Dhanush Aishwarya: அப்பா அம்மாவை அவமானபடுத்திய ரஜினி குடும்பம்.. தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு காரணம் இதுவா?
தனுஷின் அம்மா, அப்பா இருவரும் ரஜினி வீட்டுக்கு செல்லும் பொழுது, அங்கு அவர்களை சரிவர கவனிக்கவில்லை என்றும் மரியாதை கொடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதில் ஆரம்பித்த பிரச்சினைதான் பூதாகரமாக வெடித்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்திற்கு மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், அது குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசி இருக்கிறார்.
இது குறித்து ஆகாயம் தமிழ் சேனலுக்கு அவர் பேசும் போது, “ தனுஷ் ரஜினி வீட்டின் மாப்பிள்ளை ஆன பொழுது நாக்குப்பூச்சி போல இருந்து கொண்டு, இவன் ரஜினி வீட்டுக்கே மாப்பிள்ளை ஆகிவிட்டானே என்று சக நடிகர்களே தனுஷை பார்த்து பொறாமை பட்டனர்.
2004 ஆம் ஆண்டு தனுஷும் ஐஸ்வர்யாவும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடந்த பொழுது ஒட்டுமொத்த மீடியாவும் அங்கு தான் இருந்தது. தனுஷ் மீது பல விதமான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. ஆனால் அதையெல்லாம் மீறி தனுஷ், ஐஸ்வர்யாவும் வாழ்ந்து வந்தார்கள்.
தனுஷின் அம்மா, அப்பா இருவரும் ரஜினி வீட்டுக்கு செல்லும் பொழுது, அங்கு அவர்களை சரிவர கவனிக்கவில்லை என்றும் மரியாதை கொடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதில் ஆரம்பித்த பிரச்சினைதான் பூதாகரமாக வெடித்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்தப் கோபத்தில் தான் நடிகர் தனுஷ் அதே போயஸ் கார்டனில் மிகப்பெரிய ஒரு அரண்மனையை கட்டி அதில் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் உட்கார வைத்திருக்கிறார்" என்று பேசினார்.
முன்னதாக, நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் கடந்த 2004- ம் ஆண்டு பிரபல நடிகராக வலம் வரும் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என இரு மகன்கள் இருக்கின்றனர்.
‘3’ திரைப்படம் மூலம் இயக்குநராகவும் களமிறங்கிய ஐஸ்வர்யா முதல் படத்தில் தன்னுடைய கணவரான தனுஷையே கதாநாயகனாக கமிட் செய்து நடிக்க வைத்தார். இசையமைப்பாளர் அனிருத் அறிமுகமான இந்தப்படத்தில் இடம் பெற்ற ஒய் திஸ் கொல வெறி பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஆனால், அந்தப்படம் பெரிய வெற்றியை பெற வில்லை. தொடர்ந்து வை ராஜா வை படத்தை இயக்கினார். அந்தப்படமும் பெரிய வெற்றியை பெற வில்லை.
இதற்கிடையே மகன்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக சினிமாவில் இருந்து விலகினார் ஐஸ்வர்யா. இந்த நிலையில், கடந்த 2022 ம் ஆண்டு யாரும் எதிர்பாரா வண்ணம் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் தாங்கள் பிரிந்து விட்டதாகவும், தங்களது பிரைவசிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் தத்தமது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அறிவித்து அறிக்கை வெளியிட்டனர்.
ஆனால், அதன் பின்னர் அந்த விவகாரம் தொடர்பாக செய்திகள் எதுவும் வெளியாகாத நிலையில், தனுஷின் அப்பாவான கஸ்தூரி ராஜா அது வெறும் குடும்ப பிரச்சினையே என்று பேட்டியளித்தார். அதனை தொடர்ந்து இருவரும் விவாகரத்து செய்யப்போவதில்லை என்பது ரீதியான தகவல்கள் வெளியாகின. ஆனால், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஐஸ்வர்யாவும், தனுஷூம் அண்மையில் விவாகரத்து வேண்டும் என்று கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.
தனுஷ் காதல் கதை
அறிமுகமான புதிதில் அடுத்தடுத்து இரு படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். ஹீரோவுக்கான எந்த தோற்றமும் இல்லாத தனுஷ் மீது எல்லாருடைய பார்வையும் கொஞ்சம் வித்தியாசமாக தான் விழுந்தது. அப்படி தான், ரஜினி மகள் ஐஸ்வர்யா பார்வையும் விழுந்தது.
தனுஷின் சகோதரியும், ஐஸ்வர்யாவும் தோழிகள். அவரை சந்திக்க அடிக்கடி வரும் போது தனுஷ் மீது ஐஸ்வர்யாவின் விழுந்தது. எடுத்த எடுப்பிலேயே டாப் கியர் போட்டுக் கொண்டிருந்த தனுஷின் திறமை மீது ஐஸ்வர்யாவுக்கு அபிப்ராயம்.
தன்னை விட மூத்த பெண், அதிலும் தன்னுடைய சகோதரியின் தோழி, அவரை எப்படி காதலிப்பது என்கிற தயக்கம் தனுஷிற்கு. எதற்குள் இருவரைப் பற்றியும் கிசுகிசுக்கள். ஆனால் ஆரம்பத்தில் அனைத்தையும் மறுத்தார் தனுஷ்.
ரஜினி அப்போது, உச்சத்தில் இருந்த காலகட்டம். தன்னுடைய மகளுக்கு கஸ்தூரி ராஜா மகன் கணவரா? என்கிற தயக்கம் அவருக்கும் இல்லாமல் இல்லை. முடிந்தவரை எதிர்ப்பு தெரிவித்தும், ஐஸ்வர்யா உறுதியாக இருந்தார். வேறு வழியின்றி இருவீட்டாரும் அவர்களின் திருமணத்திற்கு முன்வந்தனர்.
2004 நவம்பர் 18 ம் தேதி, தன்னுடைய 23வது வயதில் தன்னை விட மூத்த வயதுடைய ஐஸ்வர்யாவை மனைவியாக்கினார் தனுஷ். அதன் பின் 18 ஆண்டுகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் மகிழ்வோடு வாழ்ந்த அவர்கள், அதன் பின் பிரிந்த கதை அனைவரும் அறிந்ததே!
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்