Urvashi Love Story: பாதியில் விட்டுச்சென்ற முதல் கணவர்.. ஓரவஞ்சனை காட்டிய கோலிவுட்.. ஊர்வசி காதல் முறிந்த கதை!
சிறிய காலத்திலேயே ஊர்வசிக்கும், ஜெயந்திற்க்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. அது ஒரு கட்டத்தில் முற்றி, விவாகரத்து செய்துவிடலாம் என்ற புள்ளிக்கு சென்று விட்டது. அந்த சமயத்தில் ஊர்வசி பேட்டி ஒன்றை கொடுத்த ஞாபகம் இருக்கிறது.

ஊர்வசியின் முதல் காதல் முறிந்த கதை குறித்து ஆகாயம் சினிமாஸ் சேனலுக்கு செய்யாறு பாலு பேசி இருக்கிறார். அவர் பேசும் போது, “ஊர்வசி முதலாவதாக நடிகர் மனோஜ் கே. ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கல்யாணம் செய்து கொண்டது, அப்போது திரைத்துறையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
பொதுவாக சினிமாத்துறையில் திருமணம் செய்து கொண்டால் மார்க்கெட் சரியும். முன்பு போல பட வாய்ப்புகள் வராது. அதுவும் அவர் சிறிது காலம் ஊர்வசி, திரைத்துறையை விட்டு சென்றதற்கு ஒரு முக்கியமான காரணமாகும்.
சிறிய காலத்திலேயே ஊர்வசிக்கும், ஜெயந்திற்க்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. அது ஒரு கட்டத்தில் முற்றி, விவாகரத்து செய்துவிடலாம் என்ற புள்ளிக்கு சென்று விட்டது. அந்த சமயத்தில் ஊர்வசி பேட்டி ஒன்றை கொடுத்த ஞாபகம் இருக்கிறது.
அந்த பேட்டியில் முதல் கணவரால்தான் மதுவுக்கு அடிமையாகி விட்டேன் என்று வெளிப்படையாக பேசி இருந்தார். மேலும், அதிலிருந்து மீள முடியாமல் நெடுங்காலமாக கஷ்டப்பட்டு கொண்டு இருந்ததாகவும், பின்னாளில் கடுமையான முயற்சிகளை எடுத்து, அதில் இருந்து வெளியே வந்ததாகவும் அவர் பதிவு செய்திருந்தார்.
அந்த சமயத்தில் அவரை சுற்றி இருந்த நல்ல ஆத்மாக்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவருக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள்.
குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட நடிகை, இவர் மதுவுக்கு அடிமையாக இருந்த பொழுது, அவர் நடித்த படங்களின் தொகுப்பை அவருக்கு போட்டு காண்பித்து, இந்த மாதிரியான நடிப்பை, யாராவது வெளிப்படுத்த முடியுமா என்று கேட்டதோடு, இப்போது நீ இருக்கும் கோலம் என்ன என்று கேட்டாள். அந்த நாளில் தான் மதுவை விட்டேன். தற்போது நான் மிகவும் வெற்றிகரமாக திரைத்துறையில் நடை போட்டுக் கொண்டிருக்கிறேன் என்றார்.
அவருக்கு அந்த சமயத்தில் ஒரு குழந்தை இருந்தது. அதன் பின்னர் சிவப்பிரசாத் என்பவரை ஊர்வசி கல்யாணம் செய்து கொண்டு இப்போது வரை அவருடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ” என்று பேசினார்.
முன்னதாக, கேரளாவைச் சேர்ந்த நடிகை ஊர்வசி, அதே மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் மனோஜ் கே ஜெயனை காதலித்து, 2000ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருந்தது.
ஊர்வசிக்கு திருமணத்திற்கு முன்பு இருந்தே மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகும் அது தொடர்ந்துள்ளது. இதனால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மனோஜ், ‘இனி இவளோடு வாழவே முடியாது’ என்று முடிவு செய்து, விவாகரத்திற்குச் சென்றார். அதுமட்டுமல்லாமல், தன்னுடைய மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறும் முறையிட்டார் மனோஜ்.
‘எப்போதும் தன்னுடைய மனைவி மது போதையில் இருப்பதால், தன் மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு’ மனோஜ் முறையிட்ட போது தான், ஊர்வசியின் மது போதை பழக்கம் வெளியே தெரியவந்தது.
மனோஜிடம் மகள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சிறிது காலம் கடந்து வேறு திருமணம் செய்து கொண்டார் மனோஜ். அதே போல ஊர்வசியும் மறுமணம் செய்து கொண்டு, ஒரு மகனை பெற்றெடுத்தார். பிரபலமாக பேசப்பட்ட ஊர்வசி-மனோஜ் காதல் திருமணம், மதுவால் முடிவுக்கு வந்தது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்