இதுக்காகத் தான் நான் இத்தனை பாடுபடுறேன்.. இப்படி இருந்தா தான் எல்லாம் நல்லா இருக்கும்.. ரகசியத்தை பகிர்ந்த மணிரத்னம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இதுக்காகத் தான் நான் இத்தனை பாடுபடுறேன்.. இப்படி இருந்தா தான் எல்லாம் நல்லா இருக்கும்.. ரகசியத்தை பகிர்ந்த மணிரத்னம்

இதுக்காகத் தான் நான் இத்தனை பாடுபடுறேன்.. இப்படி இருந்தா தான் எல்லாம் நல்லா இருக்கும்.. ரகசியத்தை பகிர்ந்த மணிரத்னம்

Malavica Natarajan HT Tamil
Nov 23, 2024 05:31 PM IST

இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் இடையிலான இடைவெளி எவ்வளவு நெருக்கமாக இருக்கிறதோ, அவ்வளவு சிறப்பாக இந்திய சினிமா இருக்கும் என இயக்குநர் மணிரத்னம் கூறியுள்ளார்.

இதுக்காகத் தான் நான் இத்தனை பாடுபடுறேன்.. இப்படி இருந்தா தான் எல்லாம் நல்லா இருக்கும்.. ரகசியத்தை பகிர்ந்த மணிரத்னம்
இதுக்காகத் தான் நான் இத்தனை பாடுபடுறேன்.. இப்படி இருந்தா தான் எல்லாம் நல்லா இருக்கும்.. ரகசியத்தை பகிர்ந்த மணிரத்னம்

இந்நிலையில், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய இயக்குநர் மணிரத்னம், இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

இலக்கிய மொழிப்பெயர்ப்பு

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் தமிழ் நாவலான "பொன்னியின் செல்வன்" நாவலை இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்பட கதையாக மாற்றிய பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம், சிறந்த இலக்கியப் படைப்புகளை திரைக்கு மொழிபெயர்ப்பதன் மூலம் இந்திய சினிமா பயனடைய முடியும் என்று கூறுகிறார்.

இலக்கியத்தை வாசித்து அதனை திரைப்படங்களாக மாற்றுவதுதான் அருமையான தீர்வு. இலக்கியத்தின் அடிப்படையில் தமிழ் மிகவும் வளமான மொழி. வழக்கமாக, நீங்கள் எடுக்கும் படங்களை விட மிக உயர்ந்த படத்திற்கான கதையை எழுத விரும்புகிறீர்கள் என்றால், இலக்கியத்தை நாம் தேர்வு செய்யலாம். இது ஒரு இயக்குனராக உங்கள் வேலையை எளிதாக்கும்.

இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் இடையிலான இடைவெளி எவ்வளவு நெருக்கமாக இருக்கிறதோ, அவ்வளவு சிறப்பாக இந்திய சினிமா இருக்கும்" என்று கூறியுள்ளார்.

திரைப்படத்தை போல் உள்ள நாவல்

திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் உரையாடிய மணிரத்னம், விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் ஆரம்ப நாட்களை அடிப்படையாகக் கொண்ட சல்மான் ருஷ்டியின் "விக்டரி சிட்டி" நாவலை தற்போது படித்து வருவதாகக் கூறினார்.

மேலும் இந்த நாவலைப் பற்றி பேசிய அவர், இந்த நாவல் பிரமிக்க வைக்கிறது, இது ஒரு படம் பார்க்கும் அனுபவத்தை தருகிறது. அவர் எழுதும் விதம், புனைவு, உண்மை மற்றும் வரலாறு என அனைத்தின் கலவையும் மிகவும் அற்புதமாக உள்ளது என்றார்.

