புதிய அவதாரம் எடுக்கும் ஈசன்.. பார்வதிக்கு நேரும் துன்பத்தை சிவன் எப்படிப் போக்கினார்? சிவசக்தி திருவிளையாடல் இந்த வாரம்
உலகத்தைக் காக்கும் ஈசன் புதிய அவதாரம் எடுத்து, பார்வதிக்கு நேரும் துன்பத்தை சிவன் எப்படி போக்கினார் என்பது சிவசக்தி திருவிளையாடல் வரும் வாரம் எபிசோடில் இடம்பெறவுள்ளது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிகப் பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது. சிவசக்தி திருவிளையாடல் ஆன்மிகப் புராண தொடர் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் வெற்றித் தொடராக ஜூன் மாதம் முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது. சிவசக்தி திருவிளையாடல் வரும் வாரம் நடக்கபோவது என்ன என்பதை பார்க்கலாம்
சங்கசூரன் வதம் முடிந்ததும் அசுர குல அரசனாகப் பொறுப்பேற்கும் சும்பன், தானே சிவனாகும் ஆசை கொள்கிறான். தனது தம்பியை கொன்ற இந்திரனையும் தேவர்களையும் பழிவாங்கத் துடிக்கிறான் சும்பன். அதற்கு முதலில் மகாதேவர் சிவனை வலுவிழக்கச் செய்ய, அசுரன் அபஸ்மரனைப் பாதாளச் சிறையில் இருந்து விடுவிக்கிறான்.
நினைவை இழக்கும் பார்வதி
அபஸ்மரன், மும்மூர்த்திகளைத் தவிர எல்லோரையும் வசியம் செய்து, அவன் சொல்படி கேட்கவைக்கும் வல்லமை கொண்டவன். அவன், பார்வதி தேவியின் ஞாபகங்களை அனைத்தையும் வசியம் செய்து, பார்வதி தான் ஒரு லோகமாதா என்கிற நினைவை அழிக்கிறான். அவளது மணவாழ்வு பற்றிய அத்தனை நினைவுகளையும் அழிக்கிறான்.