33 Years of Chinna Thambi :’போவோமா ஊர்கோலம்’.. 356 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படம்.. 33 ஆம் ஆண்டில் சின்னத்தம்பி!
33 Years of Chinna Thambi : இப்படத்தின் கதை சாதாரணமாக தோன்றினாலும் இந்த கதைக்கு இயக்குனர் பி வாசு தனக்கே உரிய பாணியில் படத்தின் தரத்தை மெருகேற்றி நமக்கு கொடுத்திருப்பார். இதுவே இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

33 ஆம் ஆண்டில் சின்ன தம்பி
இயக்குனர் பி வாசுவின் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சின்னத்தம்பி. இப்படத்தில் நாயகனாக பிரபுவும் நாயகியாக குஷ்பூவும் நடித்திருப்பார்கள். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பார். இப்படம் தமிழ் சினிமாவின் மிக முக்கிய திரைப்படமாக இன்று வரை இருக்கிறது.
இப்படத்தின் கதை என்பது மகாராணி போல குஷ்புவை வளர்க்கும் அண்ணன்கள், அந்த வீட்டில் வேலை செய்யும் பிரபுவுக்கும் குஷ்புவுக்கும் காதல் மலர்கிறது. இந்த காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் இந்த சின்ன தம்பி.
அதாவது இப்படத்தில் பிரபு உலகம் தெரியாமல் ஒரு குறு வட்டத்தில் சுற்றித் திரியும் கள்ளம் கபடம் அற்ற நபராக நடித்திருப்பார். அதேபோல குஷ்பூவும் துள்ளித் திரிந்து பறக்க நினைக்கும் ஒரு சுட்டி பெண்ணாக நடித்திருப்பார்.
