Chinna Chinna Kangal: பிறந்தநாள் ஸ்பெஷல்.. விஜய் குரலில் நாளை வெளியாகும் ரொமாண்டிக் பாடல்-chinna chinna kangal to release from the greatest of all time - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Chinna Chinna Kangal: பிறந்தநாள் ஸ்பெஷல்.. விஜய் குரலில் நாளை வெளியாகும் ரொமாண்டிக் பாடல்

Chinna Chinna Kangal: பிறந்தநாள் ஸ்பெஷல்.. விஜய் குரலில் நாளை வெளியாகும் ரொமாண்டிக் பாடல்

Aarthi Balaji HT Tamil
Jun 21, 2024 12:21 PM IST

Chinna Chinna Kangal: விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை ( ஜூன் 22 ) தி கோட் படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 விஜய் குரலில் நாளை வெளியாகும் ரொமாண்டிக் பாடல்
விஜய் குரலில் நாளை வெளியாகும் ரொமாண்டிக் பாடல்

தவிர, இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் சென்னை மட்டுமல்லாது, தாய்லாந்து, ஹைதராபாத், இலங்கை, புதுச்சேரி, திருவனந்தபுரம், ரஷ்யா ஆகிய இடங்களிலும் நடைபெற்று வருகிறது. 

மேலும் நடிகர் விஜய், இந்த திரைப்படத்தில், இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாகவும் தெரிகிறது. முன்பே, நடிகர் விஜய், அழகிய தமிழ் மகன், வில்லு, கத்தி, மெர்சல்,பிகில், லியோ ஆகியப் படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நிலையில் தற்போதும் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன் சங்கர் ராஜா இசை

இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் படத்துக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸாகும் வகையில் தயார் ஆகி வருகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக, கல்பாத்தி அகோரம்,கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் என சகோதரர்கள் மூவர் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'' படத்துக்கு உண்டான ஒளிப்பதிவினை சித்தார்த்தா நுனி புரிய, வெங்கட் ராஜின் என்பவர் எடிட் செய்கிறார். இப்படத்துக்குண்டான வசனத்தை விஜி மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.

இப்படத்தில் கங்கை அமரன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக் ஆகிய நால்வர் சேர்ந்து, படத்துக்குண்டான பாடல்களை எழுதியுள்ளனர்.

ராஜூ சுந்தரம்

பொதுவாகவே விஜய் படத்தில் நடனம் பட்டையைக் கிளப்பும். இப்படத்திலும் நடனத்திற்கு வலுவாக இடம்தரும் ராஜூ சுந்தரம், சேகர் மற்றும் சதீஷ் ஆகியோர் சேர்ந்து பாடல்களுக்கு நடன அமைப்பினை செய்துள்ளனர்.

அதேபோல், விஜய் படத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது. அதற்கும் தீனிபோடும் வகையில் திலீப் சுப்புராயன் மாஸ்டர், தி கோட் திரைப்படத்துக்கான சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். மேலும், இத்திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விசில் போடு

இப்படத்தின் அதிகாரப்பூர்வ படப்பிடிப்பு அக்டோபர், 2023ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், இப்படத்தினை 2024ஆம் ஆண்டு, செப்டம்பர் ஐந்தாம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகின்றனர். சமீபத்தில் ‘தி கோட்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், விசில் போடு, ஏப்ரல் 14 சித்திரை முதல் நாளை ஒட்டி ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை ( ஜூன் 22 ) தி கோட் படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

சின்ன சின்ன கண்கள்

அதன் படி இரண்டாவது பாடலுக்கு, சின்ன சின்ன கண்கள் எனும் தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இப்பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார். நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.