Thangalaan Twitter Review: தங்கலான் மூலம் மின்னினாரா சியான் விக்ரம் - இதோ ட்விட்டர் விமர்சனம்!
Thangalaan Twitter Review: தங்கலான் படம் இன்று ( ஆகஸ்ட் 15 ) வெளியாகி இருக்கும் நிலையில் படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் தங்களின் விமர்சனங்களை ட்விட்டர் தளத்தில் வெளியீட்டு வருகிறார்கள்.

Thangalaan Twitter Review: தங்கலான் மூலம் மின்னினாரா சியான் விக்ரம் - இதோ ட்விட்டர் விமர்சனம்!
Thangalaan Twitter Review: சார்பட்டா பரம்பரைக்குப் பின், பா. ரஞ்சித் கடைசியாக இயக்கிய படம், நட்சத்திரம் நகர்கிறது. அதனைத் தொடர்ந்து, அவர் இயக்கிய படம் தான், தங்கலான். இப்படத்தில் நடிகர் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி, அர்ஜுன் பிரபாகரன் மற்றும் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள்.
ஜி. வி. பிரகாஷ் இசை
ஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். எஸ். எஸ். மூர்த்தி கலை இயக்கத்தை கவனிக்க பட தொகுப்பு பணிகளை ஆர்.கே. செல்வா மேற்கொண்டிருக்கிறார்.
இப்படத்தின் ஷீட்டிங், ஒகேனக்கல், மதுரை, ஆந்திராவின் கடப்பா போன்றப் பல்வேறு பகுதிகளில் நடந்தது.