HBD Thalaivasal Vijay: தமிழ் சினிமாவின் தூண்.. புகுந்து விளையாடும் தலைவாசல் விஜய்.. சூப்பர் ஹீரோவுக்கு பிறந்தநாள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Thalaivasal Vijay: தமிழ் சினிமாவின் தூண்.. புகுந்து விளையாடும் தலைவாசல் விஜய்.. சூப்பர் ஹீரோவுக்கு பிறந்தநாள்

HBD Thalaivasal Vijay: தமிழ் சினிமாவின் தூண்.. புகுந்து விளையாடும் தலைவாசல் விஜய்.. சூப்பர் ஹீரோவுக்கு பிறந்தநாள்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Aug 04, 2024 06:00 AM IST

HBD Thalaivasal Vijay: தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த கலைஞனாக விளங்கக்கூடிய தலைவாசல் விஜய் இன்று தனது 62 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு மேலும் வெற்றிகள் கிட்ட இந்த பிறந்தநாளில் வாழ்த்துவோம்.

தமிழ் சினிமாவின் தூண்.. புகுந்து விளையாடும் தலைவாசல் விஜய்.. சூப்பர் ஹீரோவுக்கு பிறந்தநாள்
தமிழ் சினிமாவின் தூண்.. புகுந்து விளையாடும் தலைவாசல் விஜய்.. சூப்பர் ஹீரோவுக்கு பிறந்தநாள்

இவர் ஆக்ஸ்ட் 4ம் தேதி தினது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று பிறந்த நாள்காணும் அவர் அனைத்து நலன்களும் பெற்று வாழ வாழ்த்துவதுடன், அவர் குறித்து சில செய்திகளை ஹெச்.டி தமிழ் பகிர்ந்துகொள்கிறது.

இவர் திரைப்பட, சீரியல், சீரிஸ் நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். இவர் 1992ம் ஆண்டு தலைவாசல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் சிறந்து துணை கதாப்பாத்திர மற்றும் குணச்சித்திர நடிகர்.

இவருக்கு 2010ம் ஆண்டு மலையாளப்படமான யுகபுருஷன் திருப்பு முனையாக அமைந்தது. அந்தப்படத்தில் இவரது கதாபாத்திரமான நாராயண குரு நல்ல பெயரை இவருக்கு வாங்கிக்கொடுத்தது. இவர் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக சினிமா துறையில் உள்ளார். மேலும் 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவர் தேவர் மகன் படத்தில் கமலின் சகோதரனாக நடித்திருப்பார். அந்தப்படத்தில் மது அடிடை கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். மகாநதி படத்தில் தெருவோர கலைஞராக கலக்கியிருப்பார். மகளிர் மட்டும் படத்தில் ரோகினியின் கணவராக இவர் நடித்திருப்பார்.

அந்தப்படத்திலும் ஒரு குடிகார கதாபாத்திரம்தான். காதல் கோட்டை படத்தில் அஜித்தின் நண்பராக ஆட்டோ ஓட்டுனர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கிட்டத்தட்ட அஜித் – தேவயானியை ஒன்று சேர்த்து வைக்க உதவுவார்.

ஒரு திரைப்படத்தில் கதாநாயகி மற்றும் கதாநாயகன் இருவரும் முக்கியம்தான் இருப்பினும் அவர்களை மிகுதி படுத்தி காட்டுவது துணை கதாபாத்திரம் தான். ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு படத்தின் நாயகன் மட்டும் முக்கியம் கிடையாது அந்த திரைப்படத்தில் நடிக்கும் அனைத்து துணை கதாபாத்திரங்களும் செம்மையாக தங்களது வேலைகளை செய்தால் மட்டுமே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்.

கதாநாயகன் நாயகி போலவே எத்தனையோ துணை கதாபாத்திரங்கள் இன்று வரை சிறப்பான தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற ஒரு சில துணை கதாபாத்திரங்கள் இன்று வரை தவிர்க்க முடியாத கதாபாத்திரங்களாக இருந்து வருகின்றனர்.

அதில் ஒருவர் தான் தலைவாசல் விஜய். வலிமையான துணை கதாபாத்திரமாக எந்த திரைப்படத்திலும் தன்னை வெளிப்படுத்தி காட்டுவார். அந்த திரைப்படத்திற்கு தனது முக்கிய பங்கு கொடுத்து வெற்றிக்கு அடுத்த கட்டத்தை அந்த திரைப்படத்திற்கு கொண்டு செல்லும் கதாபாத்திரமாக தலைவாசல் விஜய் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய ஒரு நடிகர். பல மொழிகளில் பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் அளிக்க முடியாத கதாபாத்திரமாக தலைவாசல் விஜய் வாழ்ந்து வருகிறார் என்று கூறினால் அது மிகை ஆகாது.

காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினியின் அண்ணன் கதாபாத்திரம், அமர்க்களம் படத்தில் காதலியின் சகோதரன் என பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருப்பார். இவருக்கு யுகபுருஷன் படத்துக்கு, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் கிடைத்தது.

தற்போது வரை இவர் திரைத்துறையில் இருந்துவருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த கலைஞனாக விளங்கக்கூடிய தலைவாசல் விஜய் இன்று தனது 62 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு மேலும் வெற்றிகள் கிட்ட இந்த பிறந்தநாளில் வாழ்த்துவோம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.