Thangalaan Box Office: குதிரை வேகத்தில் வசூலை அள்ளும் தங்கலான்.. 4 நாட்களில் இத்தனை கோடியா?
Thangalaan Box Office: ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸான தங்கலான் திரைப்படம் உலகளவில் ரூ.68 கோடி வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.

குதிரை வேகத்தில் வசூலை அள்ளும் தங்கலான்.. 4 நாட்களில் இத்தனை கோடியா?
Thangalaan Box Office: தங்கலான் திரைப்படம் வெளியாகி நான்க்ய் நாட்கள் ஆகியுள்ள நிலையில் படத்தின் வசூல் குறித்த நிலவரங்கள் வரத்தொடங்கியுள்ளன.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து, ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான திரைப்படம், தங்கலான். இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
பாக்ஸ் ஆபிஸ் வசூல்
இந்த நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸான தங்கலான் திரைப்படம் உலகளவில் ரூ.68 கோடி வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.