்டும் குறைச்சுக்க சொன்னா. அத புரிஞ்சிக்கோ என சௌந்தர்யாவின் அம்மா அப்பா அட்வைஸ் கொடுத்தனர்.
சவுண்டு சமையலை கிண்டல் செய்த அம்மா
சௌந்தர்யாவின் புளி குழம்பை கிண்டல் செய்த அவரது அம்மா, அவ்ளோ தக்காளியும் போட்டு புளியையும் போட்டு சமைச்சிருக்கா. அதை எல்லாம் நீங்க அட்ஜெஸ்ட் பண்ணி சாப்பிட்டுட்டீங்க. வீட்ல சமைக்க சொன்னா வர மாட்டா. ஆனா இங்க செய்யுறா என அவரது அம்மா கூறினார்.
என் பொன்னுகிட்ட முரண்பாடு
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நபர்களிடம் ஏதாவது முரண்பாடு இருந்தால் தெரிவிக்கலாம் எனக் கூறினார். அப்போது சௌந்தர்யாவின் அப்பா நஞ்சுண்டன், தன் மகள் மேல் தான் முரண்பாடு இருக்கு. அவள் எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு சில விஷயத்த மாத்திக்கணும் என அவரது அப்பா கூறினார்.
பாசிட்டிவிட்டி மட்டும் பேசிய குடும்பம்
சில விஷயங்கள் மாத்திட்டா லைஃப் நல்லா இருக்கும். குறைன்னு சொன்னா எல்லார்கிட்டயும் தான் இருக்கும். ஒரு உழைப்பின் அருமை, குடும்பத்தின் அருமை எல்லாம் யாருக்கும் தெரியாது. அது எல்லாம் தனியா இருக்கும் போது தான் தெரியும்" எனக் கூறி உள்ளனர்.
இதுவரை வந்த போட்டியாளர்களின் குடும்பத்திலேயே நெகட்டிவிட்டியை புரொமோட் செய்யாமல் அட்வைஸ் செய்தது சௌந்தர்யாவின் குடும்பத்தினர் தான் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
டாபிக்ஸ்