Thangalaan Trailer: ‘சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை'- பதம் பார்க்கும் பா.ரஞ்சித்..தங்கலான் ட்ரெய்லர்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thangalaan Trailer: ‘சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை'- பதம் பார்க்கும் பா.ரஞ்சித்..தங்கலான் ட்ரெய்லர்!

Thangalaan Trailer: ‘சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை'- பதம் பார்க்கும் பா.ரஞ்சித்..தங்கலான் ட்ரெய்லர்!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 10, 2024 05:32 PM IST

Thangalaan Trailer: நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தங்கலான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. - தங்கலான் ட்ரெய்லர்!

Thangalaan Trailer: ‘சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை.. பதம் பார்க்கும் பா.ரஞ்சித்..தங்கலான் ட்ரெய்லர்!
Thangalaan Trailer: ‘சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை.. பதம் பார்க்கும் பா.ரஞ்சித்..தங்கலான் ட்ரெய்லர்!

Thangalaan Trailer:தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'தங்கலான்'. இந்தப்படத்தில், சீயான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி, அர்ஜுன் பிரபாகரன் மற்றும் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.ி ஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். எஸ். எஸ். மூர்த்தி கலை இயக்கத்தை கவனிக்க பட தொகுப்பு பணிகளை ஆர்.கே. செல்வா மேற்கொண்டிருக்கிறார். 

பீரியாடிக் ஆக்சன் என்டர்டெய்னர்

கோலார் தங்க வயல் பின்னணியில், பீரியாடிக் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை, ஸ்டுடியோ கிரீன் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இந்தப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாளவிகா பேட்டி 

முன்னதாக, இந்த திரைப்படம் குறித்து பேசிய மாளவிகா, “ நான் இப்போது தங்கலான் படத்தை திரும்பி பார்க்கும் போது, இப்படியான கடினமான பயணத்தை விக்ரம் சார் இல்லாமல் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இந்தத்திரைப்படம் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.

என்னுடைய ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு ஷாட்டிலும் விக்ரம் சார் எனக்கு உதவியாக இருந்தார். விக்ரம் சுயநலம் இல்லாதவர். தன்னைச் சுற்றி உள்ளவர்களை, அவர் நன்றாக பார்த்துக்கொள்வார். சகநடிகர்களை ஊக்கப்படுத்துவார். அவரிடம் இருக்கும் நகைச்சுவை வேற லெவலில் இருக்கும்.” என்று பேசினார். தங்கலான் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கி இருக்கிறது.  

முன்னதாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ரஞ்சித், இன்றைய ஓடிடி நிலவரம் குறித்து பேசினார். 

ஓடிடியின் பாகுபாடு

இரண்டரை வருடங்களுக்கு முன்பு சின்ன படங்களுக்கு ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. ஆனால் இப்போது சின்ன பட்ஜெட் படங்களை அவ்வளவு எளிதில் ஓடிடியில் விற்க முடியாது. அமேசான், நெட்ஃபிளிக்ஸ் ஆகிய ஓடிடி தளங்கள் பெரிய படங்களைத்தான் வாங்குகிறார்கள். வருடத்திற்கு 20 படங்கள் வாங்குகிறார்கள் என்று வைத்துக்கொண்டால் அந்த 20 படங்களும் பெரிய நடிகர்களின் படங்கள்தான்;

இங்குள்ள ஓடிடி தளங்களில் சின்ன பட்ஜெட் படங்களை வாங்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லை; ஆனால் நீலம் தயாரிப்பு நிறுவனத்தை பொறுத்தவரை அது கொஞ்சம் எளிதாக இருக்கிறது; காரணம் என்னால் சில வேலைகள் நடக்கிறது. சின்ன பட்ஜெட் படங்களை இன்று தியேட்டருக்கு கொண்டு செல்வது மிகவும் கடினமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. அவர்கள் தியேட்டர்களை நமக்கு ஒதுக்கீடு செய்யமாட்டார்கள்.

காலையில் 10 மணி காட்சி கொடுப்பார்கள் அல்லது படமே பார்க்காத திரையரங்குகளில் படத்தை திரையிட வாய்ப்பு கிடைக்கும். இங்கு இப்படி என்றால், ஓடிடியில் சின்ன பட்ஜெட் படங்களை பற்றி பேசக்கூட முடியாது; அப்படி அவர்கள் வாங்க வேண்டும் என்றால், மாதக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டி இருக்கிறது; அப்படி படத்தை பார்க்கும் ஓடிடி தளத்திற்கு படம் பிடிக்க வில்லை என்றால் அவர்கள் அந்தப்படத்தை வாங்க மாட்டார்கள். இதில் இன்னொரு சிக்கல் அவர்கள் படம் குறித்தான தங்களது கருத்துக்களையும் பிற ஓடிடி நிறுவனங்களிடம் சொல்லி விடுவர். ஆதலால், அதுவும் சிக்கலாக மாறியிருக்கிறது; மக்களிடமும் இந்த மாதிரியான படங்களுக்கு ஆதரவு இல்லை.” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.