Shiva Shakthi Thiruvilaiyadal: தூக்கு மேடையிலிருந்து சிவன் தப்புவாறா? இந்த வார சிவசக்தி திருவிளையாடல் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shiva Shakthi Thiruvilaiyadal: தூக்கு மேடையிலிருந்து சிவன் தப்புவாறா? இந்த வார சிவசக்தி திருவிளையாடல் அப்டேட்

Shiva Shakthi Thiruvilaiyadal: தூக்கு மேடையிலிருந்து சிவன் தப்புவாறா? இந்த வார சிவசக்தி திருவிளையாடல் அப்டேட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 12, 2025 06:58 PM IST

Shiva Shakthi Thiruvilaiyadal: தூக்கு மேடையிலிருந்து சிவன் தப்புவாறா? சனியின் பிடியில் இருந்து பார்வதியின் காதல் சிவனை எப்படி தப்ப வைக்கப் போகிறது? அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்புடன் இந்த வார சிவசக்தி திருவிளையாடல் கதை நகர்கிறது

தூக்கு மேடையிலிருந்து சிவன் தப்புவாறா? இந்த வார சிவசக்தி திருவிளையாடல் அப்டேட்
தூக்கு மேடையிலிருந்து சிவன் தப்புவாறா? இந்த வார சிவசக்தி திருவிளையாடல் அப்டேட்

சனியை வெல்லும் காதல்

சனியின் சூழ்ச்சியால், கார்த்திகேயன் சிவனை விட்டு பிரிந்து, பிரகஸ்பதி ஆசிரமம் செல்கிறார். இதனால் கடும் கோபம் கொள்ளும் சிவன், இந்த சிக்கல்களுக்கெல்லாம் காரணமான சனியை தண்டிக்க கிளம்புகிறார்.

சனி, சிவனிடம் இருந்து தப்பிக்க ஓடுகிறார். சனி ஓடிச் சென்று நிற்கும் இடம் சனி கிரகம். சனியின் பலம் ஓங்கி நிற்கிறது. மேலும் சிவன் சனிக்கு கொடுத்த வரத்தின் படி சனியின் பார்வை சிவனின் மீது பதிகிறது. சனியின் பிடியில் சிவனும் சிக்குகிறார். இதைக்கண்டு அனைத்து கடவுளர்களும் திகைத்துப் போகிறார்கள். அசுரலோகத்தில் அத்தனை அசுரர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

சனியின் பிடியிலிருந்து சிவன் துன்பப்படுவதை பார்த்து கோபம் கொள்கிறார் பார்வதி. சனியின் பிடியிலிருந்து சிவனை காக்க, சனியை வதம் செய்ய முடிவு செய்கிறார் பார்வதி.

சிவன் மீதான பார்வையை குறைக்கும் சனி

சனியை வதம் செய்தால் உலகின் சமநிலை குலையும் என்பதால், நாராயணரும், பிரம்ம தேவரும் அவரை தடுக்கிறார்கள். ஆதி சக்தியிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள, சனிதேவனுக்கு அறிவுரை கூறுகிறார்கள். சிவன் மீதான சனியின் பார்வையை, ஏழரை வருடங்கலிலிருந்து, ஏழரை நாழிகையாக குறைக்க வேண்டும் என அறிவுறுதுகிறார்கள். அவர்களின் அறிவுரைப்படி, சனிதேவரும் தன் பார்வையை ஏழரை நாழிகையாக குறைத்துக் கொள்கிறார்.

குறைத்துக்கொண்ட ஏழரை நாழிகையிலும், தன் பிடியில் சிவன் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு, அசுரர்களுக்கு, சாகாவரம் கொடுக்க கட்டளை இடுகிறார் சனிதேவன். இதனால் தேவர்கள் கலக்கம் அடைகிறர்கள். சிவனை தடுக்க நினைத்து, நாராயனரும் தோள்வியடைகிறார். இதைக் கண்ட பார்வதி, தன் காதல் மூலம் சிவனை தடுக்கப் பார்க்கிறார். தனக்கு கனிகள் பறித்து தரும்படி, சிவனிடம் கேட்டு, அவரை திசை திருப்புகிறார். இதனால் கோபம் அடையும் சனி, சிவன் கனிகளை பறித்துவரும் சிவனிடம், உடனடியாக அசுரர்களின் விருப்பதை நிறைவேற்றும்படி சொல்கிறார்.

நாராயணர் செய்யும் சூழ்ச்சி

சனியின் கட்டளையை ஏற்கும் சிவன், அசுரலோகம் சென்று, அசுரர்களுக்கு அமிர்தத்தை வழங்குகிறார். அமிர்தத்தை பருகிய அசுரர்கள் மயங்கி விழுகிறார்கள். அப்பொழுதுதான், சிவன் ரூபத்தில் வந்து நாராயணர் சூழ்ச்சி செய்திருப்பது தெரியவருகிறது. தன் முயற்சி தோல்வியடைந்தைக் கண்டு சனிதேவன் கோவம் அடைகிறார்.

இன்னும் நான்கரை நாழிகை மிச்சம் இருப்பதால், சனி தன் அடுத்த சூழ்ச்சியை செய்கிறார். இதனால் கவலை கொள்ளும் தேவர்கள் சனியின் சூழ்ச்சியிலிருந்து சிவனை காக்க நினைக்கிறார்கள். அதற்காக மிச்சம் இருக்கும் நான்கரை நாழிகை முடியும் வரை, கங்கையின் மத்திய பகுதியில் மறைந்திருக்கும் படி சிவனிடம் வேண்டுகிறார்கள்.

அதனைக்கேட்ட சிவன், மாறுவேடம் தரித்து , கங்கைக்கரைக்கு செல்கிறார். அவர் நதியில் இறங்கப்போகும் நேரம், அங்கு மாறுவேடத்தில் வரும் சனி தேவன், சிவனுக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார். சனியின் சூழ்ச்சியால் தூக்குமேடைவரை செல்கிறார் சிவன்.

தூக்கு மேடையிலிருந்து சிவன் தப்புவாறா? சனியின் பிடியில் இருந்து பார்வதியின் காதல் சிவனை எப்படி தப்ப வைக்கப் போகிறது? அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்புடன் இந்த வாரக் கதை நகர்கிறது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.