Imman Annachi: நெடுஞ்சாலையில் குறுக்கே வந்த மாடு.. கார் மோதி விபத்து - குடும்பத்தினருடன் எஸ்கேப் ஆன இமான் அண்ணாச்சி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Imman Annachi: நெடுஞ்சாலையில் குறுக்கே வந்த மாடு.. கார் மோதி விபத்து - குடும்பத்தினருடன் எஸ்கேப் ஆன இமான் அண்ணாச்சி

Imman Annachi: நெடுஞ்சாலையில் குறுக்கே வந்த மாடு.. கார் மோதி விபத்து - குடும்பத்தினருடன் எஸ்கேப் ஆன இமான் அண்ணாச்சி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 28, 2025 01:50 PM IST

Imman Annachi: மதுரை அருகே நெடுஞ்சாலையில் குறுக்க வந்த மாடு மீது நடிகர் இமான் அண்ணாச்சி பயணித்த கார் மோதி விபத்துக்குள்ளானது. சிறு காயங்களுடன் இமான் அண்ணாச்சி தனது குடும்பத்துடன் தப்பித்துள்ளார்.

நெடுஞ்சாலையில் குறுக்கே வந்த மாடு.. கார் மோதி விபத்து - குடும்பத்தினருடன் எஸ்கேப் ஆன இமான் அண்ணாச்சி
நெடுஞ்சாலையில் குறுக்கே வந்த மாடு.. கார் மோதி விபத்து - குடும்பத்தினருடன் எஸ்கேப் ஆன இமான் அண்ணாச்சி

மதுரை அருகே விபத்து

நடிகர் இமான் அண்ணாச்சி தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு காரில் சென்றுள்ளார். இதையடுத்து இவர் பயணித்த கார் மதுரை அருகே புறவழிச்சாலையில் சென்றபோது, சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் குறுக்க வந்துள்ளது. அப்போது கார் சில மாடுகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், பலத்த சேதமும் அடைந்துள்ளது.

இந்த விபத்தில் காரின் உள்ளே இருந்த இமான் அண்ணாச்சி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதன் பின்னர் அவர் பத்திரமாக சொந்த ஊர் போய் சேர்ந்துள்ளார்.

தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்த தகவலை இமான் அண்ணாச்சி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அத்துடன் விபத்து குறித்து இமான் அண்ணாச்சி கூறும்போது, "புறவழிச் சாலையில் இது போன்ற விபத்துகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

இமான் அண்ணாச்சி சினிமா பயணம்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்தவரான இமான் அண்ணாச்சி பார்க்க விஜயகாந்த் போல் இருப்பதாக நெருக்கமானவர்கள் கூறியதால் நடிகராக வேண்டும் என சென்னைக்கு வந்துள்ளார்.

காய்கறி விற்றவாறு சினிமாவில் வாய்ப்பு தேடிய இவருக்கு சிறு சிறு வேடங்களில் நடித்தார். விக்ரமன் இயக்கத்தில் 2006இல் வெளியான சென்னை காதல் படத்தில் சிறு வேடத்தில் நடித்து கவனம் பெற்ற இமான் அண்ணாச்சி பின்னர், அப்போது சன்டிவியில் டாப் டிஆர்பியில் இருந்த சீரியலான கோலங்கள் தொடரில் அன்வர் என்ற கதாரபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார்.

தொடர்ந்து சீரியல்களிலும், சினிமாக்களில் காமெடியான வேடங்களிலும் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகரானார். மக்கள் டிவியில் ஒளிபர்ப்பான கொஞ்சம் சேட்டை கொஞ்சம் அரட்டை நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், சன்டிவியில் ஒளிபரப்பான குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் நகைச்சுவையாக பேசி லைக்ஸ்களை அள்ளினார். தொடர்ந்து சொல்லுங்கன்னே சொல்லுங்க, செல்ல குட்டீஸ் போன்ற பல டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 70 நாள்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த பின் வெளியேற்றப்பட்டார். நடிகர் வையாபுரி, நடிகர் தாடி பாலாஜி, இயக்குநர் சேரன் ஆகியோருக்கு அடுத்தபடியாக பிக் பாஸ் வீட்டில் அதிக நாள்கள் இருந்த 40 பிளஸ் வயதை கடந்த போட்டியாளராக இருந்துள்ளார்.

தமிழில் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இமான் அண்ணாச்சி, வெப்சீரிஸ்களிலும் நடித்துள்ளார். சோலோ காமெடியனாக இல்லாவிட்டாலும் தனது நெல்லை ஸ்லாங் நகைச்சுவையால் ரசிகர்களை சிரிக்க வைக்க கூடிய நடிகராக இருந்து வருகிறார்.

முன்னாள் முதலைமைச்சர் மறைந்த கருணாநிதி தலைமையில் கடந்த 2016இல் திமுகவில் இணைந்தார் இமான் அண்ணாச்சி. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.