தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Chiranjeevi Says Hanuman Makers Will Donate 5 Rupees From Each Ticket To Ram Temple

HanuMan: 'ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் ராமர் கோயிலுக்கு நன்கொடையாக ரூ.5 தருவோம்' - அனுமன் படக்குழு அறிவிப்பு

Marimuthu M HT Tamil
Jan 08, 2024 07:17 PM IST

ஹைதராபாத்தில் நடந்த அனுமன் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, படம் குறித்துப் பேசினார்.

அனுமன் படக்குழுவினருடன் சிரஞ்சீவி
அனுமன் படக்குழுவினருடன் சிரஞ்சீவி

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பான வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வில், பேசிய நடிகர் சிரஞ்சீவி, ‘’ராமர் கோயில் திறப்பு விழாவில் அனுமன் படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. 

ராமர் கோயில் கட்டுவதற்காக, தங்கள் படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் ரூ.5னை நன்கொடையாக வழங்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்தச் செய்தியை படக்குழு சார்பில் நான் அறிவிக்கிறேன். ஒரு உன்னதமான முடிவை எடுத்த அனுமன் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

அனுமன் படத்தை பிரசாந்த் வர்மா இயக்கியுள்ளார். இப்படத்தில் தேஜா சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார், அம்ரிதா ஐயர், வினய் ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின்மூலம் இயக்குநர் தனக்கென ஒரு சூப்பர் ஹீரோ சினிமா யுனிவர்ஸை உருவாக்க முயற்சித்துள்ளார். கடந்த மாதம் வெளியான இந்த ட்ரெய்லர் நிறைய பேரால் பார்க்கப்பட்டது. அதில் தேஜா அதிகாரத்தைப் பெற்று, உலகைக் காப்பாற்றும் பணியில் சிறப்பாக நடித்துள்ளார்.

 விழா குறித்த கூடுதல் தகவல்கள்:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயிலில் குடமுழுக்கு நடக்கவுள்ளது. இதற்கான பணிகள்,முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இவ்விழாவில் ரஜினிகாந்த், ரன்பீர் கவூர், ஆலியா பட் ஆகியோர் பங்கு எடுக்கின்றனர். 

முன்னதாக, அயோத்தியில் பாரம்பரிய நகர பாணியில் கட்டப்பட்ட ராமர் கோயில் வளாகமானது 380 அடி நீளமும் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலமும் மற்றும் 161 அடி உயரமும் கொண்டதாக இருக்கிறது என்று ஸ்ரீராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.