Box office collection: தங்கலானா? .. டிமான்டியா.. கோதாவில் ஜெயித்தது யார்? - கோப்பை யாருக்கு?- வசூல் விபரம் இங்கே!
Box office collection: சனியும், ஞாயிறும் தோராயமாக 6 கோடி வரை வசூல் செய்த தங்கலான் திரைப்படம், திங்கள் கிழமை 2 கோடியும், செவ்வாய் கிழமை 1.62 கோடி ரூபாயும் வசூல் செய்தது. - வசூல் விபரம் இங்கே!

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து, ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம், தங்கலான். இந்தத் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பும் தங்கலான்:
இந்தியாவில் வெளியான அன்று 13 கோடி வசூல் செய்த தங்கலான் திரைப்படம் 2 வது நாளில் 4 கோடி வசூல் செய்தது. சனியும், ஞாயிறும் தோராயமாக 6 கோடி வரை வசூல் செய்த தங்கலான் திரைப்படம், திங்கள் கிழமை 2 கோடியும், செவ்வாய் கிழமை 1.62 கோடி ரூபாயும் வசூல் செய்தது. இந்த தகவல்களின் படி பார்க்கும் போது தங்கலான் திரைப்படம் 6 நாட்களில் 33. 52 கோடி வசூல் செய்தது. உலகளவில் 48 கோடி வசூல் செய்திருக்கிறது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 7 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்கி இருக்கிறார். அருள்நிதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். சாம்.சி. எஸ் இசையமைத்து இருந்த இந்தப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. இன்றைய நாளின் வசூலோடு சேர்த்து பார்க்கும் போது, இந்தியாவில் மட்டும் இந்தப்படம் 18.35 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.