Actor Vijay Ganesh: ‘மேடை தான் சோறு போடுது’ -விஜய் கணேஷ் உருக்கம்!
Comedy Actor Vijay Ganesh: ‘நிறைய கலைநிகழ்ச்சிகளுக்கு சென்று கொண்டிருக்கிறேன். அது தான் இப்போது என்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது’ -விஜய் கணேஷ்
வடிவேலு உடன் பல காமெடி படங்களில் நடித்த விஜய் கணேஷ், பார்த்ததும் அறிந்து கொள்ளும் நடிகர். வடிவேலுவே படத்தில் நடிக்காமல் இருந்த சமயத்தில் எப்படி இருந்தார்? என்ன ஆனார்? என்பதை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இதோ அந்த பேட்டி:
‘‘இயற்கை தான் நமக்கு என்றும் கை கொடுக்கும். நடிகனாக மட்டும் இருந்தால் போதாதது, விவசாயமும் செய்ய வேண்டும். வீட்டில் தோட்டம் வைத்திருக்கிறேன். பாம்பு வரும் போகும். அதை கண்டு நாம் பயப்படக் கூடாது.
இருக்கிற இடத்தில் ஏதாவது விவசாயம் பண்ணனும். எனக்கு இயற்கை விவசாயம் தான் பிடிச்சிருக்கு. வீட்டில் கிணறு வைத்திருக்கிறேன். கிணறு நிறைய தண்ணீர் இருக்கிறது. வாழை மரம் வைத்திருக்கிறேன்.
நான் கிராமத்தில் பிறந்தவன் என்பதால், கிராம வாழ்க்கை எனக்கு ரொம்ப பிடிக்கும். வல்லக்கோட்டை முருகன், சிறுவாபுரி முருகனும், குன்றத்தூர் முருகனும் தான் எனக்குனு ஒரு சின்ன இடத்தை கொடுத்தாங்க.
வீடு இல்லாதவங்க, சிறுவாபுரி முருகனை போய் வேண்டுங்க. கட்டாயம் வீடு வாங்குவீங்க. குன்றத்தூர் முருகன் அப்படியே தத்ரூபமா இருக்கார். அவரிடம் வேண்டினேன். 2019ல் வீடு வாங்கினேன். 2 ஆண்டுகளாக சொந்த வீட்டில் வசித்து வருகிறேன். முருகன் அருளால் நல்லபடியாக இருக்கேன். நான் வரும் போது இதெல்லாம் புதரா தான் இருந்துச்சு. இப்போ எல்லாத்தையும் மாற்றிவிட்டேன்.
புதுக்கோட்டை மணல்மேல்குடி தான் என் ஊரு. கிராமத்து ஆளு என்பதால், விவசாயம் தெரியும். நானே இங்கே எல்லா புதரையும் மாற்றி தோட்டபயிராக்கிட்டேன். சினிமாவுக்காக சென்னை வந்து 40 வருசமாச்சு. டாமி, டைகர்னு இரண்டு நாய் வளர்க்கிறேன். அற்புதமான நன்றி உள்ள ஜீவன்கள் அது.
நிறைய கலைநிகழ்ச்சிகளுக்கு சென்று கொண்டிருக்கிறேன். அது தான் இப்போது என்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. சினிமாவில் கேப் விழுந்த சமயத்தில் கலை நிகழ்ச்சிகள் தான் கை கொடுத்தது வருகிறது.
கலை நிகழ்ச்சிகளில் நிறைய விருதுகள் கிடைக்கிறது. மேடையை மறக்க முடியாது. வடிவேலு சாரோடு நடித்த எல்லா காட்சிகளும் இன்றும் ரசிக்கும் சீன்கள். மதுர படத்தில் தேஜா ஸ்ரீ நடந்து வரும் போது, அவரை பார்த்துக்கொண்டே வடிவேலு சாரிடம் மோதிவிடுவேன். அதில் பீட்சா என்கிற வசனம் வரும். எனக்கு பீட்சா பற்றி எதுவும் தெரியாது.
வடிவேலு சாரிடம் பீட்சா பற்றி கேட்டேன். அவருக்கும் தெரியவில்லை. ‘டேய் விடுடா… ஏதோ ஒன்னு, வா நடிப்போம்’ என கூறிவிட்டார். அது தான் பீட்சா வந்த சமயம். அதற்கு பின்னர் தான், வடிவேலு சாரும், நானும் பீட்சா என்னவென்று தெரிந்து கொண்டோம்’’
என்று விஜய் கணேஷ் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.