ஆன்மிக பயணத்தில் யோகி பாபு.. உலகின் மிக உயரமான முருகன் கோயில், அண்ணாமலையார் கோயிலில் அடுத்தடுத்து சாமி தரிசனம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஆன்மிக பயணத்தில் யோகி பாபு.. உலகின் மிக உயரமான முருகன் கோயில், அண்ணாமலையார் கோயிலில் அடுத்தடுத்து சாமி தரிசனம்

ஆன்மிக பயணத்தில் யோகி பாபு.. உலகின் மிக உயரமான முருகன் கோயில், அண்ணாமலையார் கோயிலில் அடுத்தடுத்து சாமி தரிசனம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 25, 2024 12:52 PM IST

பிஸியான ஷுட்டிங் பரபரப்புக்கு மத்தியில் உலகின் மிக உயரமான முருகன் கோயில், அண்ணாமலையார் கோயிலில் அடுத்தடுத்து சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் யோகி பாபு. யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் இரண்டு படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன.

ஆன்மிக பயணத்தில் யோகி பாபு.. உலகின் மிக உயரமான முருகன் கோயில், அண்ணாமலையார் கோயிலில் அடுத்தடுத்து சாமி தரிசனம்
ஆன்மிக பயணத்தில் யோகி பாபு.. உலகின் மிக உயரமான முருகன் கோயில், அண்ணாமலையார் கோயிலில் அடுத்தடுத்து சாமி தரிசனம்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்து யோகி பாபு, நிஜத்தில் பக்தி பரவசம் மிக்கவராக இருந்து வருகிறார். சினிமா படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், முக்கிய நாள்களில் பிரபல கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் சேலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் உயரமான முருகன் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் என அடுத்தடுத்து சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார்.

யோகி பாபு சாமி தரிசனம்

சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள முத்துமலை முருகன் கோயிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் மேற்கொண்டார். உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் சிலையில் யோகிபாபு மனம் உருகி வேண்டினார்.

அத்துடன் அங்குள்ள மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்ததோடு, முருகனுக்கு பன்னீர் அபிஷேகமும் செய்தார். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி தானும் உணவு அருந்தினார்.

இதன் பின்னர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்தார். அப்போது சாமி தரிசனத்துக்காக வரிசையில் நின்ற ரசகர்களுக்கு கைகொடுத்து, புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

யோகி பாபு புதிய படம்

யோகி பாபு அமுத பாரதி இயக்கத்தில் உருவாகி வரும் சன்னிதானம் P.O என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். படத்தில் சித்தாரா, பிரமோத் ஷெட்டி, 'மூணாறு' ரமேஷ், கஜராஜ், உள்பட பலரும் நடிக்கிறார்கள். சபரிமலைக்கு பயணிக்கும் ஐயப்ப பக்தர்கள் செல்லும் வழியில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளே படத்தின் கதை என கூறப்படுகிறது.

அதேபோல் சமீபத்தில் மாரடைப்பால் மறைந்த இயக்குநர் சங்கர் தயாள் இயக்கத்தில் குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற படத்திலும் கதையின் நாயகனாக யோகிபாபு நடித்துள்ளார். கார்த்தி நடித்த சகுனி படத்தின் இயக்குநர்தான் சங்கர் தயாள். இதையடுத்து சகுனி படம் போல் யோகிபாபு நடித்துள்ள குழந்தைகள் முன்னேற்ற கழகம் படமும் அரசியல் நய்யாண்டி படமாக உருவாகியுள்ளது. இதேபோல் ஜெய், பிரகயா நகரா, சத்யராஜ் நடித்திருக்கும் பேபி அண்ட் பேபி என்ற படத்திலும் யோகி பாபு காமெடியானாக நடித்துள்ளது. இதன் டீஸர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

இந்த ஆண்டில் யோகி பாபி நடிப்பில் மட்டும் இதுவரை 18 படங்கள் வெளியாகியுள்ளது. முதல் முறையாக யோகி பாபு நேரடியாக மலையாளத்தில் நடித்திருக்கும் குருவாயூர் அம்பலநடையில் படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

யோகி பாபு சொத்து மதிப்பு

யோகி பாபுவுக்கு சொந்தமாக சென்னையில் பிரமாண்டமான வீடு ஒன்று உள்ளது. அதே போல் சொந்த ஊரான ஆரணியில் பண்ணை வீடு மற்றும் ஏராளமான இடங்களை வாங்கி வைத்துள்ளாராம். ஊர் மக்களுக்காக கோயில் ஒன்றையும் தன்னுடைய இடத்திலேயே கட்டி கொடுத்துள்ள அவர், அஜித்தை போல் பலருக்கு வெளியே சொல்லாமல் பல்வேறு உதவிகளை செய்து வருபவராக உள்ளார்.

பிஎம்டபிள்யூ, ஆடி என சொகுசு கார்களை வைத்திருக்கும் யோகி பாபு, ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ரூ. 10 லட்சம் வரை சம்பளமாக வாங்குகிறாராம். கதையின் நாயகனாக நடிக்க ரூ. 3 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது. யோகி பாபுவின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடிக்கு மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.