தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Chinna Gounder' Is An Unforgettable Film Even If The Captain Is Gone!

31 Years of Chinna Gounder: 'பெரிதாக கவர்ந்த சின்ன கவுண்டர்' கேப்டன் மறைந்தாலும் மறக்க முடியாத படம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 15, 2024 05:10 AM IST

வெகுவாக ஆக்சன் ஹீரோவாக பார்த்து பழகிப்போயிருந்த காலத்தில் இந்த படம் விஜயகாந்த்தை வித்தியாசப்படுத்தியது.

சின்ன கவுண்டர்
சின்ன கவுண்டர்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆர். வி. உதயகுமார் படத்தின் இயக்குனர். விஜயகாந்த் சின்னகவுண்டர் தவசி ஆகவும் மனோரமா அவரின் அம்மாவாகவும், சுகன்யா தெய்வானை ஆகவும் சலீம் கௌஸ் சர்க்கரை கவுண்டராகவும் சத்யபிரியா சுந்தரியாகவும், இவர்களோடு கவுண்டமணி, வடிவேலு, செந்தில், கமலா காமேஷ் ஆகியோர் நடித்த படம்.

வெகுவாக ஆக்சன் ஹீரோவாக பார்த்து பழகிப்போயிருந்த காலத்தில் இந்த படம் விஜயகாந்த்தை வித்தியாசப்படுத்தியது. ஜெல் போட்டு படிய ஏற்றி வாரப்பட தலையோடு மடிப்பு களையாத வேட்டி வெள்ளை சட்டையோடு பெரிய மனிதருக்கான தோற்றத்தில் விஜயகாந்த் அசத்தி இருப்பார்.  வறுமையான குடும்ப பெண்ணாக சுகன்யா சுயமரியாதையோடு வாழ்ந்த கொண்டிப்பார். ஒரு கட்டத்தில் விஜயகாந்த் காதல் மனைவியாக வருவார். சுகன்யா மனோரமா ஆகியோரின் அன்பு சண்டைகள் படம் முழுக்க ரசிக்க வைக்கிறது. கவுண்டமணி, செந்தில் காம்போ காமெடியில் பட்டையை கிளப்பிய படம். விஜயகாந்தை ஊர்மக்கள் தவறாக பேசும் போது ஊரில் எவருக்கும் துணி துவைக்க மாட்டேன் என்று சொல்லும் போது கவுண்ட மணியின் நடிப்பு உச்சம் பெறும். ஒல்லியான வடிவேலு படத்தில் விஜயகாந்த் க்கு குடை பிடித்த படி வருவார். படத்தில் வில்லனாக சர்க்கரை கவுண்டர் பாத்திரத்தில் சலிம் கௌஸ் பிரமாதப்படுத்துவார்.

இந்த படத்தில் வழக்கம் போல் உள்ள பஞ்சாயத்து காட்சிகள் கூட வலுவாக அமைக்கப்பட்டிருக்கும். தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டும் இருக்க கூடிய மொய் விருந்து காட்சி பிரதானமாக உணர்வு பூர்வமாக அமைக்க பட்டிருக்கும். சுகன்யா தனது வீட்டில் மொய் விருந்து நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர் சாப்பிட்டு விட்டு இலைக்கு அடியில் அந்த குடும்பத்துக்கு பணம் வைத்து விட்டு செல்வார்கள். விஜயகாந்த் இலைக்கு அடியில் தாலியை வைக்கும் காட்சி படத்தின் கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். அதற்கு அடுத்தடுத்து வரும் காட்சிகள் விஜயகாந்த் சுகன்யாவின் காதலை கொண்டாட வைக்கும். அடுத்தடுத்த நகர்வுகள் விஜயகாந்தை தாயே ஒதுக்கி வைப்பதும்..  சூழலால் சுகன்யாவின் தங்கையின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நானே காரணம் என சொல்ல வைப்பதும் பார்வையாளர்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சிகள்

பாரதி ராஜா வின் ஆஸ்தான எழுத்தாளர் செல்வராஜ் தான் கதை வசனம் அமைத்திருப்பார்.

இளையராஜா இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் தான். படம் ஆரம்பிக்கும் போதே கண்ணுபடப்போகுதய்யா சின்ன கவுண்டரே பாடல் நம்மை வசப்படுத்தி விடும். எஸ்.பி.பி. சுசிலா குரலில் "முத்துமணி மாலை" அத்தனை இதம். "அந்த வானத்தை போல" விஜயகாந்தின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அத்தனை பொருத்தம். "உன் வாலை கொஞ்சம் சுருட்டி கொள்ளடி' பாடலில் குறும்பு. "கூண்டுக்குள்ள உன்னை வச்சி " பாடலில் உருக்குவதாகட்டும்.. அது இளையராஜா இசையில் மட்டுமே சாத்தியம் ஆகும். 

படம் எப்படி எவர் கிரீன் மூவியாக பார்க்கப்படுகிறதோ அதுபோல் தான் பாடல் அனைத்தும் எவர் கிரீன் என்று சொல்லும் அளவிற்கு அமைந்தது. இன்றும் கேட்கவர்களை கலங்க வைக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். 

தொடக்கத்தில் சுகன்யா தொப்புளில் பம்பரம் விட்டு ஆரம்பித்து வைத்த படம் இதுதான். நிறைய இடங்களில் நம்மை கலங்க வைக்கும் படமும் இதுதான்... மொத்தத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் எவர்கிரின் மூவி. கேப்டன் மறைந்தாலும் தமிழ் ரசிகர்கள் என்றும் மறக்க முடியாத படம் சின்னகவுண்டர்.

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.