தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கு ஏன் சென்னையில் சிலை.. எப்படி எஸ்.கே. படத்தில் ஜெயம் ரவி இணைந்தார்.. சித்ரா லட்சுமணன்
தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கு ஏன் சென்னையில் சிலை.. எப்படி எஸ்.கே. படத்தில் ஜெயம் ரவி இணைந்தார் என சித்ரா லட்சுமணன் பேட்டியளித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கு ஏன் சென்னையில் சிலை என்பது பற்றியும், எப்படி எஸ்.கே. படத்தில் ஜெயம் ரவி இணைந்தார் என்பது குறித்தும் சித்ரா லட்சுமணன் பேட்டியளித்துள்ளார்.
டூரிங் டாக்கிஸ் யூட்யூப் சேனலில் சினிமா நிகழ்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன் கூறியதாவது,
‘’மெட்டி ஒலி டைரக்டர் திருமுருகன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?
பதில்: மெட்டி ஒலி டைரக்டர் ஒரு படத்தை இயக்கும் எண்ணத்தில் தான் இருந்தார். ஆனால், அதற்கானப் பணிகள் சரியாக நடக்காததால் திருமுருகன் மீண்டும் சீரியல் இயக்கப்போவதாக தெரியவருகிறது.
அதிகமான படங்களுக்கு வசனம் எழுதியது ஏ.எல். நாராயணன் அவர்களா, இல்லை ஆரூர் தாஸ் அவர்களா என்பதைப் பற்றி சொல்லுங்கள்.
பதில்: தமிழில் அதிகமான படங்களுக்கு வசனம் எழுதிய ஆரூர் தாஸுக்கு மட்டுமே சொந்தமானது.
பாடகர் அருண்மொழி என்ன செய்கிறார்?
பதில்: என்னுடைய இயக்கத்தில் வெளிவந்த சூரசம்ஹாரம் திரைப்படத்தில், ’நான் என்பது நீயல்லவா தேவ தேவி’ என்கின்ற அற்புதமான பாடலைப் பாடியிருந்தார், அருண்மொழி. அதுதான், அவருக்கு முதல் பாடல். அதன்பின்னர், பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடும் வாய்ப்பு அருண்மொழிக்குக் கிடைத்தது, அவரது திறமைக்கு அவர் அடைந்திருக்க வேண்டிய உயரம் வேறு. ஏன் அவர் அந்த நிலையை அடையவில்லை எனத் தெரியவில்லை. அவர் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பங்கு எடுப்பதில் அவருக்கு தனிப்பட்ட விருப்பம் இல்லை.
தனுஷ் நிறையப் படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். எந்தப் படத்தில் தான் முதலில் நடிச்சுமுடிக்கப்போகிறார்?
பதில்: ஒரு படத்தை எப்போது ஆரம்பித்து எப்போது முடிக்கணும் என்ற கணக்கோடு தான் தனுஷ், ஒரு படத்தில் கமிட் ஆகிறார். தனுஷ் ஒப்புக்கொண்ட படங்களின் பட்டியலை வைத்துக்கொண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்புதான், முதலில் தொடங்கும் என நீங்களாக ஒரு கற்பனையை வளர்த்துக்கொண்டால், தனுஷ் எப்படி பொறுப்பு ஆவது.
ஜெயம் ரவியின் ஜீனி படம் எப்போது ரிலீஸாகும்?
பதில்: ஜெயம் ரவி நடித்திருக்கும் ஜீனி படம் இந்த ஆண்டு வெளியாக வாய்ப்பு இல்லை. நிச்சயமாக அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் படம் வெளியாகும்.
ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் வேள்பாரி குறித்துச் சொல்லுங்க?
பதில்: ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம், அடுத்த மாதம் 10ஆம் தேதியன்று வெளியாக இருக்கிறது. அந்தப் படம் வெளியானபின் தான் வேள்பாரி படத்தில் ஷங்கர் கவனம் செலுத்துவார்.
சிம்பு எந்தப் படத்தில் நடிக்கிறார்?
சிம்பு தக் லைஃப் படத்தில் நடித்துமுடித்துவிட்டார். அடுத்து அவர் எந்தப் படத்தில் நடிப்பார் என்பது சிம்புவுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.
தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கு ஏன் சென்னையில் சிலை வைச்சிருக்காங்க?
தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கு சிலை வைச்சது தமிழக அரசோ, ஆந்திர அரசோ அல்ல, அவருக்கு சொந்தமான இடத்தில் தனது சிலையை வைத்திருக்கிறார். சோபன் பாபுவை பொறுத்தவரை, தயாரிப்பாளர்களுக்கு இணக்கமான நடிகர். மேலும் தனது சம்பாத்தியத்தை எப்படி சேமிக்க வேண்டும் என்பதைப் பலருக்கு கற்றுக்கொடுத்த நபர்.
ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் படத்தில் எப்படி ஒப்புக்கொண்டார்?
பதில்: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்க ஒப்புக்கொண்டார் என்றால், அந்த கதாபாத்திரத்தின் தன்மை. அப்படி அழகாக எழுதியிருக்கிறாராம், படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா. விக்ரம் - வேதா திரைப்படத்தில் விஜய்சேதுபதி - மாதவன் கதாபாத்திரம்போல், இந்த கதாபாத்திரம் எழுதப்பட்டிருப்பதால் எந்தவொரு மறுப்பும் சொல்லாமல் நடிக்க ஒத்துக்கொண்டார், ஜெயம் ரவி'' இவ்வாறு முடித்தார், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.
நன்றி: டூரிங் டாக்கிஸ்
டாபிக்ஸ்