Ganja Karuppu: ரூ. 3 லட்சம் வாடகை பாக்கி.. கொலை மிரட்டல்.. கஞ்சா கருப்பு மீது வீட்டு உரிமையாளர் புகார் - முழு பின்னணி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ganja Karuppu: ரூ. 3 லட்சம் வாடகை பாக்கி.. கொலை மிரட்டல்.. கஞ்சா கருப்பு மீது வீட்டு உரிமையாளர் புகார் - முழு பின்னணி

Ganja Karuppu: ரூ. 3 லட்சம் வாடகை பாக்கி.. கொலை மிரட்டல்.. கஞ்சா கருப்பு மீது வீட்டு உரிமையாளர் புகார் - முழு பின்னணி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 25, 2025 02:56 PM IST

Complaint Against Ganja Karuppu: ரூ. 3 லட்சம் வாடை பாக்கி வைத்திருக்கும் கஞ்சா கருப்பு தனது வீட்டை லாட்ஜ் போல் மாற்றியிருப்பதாகவும், இதை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வீட்டு உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ரூ. 3 லட்சம் வாடகை பாக்கி.. கொலை மிரட்டல்.. கஞ்சா கருப்பு மீது வீட்டு உரிமையாளர் புகார் - முழு பின்னணி
ரூ. 3 லட்சம் வாடகை பாக்கி.. கொலை மிரட்டல்.. கஞ்சா கருப்பு மீது வீட்டு உரிமையாளர் புகார் - முழு பின்னணி

இதைத்தொடர்ந்து தற்போது கஞ்சா கருப்பு மீது மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் கஞ்சா கருப்பு வாடகைக்கு இருந்து வரும் வீட்டின் உரிமையாளர் ரமேஷ் அளித்த புகாரில், "மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில், எனக்கு சொந்தமான வீடு உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல், நடிகர் கஞ்சா கருப்பு என்னுடைய வீட்டில் வசித்து வருகிறார். சென்னையில் ஷுட்டிங் நடக்கும் போது, இந்த வீட்டில் வந்து தங்குவேன் என சொல்லி தான் வாடகைக்கு வந்தார். முதல் இரண்டு வருடங்கள் ஒழுங்காக வாடகை கொடுத்தார்.

ரூ. 3 லட்சம் வாடகை பாக்கி

பல மாதங்களாக அவர் வீட்டுக்கு வாடகை கொடுப்பதை நிறுத்தி விட்டார். இதுவரை 3 லட்சம் வாடகை பணம் அவர் கொடுக்க வேண்டி உள்ளது. என்னுடைய வீட்டை கஞ்சா கருப்பு மாற்றி விட்டார். இதுபற்றி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்" என குறிப்பிட்டுள்ளார்.

போலீஸிடம் புகார் அளித்த பிறகு, நடிகர் கஞ்சா கருப்பு வாடகை இருந்த வீட்டின் உரிமையாளர் ராமேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எனது சொந்த தேவைக்காக வீட்டை காலி செய்யுமாறு கூறினேன். காலி செய்கிறேன் என சொன்னவர், செய்யாமலேயே இருந்து வந்துள்ளார். அதன் பின்னர் செப்டம்பர் மாதம் வந்து பார்த்தபோது, வேறு ஒருவர் இருந்தார். அவரிடம் கேட்டபோது நான் ஆயிரம் ரூபாய்க்கு இருப்பதாக கூறினார். விசாரித்து பார்க்கையில் வீட்டை உள் வாடைகைக்கு விட்டிருப்பது தெரியவந்தது.

கஞ்சா கருப்புக்கு நோட்டீஸ்

அப்போது வீட்டில் மதுபானம் மற்றும் பீர் பாட்டில்களும் இருந்தன. ஒரு லாட்ஜ் போல் எனது வீடு மாறியிருந்தன. இதன் பின்னர் எனது தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அவரது மனைவி என்னை தொடர்பு கொண்டு கார்த்திகை மாதத்துக்குள் வீட்டை காலி செய்து வாடகை பாக்கியை செட்டி செய்துவிடுவதாக கூறினார். அதன் ஆடியோ பதிவும் உள்ளது.

கொலை மிரட்டல்

இந்த சம்பவத்துக்கு பின்னர் வீட்டில் கஞ்சா கருப்பு உறவினர் ஒருவர் வந்து வீட்டில் இருக்கும் பொருள்களை விற்று வாடகையை கழித்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் வீட்டில் இருக்கும் பொருள்கள் ரூ. 15 ஆயிரம் வரை தான் இருக்கும். இதற்கு ரூ. 3 லட்சத்தை கழிக்க சொல்கிறார். கார்த்திகைக்கு பின்னர் தற்போது ஜனவரி வரை எந்த தொடர்பும் இல்லை.

கடந்த செவ்வாக்கிழமை போன் செய்து வீட்டை காலி செய்வது பற்றியும், வாடகை பாக்கி பற்றியும் கேட்டபோது, நான் வந்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். எனவே காவல்துறையினர் என உடைமையை மீட்டு தர வேண்டும். இந்த வீட்டுக்காக கடன் கட்டிக்கொண்டு தான் இருக்கிறேன். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு நானும் எனது குடும்பத்தினரும் ஆளாகி உள்ளோம்." என்றார்.

முன்னதாக, நடிகர் கஞ்சா கருப்பு கொலை மிரட்டல் விடுத்த நாளிலேயே ஆன்லைன் மூலம் காவல்துறையில் புகார் அளித்ததாக ரமேஷ் தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.