அது என்ன பெண்ணுக்கு மட்டும் கன்னித்தன்மை.. விர்ஜின் தான் வேணும்ன்னா நீங்க செக்ஸ் பன்னாதிங்க - சின்மயி கருத்து
கன்னித்தன்மை என்பது பெண்களை மட்டும் குறி வைக்கப்படும் இரட்டை நிலைப்பாடாக உள்ளது. கன்னி பெண்களை திருமணம் செய்ய விரும்பினார் ஆண்கள் செக்ஸ் வைத்துக்கொள்ள கூடாது என்று பாடகி சின்மயி கருத்து தெரிவித்துள்ளார்.
பாடகி, டப்பிங் கலைஞராக இருந்து வரும் சின்மயி தென்னிந்திய சினிமாக்கள் மட்டுமல்லாமல் பாலிவுட், மராத்தி போன்ற பல மொழிகளிலும் ஏராளமான ஹிட் பாடல்களை பாடியுள்ளார். பெண்களுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் துன்புறுத்தல், அத்துமீறல்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து குரல் கொடுப்பவராக இருந்துள்ளார்.
இதையடுத்து இந்திய ஆண்கள் திருமணம் செய்ய கன்னி பெண்கள் இல்லை என்று புலம்பிய எக்ஸ் பயனாளரை பாடகி சின்மயி சாடியுள்ளார். கன்னித்தன்மை விஷயத்தில் பெண்களுக்கு மட்டுமே பொருத்தப்படும் இரட்டை தன்மை குறித்தும் விமர்சித்துள்ளார்.
லட்சத்துக்கும் மேல் காண்டம்கள் டெலிவரி
எக்ஸ் பயனாளர் ஒருவர் பகிர்ந்த பதிவில், "பிளிங்க்இட் சிஇஓ தனது சமூக வலைத்தள பகிர்வில், 1.2 லட்சம் காண்டம் பார்சல்கள் ஒரே இரவில் டெலிவரி செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.
ஒரு இரவுக்கு, அதுவும் பிளங்க்இட் தளத்தில் மட்டும் இவ்வளவு என்றால், மற்ற இ-காமர்ஸ் தளங்கள், சந்தை விற்பனை என கணக்கில் கொண்டால் 10 மில்லியனுக்கும் மேல் இருக்கலாம்.
இந்த தலைமுறையினர் கன்னி பெண்களை தேடிப்பிடித்து திருமணம் செய்வதற்கு வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த எக்ஸ் பதிவின் ஸ்கிரீன் ஷாட்டை ஷேர் செய்து, "அப்படியானால் ஆண்கள் திருமணத்துக்கு முன்பு பெண்களிடம் பாலியல் உறவு வைத்துக்கொள்ள கூடாது. ஆண்கள் ஆடுகள், நாய்கள் மற்றும் ஊர்வனவற்றுடன் உடலுறவு கொள்கிறார்கள் என சொல்லும்வரை" என தனது சமூக வலைத்தளபக்கத்தில் தெரிவித்திருந்தார்.
ஆண்களுக்கு ஒரு வித நோய்
இதற்கு பதிலடி தரும் விதமாக சின்மயியை கோமாளி என குறிப்பிட்டு, பெண்களும் அதை செய்யகூடாது என பதில் அளித்திருந்தார். இந்த நபருக்கும் ரிப்ளை செய்த சின்மயி, " பெண்கள் கன்னித்தன்மை மீது ஆர்வம் கொண்டவர்கள் இல்லை.
ஆண்கள் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருந்ததாக பெண்கள் கருதுகிறார்கள். நீங்கள் அனைவரும் பாதுகாப்பான அல்லது பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டீர்களா என்று கேட்க கூட உங்கள் தைரியம் இல்லை.
பாலியலில் விருப்பம் இல்லாத சகோதரர்கள், ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டவுடன் நிரந்தரமாக அவர்களை மாசுபடுத்திவிட்டதாக நினைக்கிறார்கள். இது ஆண்களுக்கு ஏதோ ஒரு வித நோய் இருப்பதை காட்டுகிறது." என குறிப்பிடடுள்ளார்.
சின்மயிக்கு குவியும் ஆதரவு
இந்த விஷயத்தில் சின்மயிக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். இதில், "காண்டம் வாங்குவதை குறிப்பிட்டிருக்கும் அந்த நபர், ஏன், ஒவ்வொரு கணவன்மார்களும் தங்களது மனைவியிடம் பாதுகாப்பான பாலியல் உறவு வைத்துக்கொள்ள காண்டம் வாங்கியிருப்பார்கள் என்பதை கருதவில்லை" என பயனாளர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
தனது குற்றச்சாட்டு தொடர்பாக பல்வேறு ஆதாரங்களையும் பாடகி சின்மயி முன் வைத்தார். இத்தோடு நில்லாமல் சினிமாவில் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையில் பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் துன்புற்றுத்தல்கள், தொல்லைகள் குறித்து தொடர்ந்து வெளிப்படுத்தியும், அம்பலப்படுத்தியும் வருகிறார். அத்துடன் பெண்களை குறி வைத்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கும் எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது பெண்களின் கன்னித்தன்மை குறித்து கருத்து தெரிவித்த சமூக வலைத்தள பயனாளருக்கு தனது எதிர்ப்பு குரலை வெளிப்படுத்தியுள்ளார்.
டாபிக்ஸ்