Jani Master: உண்மை தெரியவரும் விரைவில் வரும்.. மீண்டும் வைரலாகும் ஜானி மாஸ்டர்..
Jani Master: பாலியல் வழக்கில் சிக்கிய நடன இயக்குநர் ஜானி மாஸ்டரின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஜானி மாஸ்டர் பற்றிய பேச்சு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது.

Jani Master: நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் வழக்கு தற்போது மீண்டும் டோலிவுட்டில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜானி மாஸ்டரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகவும், இது ஒரு சிறந்த தீர்ப்பு என்றும் நடிகையும் தொகுப்பாளினியுமான ஜான்சி தன் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
ஜான்சியின் இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து இதற்கு ஜானி மாஸ்டரும் பதிலடி கொடுத்துள்ளார். அதில், தங்களின் சொந்த லாபத்திற்காக சிலர் நீதிமன்ற உத்தரவுகளை மாற்றி தவறான பிரச்சாரம் செய்கிறார்கள் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
ஜாமீனில் ஜானி மாஸ்டர்
முன்னதாக பாலியல் தொல்லை குற்றச்சாட்டில் ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டார். நீண்ட நாட்கள் சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அந்த வழக்கில் ஜானி மாஸ்டர் தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜான்சியின் பதிவு
பிலிம் சேம்பரின் உத்தரவை எதிர்த்து நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பிலிம் சேம்பர் வெற்றி பெற்றது. ஜானியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வேலை செய்யும் இடத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக இந்த தீர்ப்பு மீண்டும் ஒருமுறை நிரூபித்தது என்று ஜான்சி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். நீதிக்காக போராட உதவிய பிலிம் சேம்பருக்கு நன்றி எனவும் தெரிவித்திருந்தார்.
ஜானி மாஸ்டரின் பதிலடி
நடிகை ஜான்சியின் பதிவுக்கு ஜானி மாஸ்டர் பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதவில் அவர் ஜான்சியின் பெயரை குறிப்பிடவில்லை. இருந்தாலும், தங்களின் சொந்த லாபத்திற்காக நீதிமன்ற உத்தரவுகளைப் பற்றி தவறான பிரச்சாரம் செய்பவர்களைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது என்று ஜானி மாஸ்டர் தனது சோசியல் மீடியா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நடனக் கலைஞர்கள் சங்க தேர்தல்
எனக்கு முன்னறிவிப்பு இல்லாமல் நடந்த நடனக் கலைஞர்கள் சங்கத் தலைவர் தேர்தல் நடத்துவது குறித்து நான் தொடர்ந்த வழக்கில் வந்த தீர்ப்பை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டுள்ளனர். அத்துடன் அந்த தீர்ப்பை வேறு வழக்குடன் இணைத்து பதிவுகள் வெளியிட்டும் வருகின்றனர்
உண்மை முகம் தெரியும்
நீங்கள் சொல்வதையெல்லாம் மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறீர்களோ என்னவோ, ஆனால் உண்மையான தீர்ப்பு விவரங்கள் வெளியான நாளில் உங்கள் உண்மையான முகம், இந்த தவறான பிரச்சாரத்திற்கான காரணம் அனைவருக்கும் தெரியவரும்.
நீதி வெல்லும்
அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. நீதியே வெல்லும், உண்மை அனைவருக்கும் தெரியவரும் என்று ஜானி மாஸ்டர் ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட் வைரலாகி வருகிறது. இந்த சர்ச்சையில் ஜான்சியின் பதிவும், ஜானி மாஸ்டரின் பதிவையும் பலரும் ஷேர் செய்து அவர்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்