பதவியை பறித்த சங்கம்.. பஞ்ச் வசனம் பேசிய ஜானி மாஸ்டர்.. புதிய சிக்கலில் திரையுலகம்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பதவியை பறித்த சங்கம்.. பஞ்ச் வசனம் பேசிய ஜானி மாஸ்டர்.. புதிய சிக்கலில் திரையுலகம்..

பதவியை பறித்த சங்கம்.. பஞ்ச் வசனம் பேசிய ஜானி மாஸ்டர்.. புதிய சிக்கலில் திரையுலகம்..

Malavica Natarajan HT Tamil
Dec 10, 2024 09:15 AM IST

தெலுங்கு நடன இயக்குநர் மற்றும் கலைஞர் சங்கத்திலிருந்து தன்னை எவராலும் நீக்க முடியாது என ஜானி மாஸ்டர் தன்னை சுற்றி வரும் வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார்.

பதவியை பறித்த சங்கம்.. பஞ்ச் வசனம் பேசிய ஜானி மாஸ்டர்.. புதிய சிக்கலில் திரையுலகம்..
பதவியை பறித்த சங்கம்.. பஞ்ச் வசனம் பேசிய ஜானி மாஸ்டர்.. புதிய சிக்கலில் திரையுலகம்..

பஞ்ச் வசனம் பேசிய ஜானி மாஸ்டர்

இந்நிலையில், என்னை யாராலும் நீக்க முடியாது என்று ஜானி மாஸ்டர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட செய்திக்கு பதிலளித்தார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், நேற்று காலை முதல் ஒரு போலி செய்தி பரவி வருகிறது. நான் நடனக் கலைஞர் சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. நான் இன்னும் நடனக் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். எனது அட்டையை யாரும் அகற்ற முடியாது.

யாருக்கும் உரிமை இல்லை

திறமைசாலிகளுக்கு வேலை கிடைக்காமல் இருக்க முடியாது. எனது பதவிக்காலம் இன்னும் இருந்தாலும், அதிகாரப்பூர்வமற்ற முறையிலும், நெறிமுறையற்ற முறையிலும் தேர்தல்களை நடத்தி தங்களுக்கான முடிவுகளையும் பதவிகளையும் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. சட்டப்படி போராடுவேன். ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளேன். இந்த பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்" என்றார்.

புதிய தலைவர் நியமனம்

இதுஒருபுறம் இருக்க நடனக் கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் புதிய தலைவராக ஜோசப் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு இடங்களில் இருந்தும் தகவல்கள் கிடைக்கப் பெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த சங்கத்தின் தேர்தலில் ஜோசப் பிரகாஷ் வெற்றி பெற்றார்.

ஜோசப் பிரகாஷ் ஏற்கனவே நடனக் கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக நான்கு முறை பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜோசப் பிரகாஷ் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, தலைவர் பதவியில் இருந்தும் ஜானி மாஸ்டர் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜானி மாஸ்டர் மீது புகார்

கேரள திரைத்துறையில் ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியான பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து திரைத்துறையிலும் அதிகளவிலான பாலியல் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அந்த வண்ணம் தமிழில் ஹலமத்தி ஹபிபோ, ரஞ்சிதமே போன்ற ஹிட் அடித்த பல பாடல்களுக்கு காரணமாக அமைந்தவர் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர். இவரிடம் உதவி நடன இயக்குநராக பணியாற்றிய பெண்ணை சுமார் 16 வயதிலிருந்து பாலியல் ரீதியாக இவர் துன்புறுத்தி வந்துள்ளார் என புகார் எழுந்தது.

ஜானி மாஸ்டருக்கு தடை

இந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஜானி மாஸ்டரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்ட சம்பவமும் நடந்துள்ளது.

இது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தற்போது பேசு பொருளாக அமைந்த நிலையில், தெலுங்கு திரையுலகில் நடன இயக்குநராக ஜானி மாஸ்டர் பணியாற்ற பிலிம் சேம்பர் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.