தியா யார்? நிஷாந்தி யார்? முடிச்சுகள் அவிழும் நேரம் - மோகினி ஆட்டம் ஆரம்பம் இந்த வார எபிசோட் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தியா யார்? நிஷாந்தி யார்? முடிச்சுகள் அவிழும் நேரம் - மோகினி ஆட்டம் ஆரம்பம் இந்த வார எபிசோட் அப்டேட்

தியா யார்? நிஷாந்தி யார்? முடிச்சுகள் அவிழும் நேரம் - மோகினி ஆட்டம் ஆரம்பம் இந்த வார எபிசோட் அப்டேட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 17, 2024 03:54 PM IST

அக்னிசூத்ராவால் உயிரை இழக்க தியா யார், நிஷாந்தி யார் என்று முடிச்சுகள் அவிழும் விதமாக மோகினி ஆட்டம் ஆரம்பம் இந்த வார எபிசோட் அமையவுள்ளது. இது பற்றி விவராகமாக பார்க்கலாம்

தியா யார்? நிஷாந்தி யார்? முடிச்சுகள் அவிழும் நேரம் - மோகினி ஆட்டம் ஆரம்பம் இந்த வார எபிசோட் அப்டேட்
தியா யார்? நிஷாந்தி யார்? முடிச்சுகள் அவிழும் நேரம் - மோகினி ஆட்டம் ஆரம்பம் இந்த வார எபிசோட் அப்டேட்

மரத்தில் கட்டப்பட்ட நிஷாந்தி

தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தியா, நிஷாந்தியின் மூக்குத்தியை திருப்பி வழங்குவதுபோல் நடிக்கிறாள். ஆனால், நிஷாந்தியை புனித ஆலமரத்துக்கு கட்ட முயலும் முயற்சியில் தியா தோல்வியடைகிறாள்.

காரணம் தனது கணவனாகிய மோகனுடன் இருந்து நிஷாந்தியை மரத்தில் கட்ட வேண்டும் என்று அறிந்துகொள்கிறாள். சூழலும் அவளுக்கு ஆதரவாய் அமைகிறது. மோகனும், தியாவும் ஒன்றிணைந்து நிஷாந்தியை சுமங்கலி தாலி கொண்டு மரத்தில் காட்டுகின்றனர்

நிஷாந்தி மரத்துடன் கட்டப்பட்டபோது நெருப்பின் வேதனை தாங்க முடியாமல் உயிர் மாய்கிறார். அதே சமயம், தியாவும் தனது உயிருக்காக போராடி உயிர் மாய்கிறார். ஏனென்றால் இருவரையும் இணைத்த அக்னிசூத்ரா தியாவின் உயிருக்கும் ஆபத்தை உண்டாக்கியது.

கடந்த காலத்தை அறியும் திஷா

இருவரும் இறந்த பின்னர், பாதாள உலகத்தில் சந்திக்கும் போது, தியா, நிஷாந்தியின் கடந்த காலத்தை அறிகிறாள். தியா தனது கடந்த கால வாழ்க்கையில் ஷலகா என்ற பெண்ணாக வாழ்ந்ததும், சுயநலத்துக்காக நிஷாந்தியின் மரணத்தை உத்தரவிட்டதை அறிந்துகொள்கிறாள்.

விஷ்வான், மோகனிடம் அக்னிசூத்ராவைப் பற்றி விளக்கி, நிஷாந்தியை காப்பாற்றினால், தியாவும் உயிருடன் மீண்டு வருவாள் என ஆலோசனை சொல்கிறான். அடுத்து மோகன் செய்ய போவது என்ன, தியா யார், நிஷாந்த் யார் அவர்கள் பற்றிய முடிச்சுகள் அவிழ்வதற்கான நேரம் இது என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக இந்த வார எபிசோட் அமையவுள்ளது.

'மோகினி ஆட்டம் ஆரம்பம்' தொடரில் தொடர்ச்சியாக புதிய திருப்பங்களை தெரிந்துகொள்ள, கலர்ஸ் தமிழில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு தவறாமல் பாருங்கள்.

மோகினி ஆட்டம் ஆரம்பம் சீரியல்

காதல் அனைத்தையும் வெல்லும். ஆனால் ஒரு சூனியக்காரியின் சூழ்ச்சியை வெல்லுமா? என்கிற கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக புதிய தொடரான “மோகினி ஆட்டம் ஆரம்பம்” என கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் திகில் தொடரின் கதைக்களம் அமைந்துள்ளது. இந்த சீரியல் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

காதல் - அமானுஷ்யம் கலந்த கதை

இந்த புதிய கற்பனைக் கதை நிஷாந்தி (நியா ஷர்மா) என்ற தீய மந்திரக்காரியின் சூழ்ச்சிகளுக்கு எதிராக, தமக்கு நெருக்கமானோரை காக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டுள்ளது. நிஷாந்தி, "சோலா ஷ்ரிங்கார்" எனப்படும் 16 அதிசய ஆபரணங்களைத் தேடி, நிரந்தர அழகையும் இளமையையும் பெற முயற்சிக்கிறாள்.

16 ஆபரணங்களை அடைய, அழகான ஒவ்வொரு பெண்களின் கணவரையும் யாகத்துக்கு பலி கொடுக்கிறாள். அதனால் அவளது தீய சக்திகள் மேலும் வலுபெறுகின்றன.

இப்போது, அவள் தனது 16வது குறியாக மோகனைக் (செய்ன் இபாத் கான்) இலக்காகக்கொண்டு, இறுதி ஆபரணத்தை பெற திட்டமிடுகிறாள். ஆனால் நிஷாந்திக்கு எதிராக தியா (டெப்சந்திரிமா சிங் ராய்) எனும் துணிச்சலான பெண் மோகனை காப்பாற்ற முன்வருகிறாள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.