தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Chinmayi Sripaada Slams Rahat Fateh Ali Khan For Thrashing An Employee

Chinmayi on Rahat Fateh Ali Khan: பணியாளரை தாக்கிய பாடகர்.. ‘இத நிறுத்தணும்..திறமையால தப்பிச்சு..’ ; புரட்டிய சின்மயி!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 28, 2024 02:23 PM IST

இவர்களில் சிலர் பொதுவெளியில் நல்லவர்கள் போலவும், மென்மையாக பேசும் நபர்கள் போலவும் நடந்து கொள்கிறார்கள்.

Chinmayi Sripaada has reacted to the recent controversy surrounding Rahat Fateh Ali Khan.
Chinmayi Sripaada has reacted to the recent controversy surrounding Rahat Fateh Ali Khan.

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த விளக்கத்தில், “இது மிகவும் பர்சனலான விஷயம். அவன் என்னுடைய மகன் போன்றவன். ஆசிரியருக்கும் ஒரு மாணவனுக்கும் இடையே இருக்கும் உறவு இப்படித்தான் இருக்கும். அவன் ஒரு விஷயத்தை நன்றாக செய்யும் பட்சத்தில், அவன் மீது அன்பை பொழிகிறேன். அவன் தவறு செய்யும் பட்சத்தில், அவனை தண்டிக்கிறேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறியிருந்தார்.

தாக்கப்பட்ட நபர் பேசும் போது, “ நான் புனித நீரை தவறான இடத்தில் வைத்துவிட்டேன். அதனால்தான் அவர் என்னை அடித்தார். அவர் எனக்கு அப்பா போன்றவர். என் மீது அவருக்கு அளவு கடந்த அன்பு இருக்கிறது. அவரின் பெயரை களங்கப்படுத்துவதற்காக சிலர் இதனை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கின்றனர்” என்று கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக சின்மயி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “ இவர்களில் சிலர் பொதுவெளியில் நல்லவர்கள் போலவும், மென்மையாக பேசும் நபர்கள் போலவும் நடந்து கொள்கிறார்கள். 

இவர்கள் இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்களில் இறங்குவார்கள் என்று யாரும் நினைக்க மாட்டார்கள். அவர்கள் முன்னால் கேமராக்கள் இருக்கும் போது, நாம் லெஜண்ட் என்று சொல்லும் இவர்கள், மற்றவர்களுக்கு என்ன செய்கிறார்கள் என்பது வெளிப்படும். பயங்கரம்” என்று பதிவிட்டு இருந்தார். 

மேலும் அவரின் விளக்கத்திற்கு பதிலடி கொடுத்த சின்மயி, “ ஒரு விஷயத்தை நன்றாக செய்யும் பட்சத்தில் அன்பையில், தவறு செய்யும் பட்சத்தில் கண்டிப்பையும் அவர் கொடுப்பதாக விளக்கம் கொடுத்திருக்கிறார். 

பொதுவாக குருக்கள், அவர் இருக்கும் இடத்தின் தெய்வீகத்தால் பாதுகாக்கப்படுகிறார்கள். அவர்கள் இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடும் போது, அவர்களின் இடம், திறமை போன்றவற்றிற்காக மன்னிக்கப்பட்டு விடுகிறார்கள். இது நிறுத்தப்பட வேண்டும்” என்று பதிவிட்டு இருக்கிறார்.

.

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.