தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Comedy Actor Santhanam Birthday Special Article

HBD Santhanam: டைமின்ங்கில் ரைமிங்.. கவுண்டர் கிங் நடிகர் சந்தானம் வாழ்க்கையை மாற்றிய சின்னத்திரை!

Aarthi Balaji HT Tamil
Jan 21, 2024 05:30 AM IST

Actor Santhanam Birthday: கவுண்டர் கிங் நடிகர் சந்தானம் இன்று ( ஜன 21) தனது 44 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

சந்தானம்
சந்தானம்

ட்ரெண்டிங் செய்திகள்

தனது வாழ்க்கையை, வின் டிவியில் ஒளிப்பரப்பான ‘டீக்கடை பெஞ்ச்’, சன் டிவியில் ஒளிப்பரப்பான அண்ணாமலை சீரியல், விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சகலை vs ரகளை ஆகியவற்றில் பங்கேற்று நடிப்பு உலகத்திற்குள் நுழைந்தார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி கவனம் பெற்ற படங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட்வற்றை ஸ்பூஃவ் (பகடி செய்தல்) செய்து வெளியிட்டது. அதில் கலந்து கொண்டு நடித்த சந்தானத்தின் கவுண்டர்கள் நன்றாக வொர்க் அவுட் ஆனது. அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமும் ஆனார் சந்தானம்

இவரது திறமையை பார்த்த நடிகர் சிலம்பரசன் தான் இயக்கி நடித்த மன்மதன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை கொடுத்தார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட சந்தானம் அதில் தனது திறமையை நன்றாக வெளிப்படுத்தினார். அதன் பலன், தொடர்ந்து விஜய் நடித்த சச்சின், தனுஷ் நடித்த பொலலாதவன் உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் நடித்த சந்தானம் அறை எண் 305 -ல் கடவுள் என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்து உச்ச நட்சத்திர காமெடியனாகவும் உயர்ந்தார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் மாறினார். அதன் பின்னர் சோலோ ஹீரோதான் என்ற கட்டத்திற்கு வந்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, , சக்க போடு போடு ராஜா , ஏ 1 , டிக்கிலோனா, குளு குளு உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் பெரும்பான்மையான படங்களுக்கு அவரே தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது; கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஏஜெண்ட் கண்ணாயிரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது;

கடந்த 2004 ஆம் ஆண்டு உஷா என்பவரை திருமணம் செய்த சந்தானத்திற்கு 3 குழந்தைகள் உள்ளன. சந்தானத்திற்கு கலைமாமணி, சைமா, ஃபிலிம் ஃபேர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 

நகைச்சுவை பாத்திரங்கள் என்று வரும்போது, ​​திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மத்தியில் சந்தானம் பிரபலமான தேர்வாக இருக்கிறார். சில முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அவரது பிறந்தநாளில், அவரது பிரபலமான சில படங்களைப் பார்ப்போம்.

சிவா மனசுல சக்தி

எம் ராஜேஷ் இயக்குநராக அறிமுகமான படம், சிவா மனசுல சக்தி. இந்தப் படம் எஸ்எம்எஸ் என்றும் அழைக்கப்படுகிறது. சந்தானம் விவேக் என்ற முன்னாள் சிறந்த நண்பராகக் காணப்பட்டார்.

பாஸ் என்கிற பாஸ்கரன் 

ஆர்யா, நயன்தாரா மற்றும் சந்தானம் ஆகியோர் கூட்டணி போட்ட படம், பாஸ் என்கிற பாஸ்கரன். சந்தானம் மீண்டும் முன்னணி நடிகரின் சிறந்த நண்பரான நல்ல தம்பியாகக் காணப்பட்டார். 

ஒரு கல் ஒரு கண்ணாடி 

சந்தானம் மற்றும் இயக்குநர் எம் ராஜேஷ் மூன்றாவது முறையாக இணைந்த படம், ஒரு கல் ஒரு கண்ணாடி. நடிகர் உதயநிதி ஸ்டாலினின் சிறந்த நண்பராக காணப்பட்டார்.

பிறந்தநாள் வாழ்த்துகள்

இன்று ( ஜனவரி 21) தனது  44 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் காமெடி கிங், டைமின்ங்கில் ரைமிங் அடிக்கும் நடிகர் சந்தானத்திற்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.