Sivaji: சிவாஜி தேவர் பிலிம்ஸில் நடிக்காததற்குக் காரணம்.. மத கஜ ராஜா படத்தின் வெற்றி சொல்வது - சித்ரா லட்சுமணன் பேட்டி
Sivaji: சிவாஜி தேவர் பிலிம்ஸில் நடிக்காததற்குக் காரணம்.. மத கஜ ராஜா படத்தின் வெற்றி சொல்வது என சித்ரா லட்சுமணன் பேட்டியில் கூறியுள்ளார்.

Sivaji: சிவாஜி தேவர் பிலிம்ஸில் நடிக்காததற்குக் காரணம்.. மத கஜ ராஜா படத்தின் வெற்றி சொல்வது என்ன என்று சித்ரா லட்சுமணன் பேட்டியளித்துள்ளார்.
அதில் டூரிங் டாக்கிஸ் யூட்யூப் சேனலில் லென்ஸ் நிகழ்ச்சியில் திரைப்பட பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்திருக்கிறார்.
ஜெயிலர் 2-வுக்கான புரோமோ திரையரங்கில் காட்டுறாங்க ஓ.கே. ஆனால், அந்த பத்து நிமிஷ புரோமோவுக்கு 50 ரூபாய் வசூலிக்குறாங்களே அதுபற்றி?
ஜெயிலர் 2 புரோமோ எல்லா திரையரங்கிலும் திரையிட்டுக் காட்டவில்லை. சில தியேட்டர்களில் மட்டுமே திரையிட்டுக்காட்டப்பட்டது. இது முழுக்க ரஜினி ரசிகர்களுக்கானது. குறிப்பாக, அவர்கள் அதை பொருட்படுத்தமாட்டார்கள் என்று நினைத்து தான் அப்படி கட்டணம் விதிச்சுருக்காங்க. அதனால், அந்த விமர்சனத்தைத் தவிர்த்திடலாம்.
ஹிப்ஹாப் ஆதி இப்போது என்ன பண்ணிட்டு இருக்கார்?
ஹிப்ஹாப் ஆதி தனது அடுத்த படத்துக்கான பணிகளில் தான் தீவிரமாக உள்ளார். ஒரு பக்கம் நடிப்பு, இன்னொரு பக்கம் டைரக்ஷன் அப்படி இருந்தாலும், மற்ற படங்களுக்கு இசையமைக்கவும் தயாராகத் தான் இருக்கிறார்.
இயக்குநர் ஷங்கருக்கு என்ன ஆச்சு. எப்போதும் அப்டேட்டாக இருக்கும் ஷங்கர், புரொடியூசருக்காக தன்னை காம்ப்ரமைஸ் பண்ணிக்கிறாரா?
இயக்குநர் ஷங்கரை பொறுத்தவரை காம்ப்ரமைஸ் பண்ணிக்கொள்ளும் இயக்குநர் அல்ல. அவருடைய தீவிர ரசிகர்களால் அவரது தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை என்பது தான் உண்மை. இந்த நிலையில் இருந்து மீண்டு வர ஷங்கர் முயற்சி செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசையும் கூட
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் உலகம் சுற்றும் வாலிபன் 2, கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜீ ஆகிய படங்கள் கைவிடப்பட்டுருச்சா?
ஐசரி கணேஷ் அடுத்தடுத்து தயாரிக்கும் படங்களின் பட்டியலை முழுமையாகப் பார்த்தேன். அதில் கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு திரைப்படமும், உலகம் சுற்றும் வாலிபன் 2 படமும் இல்லை. அதனால் அந்தப்படம் கைவிடப்பட்டுருச்சு என்று தான் நானும் நினைக்கிறேன்.
மத கஜ ராஜா படத்தில் மனோ பாலா சார்,பேசாமல் பலரை சிரிக்கவைச்சிருப்பார். அவரை தமிழ் சினிமா இன்னும் சரியாகப் பயன்படுத்தவில்லையா?
- மத கஜ ராஜா திரைப்படம் குறித்து பல முறை மனோ பாலா என்னிடம் பேசியிருக்கிறார். இப்போது அனைத்து ரசிகர்களும் பாராட்டிக் கொண்டு இருக்கின்றனர். மனோ பாலாவை பொறுத்தவரை, அவரை தமிழ் சினிமா சரியாகப் பயன்படுத்தவில்லை என்று சொல்லமுடியாது.
பல வன்முறைப் படங்களுக்கு மத்தியில் பொங்கலுக்கு வெளியான மத கஜ ராஜா திரைப்படம் பெரியளவில் வெற்றி பெற்றிருக்கிறது. மக்கள் மனநிலை மாறியதால், இப்படி படங்கள் வருமா?
சராசரியான கதைப்போக்கில் இருந்து மாறி கொஞ்சம் நகைச்சுவையுடன் அமைக்கப்பட்டிருப்பதே, மத கஜ ராஜா வெற்றிக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. நகைச்சுவை படங்கள் வெற்றி அடையும் என்பது தெரிந்து இருந்தாலும், சமீபத்திய படங்களில் போதிய நகைச்சுவை இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறது, மத கஜராஜாவின் வெற்றி.
நடிகர்கள் ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா நடித்த கோல்மால் படத்தின் சூட்டிங் முடிவடைந்துவிட்டதா? படம் எப்போது வெளிவரும்?
ஜீவாவும் மிர்ச்சி சிவாவும் நடித்த கோல்மால் படத்தின் சூட்டிங் முடிவடைந்து ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்படியிருந்தும் இந்தப் படம் வெளியாகவில்லை என்றால், அந்தப் படத்திற்கான பொருளாதாரச்சிக்கல்கள் தான் காரணம்.
தமிழில் உருவான முதல் டிஜிட்டல் திரைப்படம் என்ன? இந்தியாவில் முதல் டிஜிட்டல் திரைப்படம் என்ன?
கமல் ஹாசன் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படம் தான், முதல் டிஜிட்டல் திரைப்படம் ஆகும். இப்படம் ஹிந்தியிலும் வெளியானது. அதனால் தான், இப்படம் இந்தியாவில் முதல் டிஜிட்டல் திரைப்படமாக கருதப்படுகிறது.
தேவர் பிலிம்ஸில் சிவாஜி சார், எம்.எஸ்.விஸ்வநாதன் சார் இடம்பெறாமல் போகக் காரணம் என்ன?
தேவர் பிலிம்ஸில் அதிகம் படங்களுக்கு இசை அமைத்தவர், கே.வி.மகாதேவன். எப்படி இசையமைப்பாளராக பயணிக்க வேண்டும் என்பதை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கற்றுத்தந்தவர், கே.வி.மகாதேவன். அதனால் தான், தேவர் பிலிம்ஸ் படங்களுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கவில்லை. சிவாஜி கணேசன் தேவர் பிலிம்ஸில் நடிக்காததற்குக் காரணம், எம்.ஜி.ஆர். அவரது தயாரிப்பில் நடிக்கிறார் என்பதால் தான்.
நன்றி: டூரிங் டாக்கிஸ்

டாபிக்ஸ்