புராணங்களில் இருந்து கதை

ஏழு முறை தேசிய விருது பெற்ற மணிரத்னம், ரஜினிகாந்த் நடித்த தளபதி படமாக இருந்தாலும் சரி, அல்லது விக்ரம் நடித்த ராவணன் படமாக இருந்தாலும் சரி, அதன் கதைகள் புராணங்களில் இருந்து எடுக்கப்பட்டது. எனக்கு புராணங்களிலிருந்து எப்போதும் புது உத்வேகத்தை தருகிறது எனக் கூறினார்.

புராணங்கள் இன்றைய வாழ்க்கை முறைக்கும் பொருத்தமானவை. இன்றும் நாம் நம் வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டு அதை விளக்க முடியும், இன்றைய நாளிலும் நேரத்திலும் நமது பிரச்சினைகளையும் அதன் தீர்வுகளையும் புராணத்திலிருந்து பெற முடியும். இதன் காரணமாகவே புராணங்கள் என்னை தொடர்ந்து கவர்ந்திழுக்கின்றன. இங்கே ஒரு கண்ணாடி பிம்பத்தை என்னால் கண்டுபிடிக்க முடிந்தால் கூட, அது என்னை ஒரு திரைப்படமாக உருவாக்க தூண்டுகிறது என்றும் அவர் சிலாகித்தார்.

நடனத்திலும் கதை உண்டு

அவர் காலா க்ஷேத்ராவில் மாணவராக இருந்த சமயத்தை நினவு கூர்ந்தார். அப்போது ஹால்டலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அங்குள்ள மாணவர்கள் நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதில கலந்து கொள்ள வேண்டும். அப்போது கதகளி போன்ற நடனங்கள் இடம்பெற்றன. இந்த ஆட்டத்தில், அவை அனைத்தும் சாதாரணமாக வில்லன்களாக சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரங்களாக எனக்கு தெரிந்தன என்றார்.

ராவணனாக இருந்தாலும் சரி, கர்ணனாக இருந்தாலும் சரி, தென்னிந்திய கலை வடிவத்தில் எப்போதும் ஒரு சிறப்பு இருக்கும். அதை வேறு கோணத்தில் பார்க்கிறேன்.

தேவைப்படும் இடங்களில் மட்டும் விஎஃப்எக்ஸ்

இன்றைய சினிமாவில் விஷுவல் எஃபெக்ட்ஸின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. தூசி, அழுக்கு மற்றும் வியர்வை என நடிகர்களின் உண்மையான உழைப்பை பயன்படுத்தி தான் "பொன்னியின் செல்வன்" படம் எடுக்கப்பட்டது. ஆனால், சிலர் சாதாரண படங்களிலே வி.எஃப்.எக்ஸ் செய்கிறார்கள்.

அதில் அவர்களுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் கிடைக்கிறது என்றால் மகிழ்ச்சி தான். உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது என சொல்லலாம். ஆனால், ஒரு படத்தை உண்மையான தளத்திலும், உண்மையான உழைப்பிலும் எடுக்கும் போது கூடுதல் மகிழ்ச்சி கிடைக்கும் என்றார்.

எனக்கு வெப் சீரிஸ் செட் ஆகாது

அப்போது, மணிரத்னத்திடம் "பொன்னியின் செல்வன்" ஒரு வெப் சீரிஸாக எடுக்கலாம் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றியதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்தப் படத்தை எப்போதும் ஒரு முழு நீளத் திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் தான் இருந்தது. பெரும்பாலான வெப் சீரிஸ் இயல்பானதாக இல்லாமல் இருக்கிறது. அதனால், நான் அதில் எனது படைப்பை கொண்டுவர நினைத்ததில்லை என்றார்.

இதற்காகத் தான் பாடுபடுகிறேன்

மேலும் பேசிய அவர், ரோஜா, பம்பாய், உயிரே, நாயகன், காற்று வெளியிடை, குரு போன்ற படங்களைப் போல, சினிமா என்பது அந்தந்த காலகட்டத்தினை மையப்படுத்தி மக்களால் விரும்பப்பட வேண்டும். அதற்காகத் தான் நான் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கேன் எனவும் கூறினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.