Chhaava review: மிஸ் ஆன ரஹ்மான் மேஜிக்.. கோட்டை விட்ட ராஷ்மிகா.. மிரட்டிய விக்கி கெளசல் - ‘சாவா’ படம் எப்படி?
Chhaava review: படம் பார்க்க பிரமாண்டமாக இருந்தாலும், படத்தின் எமோஷனுடன் பெரிதாக கனெக்ட் ஆக முடியவில்லை. ஒரு வேளை எமோஷனுடன் கனெக்ட் ஆக பிரியப்பட்டால், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். - சாவா விமர்சனம்!

சாவா விமர்சனம்: ‘சாவா’ திரைப்படத்தில், சத்ரபதி சம்பாஜி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்கி கெளஷல் வெளிப்படுத்தி இருக்கும் நடிப்பு அவர் அந்த கதாபாத்திரத்திற்காக, எவ்வளவு மெனக்கெடல் செய்து இருக்கிறார் என்பதை உணர முடிகிறது. படத்தின் உச்சபட்ச எமோஷனை அடைவதற்கான நகர்வு சரியான பாதையில் இல்லை. அது அது நம் பொறுமையை சோதிக்கிறது.
கதையின் கரு: -
லக்ஷ்மன் உடேகர் இயக்கத்தில், விக்கி கெளஷல், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து, இன்று வெளியான திரைப்படம் ‘சாவா’. மராட்டிய சாம்ராஜ்யத்தின் இரண்டாவது சத்ரபதியான சம்பாஜி மகாராஜை மையப்படுத்தி இந்தப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.
முகாலய பேரரசர் ஒளரங்கசீப் (அக்ஷய் கண்ணா) தன்னுடைய எல்லையை விரிவுபடுத்த விரும்புகிறார். அதனை தடுத்து பின்வாங்க வைக்கிறார் சம்பாஜி மகாராஜா (விக்கி கெளஷல்). இதில் கடுமையான கோபம் கொண்ட ஒளரங்கசீப், சம்பாஜி மகாராஜாவை தோற்கடிக்கும் அன்றைய நாளில்தான் தான் மீண்டும் நான் முடி சூடுவேன் என சபதம் ஏற்கிறார். அந்த சபத்தில் இருவருக்குமான சண்டை உச்சக்கட்டத்தை எட்டுகிறது. அதன் பின்னர் என்ன நடந்தது என்பது மீதிக்கதை!
சிவாஜி சாவந்த் எழுதிய ‘சாவா’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் லக்ஷ்மண் இந்தத்திரைப்படத்தை எழுதி, இயக்கி இருக்கிறார். போர் சம்பந்தமான காட்சிகள், கதாபாத்திரத்திற்கான லட்சிய வெறி தொடர்பான காட்சிகள் உள்ளிட்டவை நன்றாகவே வொர்க் அவுட் ஆகி இருக்கின்றன. படத்தின் ஃப்ரேம்களில் பிரமாண்டம் தெரிகிறது. நம்பகத்தன்மையிலும் குறைவில்லா உழைப்பு தென்படுகிறது.
வொர்க் அவுட் ஆகவில்லை.
படம் பார்க்க பிரமாண்டமாக இருந்தாலும், படத்தின் எமோஷனுடன் பெரிதாக கனெக்ட் ஆக முடியவில்லை. ஒரு வேளை எமோஷனுடன் கனெக்ட் ஆக பிரியப்பட்டால், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். படத்தின் ஆதாரப்புள்ளிக்கு கதை நகர்ந்து வரும் பாதையில் அவ்வளவு சண்டைக்காட்சிகள். அவை ஒருகட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகின்றன.
ஒளரங்கசீப்பாக நடித்திருக்கும் அக்ஷய் அச்சுறுத்துகிறார். அவர் வந்தவுடன் படம் சுவாரசியமடைய ஆரம்பிக்கிறது. மனிதர் கண்களிலேயே நடிப்பை கொட்டுகிறார்.
சத்ரபதி சம்பாஜியாக நடித்திருக்கும் விக்கி கெளஷல், சத்ரபதி சம்பாஜியின் நடை முதல் ஆக்ரோஷம் வரை என, அவராக திரையில் தோன்றி நம்ப வைக்கிறார். படத்தில் இடம்பெற்றுள்ள ஈர்ப்பான விஷயங்கள் அனைத்தும் கடைசி 1 மணி நேரத்திற்காக தேக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன.
வசன உச்சரிப்பில் பிரச்சினை
படத்தில் பெண்கள் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தாலும், அவர்களின் திரை நேரம் குறைவாகவே உள்ளது. யேசுபாயாக வரும் ராஷ்மிகா மந்தனா, தேவைப்படும்போது நன்றாக உணர்ச்சிகளைக் கொட்டி நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால், அம்மணி வசன உச்சரிப்பில் கோட்டை விட்டு விட்டார். ஜீனத்தாக நடித்த டயானா பென்டி நடிப்பில் இன்னும் மிரட்டி இருக்கலாம்.
நீளமான சண்டைகளைக் குறைத்து, படத்தின் அச்சராமான இரு கதாபாத்திரத்திற்கு இடையேயான ஈகோவை, படத்தின் திரைக்கதையில் கோர்த்து, லட்க்ஷ்மண்பதற்றத்தை உருவாக்கி இருக்கலாம். ஆனால், அது மிஸ்ஸானது படத்தின் தரத்தில் கைவைத்து விட்டது.
இந்தப்படம், சாவா சாம்பாஜியின் துணிச்சலுக்கும், தியாகத்திற்கும் ஒரு சரியான அஞ்சலியாக இருந்திருக்கலாம். ஆனால், அந்த இலக்கை அடைய விடாமல் நிற்பது மோசமான எடிட்டிங் மற்றும் சூப்பர் ஹீரோயிசம்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை தனித்து நிற்கவில்லை. பின்னணி இசையும் ஓகே ரகம்தான்.
-Rishabh Suri

டாபிக்ஸ்