Chhaava Box Office Day 2: உலகளவில் வசூல் வேட்டை நடத்தும் சாவா படம்.. 2ஆவது நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தெரியுமா?
Chhaava Box Office Day 2: விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

Chhaava Box Office Day 2: சாவா திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த சாவா திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் அதிசயங்களைச் செய்து வருகிறது. முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.47 கோடியே 25 லட்சமாக வசூல் செய்த இப்படம், தற்போது இரண்டாவது நாளில் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது.
லக்ஷ்மண் உடேகர் இயக்கியுள்ள இப்படம் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மகன் சம்பாஜி மகாராஜின் வீரத்தை விவரிக்கிறது.
மும்பை, புனே, ஹைதராபாத், சென்னை ஆகிய நகரங்களில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்திய பாக்ஸ் ஆபிஸில் சாவா படத்தின் முதல் நாள் வசூல் ரூ .31 கோடி ஆகும். அதேசமயம், வெளிநாடுகளில் இருந்து ரூ.10 கோடி வசூல் கிடைத்துள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் முதல் நாள் வசூல் ரூ.41 கோடியைத் தாண்டியுள்ளது.
இப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் இரண்டாவது நாளான பிப்ரவரி 15ஆம் தேதி ரூ .36.5 கோடியை ஈட்டிய நிலையில், பிற நாடுகளில் இருந்து ரூ.25 கோடியை ஈட்டியுள்ளது. அந்த வகையில் சாவா படத்தின் மொத்த வசூல் இதுவரை உலகளவில் 100 கோடியைத் தாண்டியுள்ளது.
விக்கி கௌஷலுக்கு மிகப்பெரிய அங்கீகாரம்:
இரண்டு நாட்களில் படம் இதுவரை மொத்தம் ரூ.102.50 கோடியை ஈட்டியுள்ளதாகத் தெரிகிறது. அதாவது, இரண்டாவது நாளில், படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் அடியெடுத்து வைத்துள்ளது. இது நடிகர் விக்கி கௌஷலின் வலுவான பெரிய ஓபனிங்கை பெற்ற படமாக கருதப்படுகிறது.
முன்னதாக இந்த சாதனை நடிகர் விக்கி கெளஷலுக்கு அவரது படங்களில்'பேட் நியூஸ்' படத்திற்கும், 'உரி - தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்' என்ற படத்திற்கும் தான் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து சாவா படத்தின் முதல் வார வசூல் பெரியளவில் இருக்கும் என எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. ஏனெனில், வார இறுதி வருமானத்தின் அடிப்படையில் மற்ற படங்கள் எந்த சாதனையை முறியடித்துள்ளன என்பதையும் இது பெருமளவில் தீர்மானிக்கும்.
சாவா படத்தின் பட்ஜெட்?
சாவா இந்த ஆண்டின் மிகப்பெரிய ஓப்பனராக மாறியுள்ளது. மேலும் வருவாய் புள்ளிவிவரங்கள் இந்த ஆண்டு இதுவரை வெளியான அனைத்து படங்களையும் முந்தும் சக்தி இந்தப் படத்திற்கு உள்ளது எனச் சொல்கின்றன.
இப்படத்தில் நடிகர் விக்கி கௌஷல், சம்பாஜி மகாராஜா கதாபாத்திரத்தில் மிக அழகாக நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா யேசுபாய் கதாபாத்திரத்தில் ராணியாகவே வாழ்ந்துள்ளார். இந்தப் படம் பொதுமக்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
சுமார் 130 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட சாவா திரைப்படம், முதல் வார இறுதியிலேயே அதன் பட்ஜெட் செலவை வசூலித்து தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் எனத்தெரிகிறது.
மேலும் படிக்க: சாவா திரைப்படம் எத்தகையது?
மேலும் படிக்க: ராஷ்மிகா மந்தனா செய்த செயல்
சாவா படத்தில் நடித்தது குறித்து ராஷ்மிகா:
சாவா படத்தில் நடித்தது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியதாவது, "மகாராணி யேசுபாய் வேடத்தில் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண். இது என் நினைப்பில் இல்லாத ஒன்று. இது சாத்தியம் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. அதனால்தான் எல்லைகளைத் தாண்டி கனவு காண எங்களுக்கு நம்பிக்கையைத் தரும் நபர்களுடன் பணிபுரிவதை நான் விரும்புகிறேன்’’எனத் தெரிவித்து இருந்தார்.
பொறுப்புத்துறப்பு: இந்த பாக்ஸ் ஆபிஸ் செய்தியில் வரும் தகவல்கள் பல்வேறு இணையதளங்களில் பகிரப்படும் மற்றும் பி.ஆர்.ஓக்கள் மூலம் சொல்லப்படும் தகவல்களின் அடிப்படையிலானது. இது அந்த தயாரிப்பு நிறுவனம் தந்த தகவல் அல்ல.
மேலும் படிக்க: வீல் சேரில் ராஷ்மிகா மந்தனா

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்