தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Cheyyaru Balu Latest Interview About Robo Shankar Daughter Marriage

Robo Shankar: அவர் மக.. அவர் காசு… உங்களுக்கு எங்க எரியுது?.. 16 வயது வயது வித்தியாசம்;ரோபோ ஷங்கர் மகள் சங்கதி தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Apr 04, 2024 04:45 AM IST

இந்த மாதிரியான ஒரு சமயத்தில்தான், நான் என்னுடைய மகளின் திருமணத்தை மிகப்பெரிய அளவில் நடத்த வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகத்தான் இப்படி நடத்தினேன். இது என்னுடைய பர்சனல் விஷயம். இதில் உங்களுக்கு எங்கு எரிகிறது என்பது ரீதியாக ஒரு பதிலை அவர் சொல்லி இருந்தார்.

ரோபா ஷங்கர்!
ரோபா ஷங்கர்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு கட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து படங்கள் நடித்து வந்த அவருக்கு ஒரு கட்டத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாக அவரது உடல் மெலிந்து காணப்பட்டது. அதிலிருந்து தற்போது அவர் மீண்டு வந்திருக்கும் நிலையில், அவருடைய மகளான இந்திராஜாவுக்கு பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணத்தை பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். 

இந்த நிலையில் இது குறித்து பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு ஆகாயம் தமிழ் சேனலுக்கு பேசி இருக்கிறார். 

இது குறித்து அவர் பேசும் போது, “ மகள் இந்திரஜாவின் திருமணம் முடிந்த பின்னர், அவர் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில் நான் மிகவும் அடித்தட்டில் இருந்து, இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன். இடையில் எனக்கு உடல் சரியில்லாமல் போனது. கிட்டத்தட்ட செத்துப் பிழைத்து மீண்டும் இந்த வாழ்க்கையை மீட்டெடுத்து இருக்கிறேன் 

இந்த மாதிரியான ஒரு சமயத்தில்தான், நான் என்னுடைய மகளின் திருமணத்தை மிகப்பெரிய அளவில் நடத்த வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகத்தான் இப்படி நடத்தினேன். இது என்னுடைய பர்சனல் விஷயம். இதில் உங்களுக்கு எங்கு எரிகிறது என்பது ரீதியாக ஒரு பதிலை அவர் சொல்லி இருந்தார்.

இந்திரஜாவை திருமணம் செய்திருக்கும் கார்த்தி ஒரு சமூக சேவகர். கிட்டத்தட்ட 23 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இது மட்டுமில்லாமல் தன்னுடைய அன்பு இல்லத்திற்கு பசி என்று வருபவர்களுக்கு, உணவையும் வழங்கி வருகிறார்.

கார்த்தியின் அம்மா ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ரோபோ சங்கரும், நானும் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள் இல்லை என்று;  அதன் பின்னர் தான் இந்த விஷயம் வெளியே தெரிந்தது அவர் அந்த பேட்டியில், நாங்கள் குழந்தைகளை எப்படி தத்தெடுத்து வளர்க்கிறோம் என்பதை புரிந்து கொண்டு, எங்கள் வீட்டிற்கு ஒரு பெண்மணி மருமகளாக வரவேண்டும் என்று நினைத்தோம். அதன் காரணமாகத்தான் இவ்வளவு நாளாக கார்த்திக்கு திருமணம் செய்து வைக்க வில்லை. 

கார்த்திக்கு கிட்டத்தட்ட 38 வயது ஆகிறது. இந்திரஜாவிற்கு 21, 22 வயதுதான் ஆகிறது. கிட்டத்தட்ட 16, 17 வருடங்கள் வயது வித்தியாசம். 

ரோபோ சங்கரை பொருத்தவரை வாழ்க்கையில் மிகவும் போராடி இந்த நிலைமைக்கு வந்தவர். அவர் தன்னுடைய மகளுக்கு பிரமாண்டமாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று இப்படியான ஒரு திருமணத்தை நடத்தி இருக்கிறார். 

ரோபோ சங்கர் ஆகட்டும், ரோபோ சங்கரின் மனைவியாகட்டும் கார்த்தியை நாங்கள் தத்தெடுத்தோம் என்று ஒரு வார்த்தை கூட எங்கேயும் பேசவில்லை. அதற்கு பெரிய மனது வேண்டும்” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்