தோற்றத்தில் தியாவை போல் மற்றொரு மோகினி உருவம்.. யார் இந்த ஷலாகா? புதிய திருப்பத்துடன் மோகினி ஆட்டம் ஆரம்பம்
தோற்றத்தில் தியாவை போல் மற்றொரு மோகினி உருவமாக ஷலாகா தோன்றுகிறாள். யார் இந்த ஷலாகா என்கிற பின்னணி சொல்லும் விதமாக புதிய திருப்பத்துடன் கூடிய காட்சிகள் மோகினி ஆட்டம் ஆரம்பம் சீரியலில் இடம்பெறவுள்ளது.

தமிழில் ஒளிபரப்பாகும் டிவி சீரியல்களில் திகில் கலந்த த்ரில்லர் தொடராக மோகினி ஆட்டம் ஆரம்பம் இருந்து வருகிறது. இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 8:30 மணிக்கு கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலின் இந்த வாரத்துக்கான எபிசோடில் அசுரனிடம் சிக்கிக் கொண்டிருக்கும் மோகினியை காப்பாற்ற மோகன் செய்யப்போகும் விஷயங்கள் காட்சியாக இடம்பிடித்துள்ளது.
இதையடுத்து தொடரில் மற்றொரு திருப்பமாக தோற்றத்தில் தியாவை போல் உருவம் கொண்ட மற்றொரு மோகினியாக ஷலாகா உருவெடுக்கும் காட்சிகள் இடம்பெறவுள்ளன.
நிஷாந்தியை மீட்கும் மோகன்
மந்திர சாம்ராஜ்யத்தில், நிஷாந்தி மலர் புதர்களால் பிணைக்கப்பட்டு உதவிக்காக காத்திருக்கையில், மஹா அசுரனின் சதியையும் எதிர்கொண்டு, மோகன் நிஷாந்தியை மரணத்தின் விளிம்பில் இருந்து மீட்கிறான். பின்னர், ஒரு மாய மனிதர் வெளிப்பட்டு, மந்திர சாம்ராஜ்யத்திலிருந்து தப்பிப்பது இருவருக்கும் சாத்தியமில்லை என்று எச்சரிக்கிறது.
