மகா அசுரன் vs மோகன்: மோகினியை காப்பாற்றும் முயற்சியில் நடக்கப்போவது என்ன? மோகினி ஆட்டம் ஆரம்பம் இந்த வார எபிசோட்
மகா அசுரன் vs மோகன் இடையே மோதல் நடக்க, மோகினியை காப்பாற்றும் முயற்சியில் நடக்கப்போவது என்ன? என்கிற பரபரப்பு மிகுந்த காட்சிகளுடன் மோகினி ஆட்டம் ஆரம்பம் இந்த வார எபிசோட் காட்சிகள் இடம்பெறவுள்ளன.

தமிழில் ஒளிபரப்பாகும் டிவி சீரியல்களில் திகில் கலந்த த்ரில்லர் தொடராக மோகினி ஆட்டம் ஆரம்பம் இருந்து வருகிறது. இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 8:30 மணிக்கு கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலின் இந்த வாரத்துக்கான எபிசோட் அப்டேட் என்ன என்பதை பார்க்கலாம்
நிஷாந்தியை மந்திர சாம்ராஜியத்துக்கு அனுப்பும் மகா அசுரன்
மகா அசுரனின் சூனியம் கலந்த ஆப்பிளை சாப்பிட்டதால், மோகனின் உடல் சூடேறி உயிருக்கு போராடும் நிலையில் உள்ளது. இதைப் பார்த்து தாங்க முடியாத நிஷாந்தி, தனது உயிரைப் பொருட்படுத்தாமல் மந்திர சக்தியால் மோகனை குணப்படுத்த உதவுகிறாள்.
ஆனால், நிஷாந்தியின் உதவியை அறிந்த மோகன், எரிச்சலுடன் அவளது செயல்களை ஒப்புக்கொள்ள மறுக்கிறான். கோவத்தில் மகா அசுரனை எதிர்கொள்கிறாள் நிஷாந்தி. ஆனால் மகா அசுரன், அவளை மந்திர சாம்ராஜ்யத்துக்கு அனுப்பி விடுகிறார். விஷ்வன், நிஷாந்தியை மீட்க மோகனின் உதவியை நாடுகிறான். இதற்கு மோகன் வேறு வழியின்றி, அவனின் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான்.
