'மறக்குமா நெஞ்சம்..' ஏ.ஆர். ரஹ்மான் கான்செர்ட் பஞ்சாயத்து.. 50 ஆயிரம் கட்ட ஆர்டர் போட்ட கோர்ட்..
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு, 50 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

'மறக்குமா நெஞ்சம்..' ஏ.ஆர். ரஹ்மான் கான்செர்ட் பஞ்சாயத்து.. 50 ஆயிரம் கட்ட ஆர்டர் போட்ட கோர்ட்..
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி, 'மறக்குமா நெஞ்சம்' எனும் பெயரில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டது. பின், இந்த நிகழ்ச்சி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டடது. இதைத் தொடர்ந்து 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி அதே ஆண்டில் செப்டம்பர் 10 ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது.
நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு
அந்த சமயத்தில், நிகழ்ச்சி நடந்த போது கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக நிகழ்ச்சியை கண்டு ரசிக்க முடியாததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், டிக்கெட் கட்டணத்தை வட்டியுடன் திருப்பித் தர கோரியும் சென்னையை சேர்ந்த அர்ஜுன் என்பவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.