சினிமாவிற்கு தேவை அங்கிகாரம்.. அதிக டிக்கெட் விலை அல்ல.. அரசுக்கு ஆதரவளித்த தில் ராஜூ
எங்களுக்கு சினிமாவை உலக அரங்கில் கொண்டு செல்ல அங்கிகாரம் தான் தேவை. அதை தவிர அரசாங்கத்திடமிருந்து டிக்கெட் விலை ஏற்றத்தையும், கூடுதல் காட்சிகள் ஒளிபரப்ப அனுமதியும் கேட்கவில்லை என தெலங்கு திரைப்பட வளர்ச்சி கழகத் தலைவர் தில் ராஜூ கூறியுள்ளார்.

சினிமாவிற்கு தேவை அங்கிகாரம்.. அதிக டிக்கெட் விலை அல்ல.. அரசுக்கு ஆதரவளித்த தில் ராஜூ
அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 படத்தின் பிரீமியர் காட்சியை பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார். பின் ஜாமீனில் விடுதலையும் செய்யப்பட்டார்.
இந்த சம்பத்தின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இனி தெலுங்கானாவில் திரைப்படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியே கிடையாது என முதல்வர் ரேவந்த் ரெட்டி திட்டவட்டமாக கூறினார்.
நாடெங்கிலும் மரியாதை
இந்நிலையில், திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான தில் ராஜூ தலைமையிலான திரைப்படத்துறையினர் இன்று முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்தனர்.
