தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Comedy Actor Kpy Kothandam Interview About Youtubers

Kothandam: ‘சோஷியல் மீடியாவில் வந்தா ஆர்டிஸ்டா?’ கோதண்டம் கொந்தளிப்பு!

Stalin Navaneethakrishnan HT Tamil
Mar 19, 2023 06:15 AM IST

கோபி-சுதாகர் முதன் முதலில் ஆடிசன் வந்து ரிஜக்ட் ஆகும் போது, அவங்களோட ஃபெர்பாமன்ஸ் அன்று நன்றாக இல்லை.

கோதண்டம் மற்றும் கோபி-சுதாகர்
கோதண்டம் மற்றும் கோபி-சுதாகர்

ட்ரெண்டிங் செய்திகள்

‘‘டிவி, மூவி, ஈவெண்ட், யூடியூப் இந்த நான்கு ஜானரிலும் நாங்கள் பணியாற்றியிருக்கிறோம். இந்த நான்கும் வேற என்பது தெரியாமல் தான், நிறைய பேர் யூடியூப்பில் பண்ணிட்டோம், டிவியில் ஜெயித்துவிடுவோம் என்று வந்து தோற்கிறார்கள். 

டிவியில் பண்ணவங்க, நாமும் ஒரு யூடியூப் ஆரம்பிப்போம என்று பண்ணுவாங்க, ஆனால் சக்சஸ் ஆகாது. டிவிக்கும்-யூடியூப்புக்கும் உள்ள மாற்றத்தை சொல்லி புரிய வைக்க முடியாது. ரியாக்‌ஷனிலேயே இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கும்.

சோஷியல் மீடியாவை பொறுத்தவரை, எது பண்ணாலும் போடு, காபி குடித்தாலும் போடு, வீட்டில் சண்டை போட்டாலும் போடு என்று டிஜிட்டல் மாறிவிட்டது. அது ப்ரபெஷனல் தொழில் கிடையாது. பொழுதுபோக்காக செய்யுறது தான் டிஜிட்டல். அதை ப்ரபெஷனலா பண்ணறவங்க ரொம்ப குறைவு. மற்றவர்கள் வியூவ்ஸ்க்காக தான் செய்கிறார்கள். அதையே அவர்கள் செய்து விட்டு, ‘நானும் ஆர்ட்டிஸ்ட்’ தான் என்று நினைக்கிறார்கள். பச்சை மிளகாய் கட் பண்ணா கூட 10 லட்சம் பேர் பார்க்குறானே!

ஸ்டேஜ்ல நீங்க காமெடி பண்ணும் போது, வாய்ஸ் எல்லாருக்கும் போய் சேர்ந்திரும். ரியாக்‌ஷன்ஸ் பின்னாடி இருங்கவங்களுக்கு தெரியாது. அப்போது, அதுக்கு ஏற்ற மாதிரிய நாம ரியாக்‌ஷன் பண்ணனும். ஸ்டேஜ் பெர்பாமன்ஸ் பண்ணும் போது நிறைய பேர் அங்கே வைத்துள்ள ஸ்கிரீனில் தான் நிகழ்ச்சியை பார்ப்பார்கள். 

ஒருத்தன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி ஃபெயில் ஆயிடுறான், மறுபடி அதே தேர்வு எழுதி அவன் பாஸ் ஆகிடுறான். இப்போ, முதலில் அவனை ஃபெயில் ஆக்குனது தப்புனு சொல்வீங்களா? அப்படி தான், கோபி-சுதாகர் முதன் முதலில் ஆடிசன் வந்து ரிஜக்ட் ஆகும் போது, அவங்களோட ஃபெர்பாமன்ஸ் அன்று நன்றாக இல்லை. இது என்னுடைய பார்வை. மற்றவர்கள் பார்வை வேறு விதமாக இருக்கும். 

ஆடிசன் தேர்வுக்கு காலையிலிருந்து இரவு வரை நடுவர்கள் அமர்ந்திருப்பார்கள். வரும் பெரும்பாலானோர் ஒரே மாதிரியான மிமிக்ரி பண்ணி அவர்களை வெறுப்பேற்றுவார்கள். அந்த டென்ஷனில் சில நேரம், அது போன்ற போட்டியாளர்களை ரிஜக்ட் செய்ய வாய்ப்பிருக்கிறது. 

ஒருமுறை ஷோவில் நாங்கள் நன்றாக செய்தோம். ஆனால், எங்களுக்கு குறைவான மதிப்பெண் வழங்கப்பட்டது. நான் கவலைப்பட்டேன். அப்போ முல்லை தான் சொன்னான், ‘இது அவங்களோட பார்வையில் வந்த மதிப்பெண், மக்கள் பார்வை வேறு மாதிரி இருக்கும்’ என்று. அது தான் உண்மை,’’
என்று அந்த பேட்டியில் கோதண்டம் பேசியுள்ளார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்