Chitra Lakshmanan: தமிழ் சினிமாவின் என்சைக்ளோபீடியா! தோண்ட தோண்ட தகவல் தரும் அட்சய பாத்திரம்.. HBD சித்ரா லட்சுமணன்..
Chitra Lakshmanan: தமிழ் சினிமாவைப் பற்றி பலரும் அறியாத பல தகவல்களை தன்னுள் வைத்திருக்கும் என்சைக்ளோபீடியாவாக விளங்கும் இயக்குநரும் தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனுக்கு இன்று பிறந்தநாள்.

Chitra Lakshmanan: சித்ரா லட்சுமணன் என்ற பெயருக்கு தமிழ் சினிமாவில் தனியாக எதுவம் அடையாளம் தேவைப்படுவது இல்லை. அதவும் இவர் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்கு பின் இவரது பெயரே மாறும் அளவிற்கு அந்த கதாப்பாத்திரம் பேசப்பட்டது.
ஹார்டுவேர் கடை டூ பத்திரிகையாளர்
சினிமாவில் அவர் இவ்வளவு புகழையும் சாதாரணமாக எல்லாம் பெறவில்லை. ஆரணியில் பிறந்த இவர், ஹார்வேர்டு கடையில் வேலை செய்து, பின் விடிவெள்ளி எனும் பத்திரிகையில் பணியாற்றினார். அந்த பத்திரிகை மூடும் வரை பணியாற்றி பின் பல பத்திரிகையில் பத்திரிகையாளராக பணியாற்றி பின் திரைக்கதிர் எனும் பத்திரிகையை சொந்தமாக தயாரித்தார்.
பாரதிராஜாவின் பிஆர்ஓ
இந்த பத்திரிகை மூலம் அவருக்கு தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களுடனான நட்பு கிடைத்தது. இந்த சமயத்தில் அவருக்கு இயக்குநர் பாரதிராஜாவுடனான நட்பு கிடைத்து அவரது படங்களுக்கு பிஆர்ஓவாக மாறினார். பின் அவருடனே தொடர்ந்து பணியாற்றி உதவி இயக்குநராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.