Vijay Deverakonda: ‘ ‘ஷாம்பு பாட்டில்ல இன்னுமும்.. நான் மிடில் கிளாஸ் பையந்தான்..’ - பேட்டியில் எமோஷனல் ஆன விஜய்!
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர்கள் சிரஞ்சீவியும், விஜய் தேவரகொண்டாவும் உரையாடினார்கள். அந்த உரையாடலில், மிடில் கிளாஸாக இருந்த அனுபவம் முதல் சினிமாவில் நடிப்பது வரை என அனைத்தையும் பேசினார்கள்.
தெலுங்கு டிஜிட்டல் மீடியா கூட்டமைப்பு சார்பில், ஹைதராபாத்தில் ‘ஒரிஜினல் டே’ என்ற நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு பிரபலங்களோடு, செல்வாக்கு மிக்க பலரும் கலந்து கொண்டனர். அவர்கள் முன்னர் தெலுங்கு நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் விஜய்தெவரகொண்டா ஆகிய இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினார்கள்.
'நான் இன்னும் மிடில் கிளாஸ் பையன்தான்'
விஜயும், சிரஞ்சீவியும் தங்கள் வாழ்க்கையில் நீண்ட தூரம் வந்திருக்கலாம்; அவர்களின் பொருளாதார நிலையும் மேம்பட்டிருக்கலாம். இருப்பினும், இருவரும் இன்றளவும் உள்ளுக்குள் 'மிடில் கிளாஸ்' என்பதை ஒப்புக்கொண்டனர்.
விஜய் தேவரகொண்டா பேசும் போது, "என் வாழ்க்கை நிறைய மாறிவிட்டது, ஆனால் என்னுடைய தலையில், நான் இன்னும் அந்த மிடில் கிளாஸ் சிறுவன்தான் என்பது ஓடிக்கொண்டே இருக்கிறது. இன்றும் ஷாம்பு பாட்டில் காலியாகும் போது, அதில் தண்ணீர் ஊற்றி முழுவதுமாக பயன்படுத்திய பின்னரே பாட்டிலை தூக்கி எறிகிறேன்” என்று பேசினார்.
இதனை ஆமோதித்த சிரஞ்சீவி, நானும் அப்படித்தான் என்று சொல்லி, “சோப்புத்துண்டுகளின் சின்ன சின்ன பாகங்களை சேர்த்து வைத்து, அடுத்த வாரத்திற்கு பயன்படுத்துகிறேன்.” என்றார்.
மேலும் என்னுடைய குடும்பம் மின்சாரத்தை அதிகமாக வீணாக்குகிறது. நான்தான் மின் விளக்குகளை அணைக்கிறேன். அண்மையில் என்னுடைய மகன் ராம் சரண் விளக்குகளை அணைக்காமல் பாங்காக் சென்றார். நான்தான் விளக்குகளை அணைத்தேன். தண்ணீரை சேமிப்பதிலும் நான் கவனமாக இருக்கிறேன்” என்று பேசினார்.
'நான் என் குடும்பத்தை கவனிக்க விரும்புகிறேன்'
சிரஞ்சீவிக்கு ஏராளமான உறவினர்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய விஜய், நீங்கள் இன்று மெகா குடும்பத்தின் வழிகாட்டி, ஆனால் அதற்கு முன்பு உங்கள் குடும்பத்தின் நட்சத்திரம் யார்?" என்று சிரஞ்சீவியிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த சிரஞ்சீவி, "எனது தந்தை வெங்கட் ராவ் என்றார்.
மேலும், எனது குடும்பத்தை எவ்வாறு கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை அவரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். என் அம்மாவின் (அஞ்சனா தேவி) குடும்பத்தையும், அவர் தனது சொந்த குடும்பத்தைப் போலவே கவனித்துக்கொள்வதைப் பார்த்து நான் வளர்ந்தேன்.” என்றார்.
மேலும் பேசிய அவர், “சுரேகாவும் (அவரது மனைவி) நானும் எங்கள் குடும்பத்தை ஒரே மாதிரியாக கவனிக்க விரும்புகிறோம். நாங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் சில நாட்களாவது சந்தித்துக்கொள்வதை வழக்கமாக வைத்து இருக்கிறோம். அண்மையில் சங்கராந்தி பண்டிகையின் போது நாங்கள் எல்லோரும் ஒன்றாக சந்தித்தோம். அந்த சந்திப்பை நிகழ்த்த முயற்சி எடுக்க வேண்டி இருக்கிறது. காரணம் எல்லோரும் பிஸியாக இருந்தனர்.
'உங்கள் பலத்தை அறிந்து கொள்வது முக்கியம்'
2002 ஆம் ஆண்டு வெளியான இந்திரா படத்தை உதாரணம் காட்டிய விஜய், சிரஞ்சீவியிடம் படைப்புகளை திரும்பிப் பார்க்கும்போது அவர் எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டார். "யெவடையே சுப்பிரமணியம் அல்லது பெல்லி சூப்புலு படங்களின் போது, நான் எவ்வளவு பயந்தேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது.ஆனால், நான் கவலைப்பட எந்த காரணமும் இல்லை என்று இப்போது தெரியும்.” என்று பேசினார்
“நான் இன்று என்ன செய்ய முடியும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். அர்ஜூன் ரெட்டி படத்தில் உங்களை பார்த்த போது உங்களின் தோற்றம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதை ஒருபோதும் விடாதீர்கள். உங்களின் அணுகுமுறையையும் உயிர்ப்புடன் வைத்திருங்கள், இது உங்கள் சொத்து. உங்கள் பலங்களை அறிந்து கொள்வது முக்கியம். அதுதான் என்னை இத்தனை ஆண்டுகளாக வெற்றிகரமாக வைத்திருக்கிறது” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
செய்க
டாபிக்ஸ்