Aishwaryaa Dhanush: ‘என்னோட அம்மாவாகவே ஐஸ்வர்யா வந்திருக்கா’ - ஐஸ்வர்யா - ரஜினி பாசக்கதை!
“அந்த வீட்டை பாதி கட்டி கொண்டிருக்கும் போதே, தனுஷூற்கு பண நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இதனையடுத்து ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்திடம், நான் உங்களுக்கு ஆறு படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கிறேன். எனக்கு நீங்கள் அதற்காக, ஒரு மிகப்பெரிய தொகையை ஒரே சம்பளமாக தாருங்கள் என்று கேட்டதாக சொல்லப்படுகிறது”
ஐஸ்வர்யா புதிய வீடு கட்டியிருப்பது குறித்து செய்யாறு பாலு ஆகாயம் சினிமா சேனலுக்கு பேசி இருந்தார்.
அதில், “தனுஷ் போயஸ் கார்டனில் மிகப்பெரிய பங்களா ஒன்றை கட்டி, அதில் தன்னுடைய அப்பா, அம்மாவை அமர வைத்திருக்கிறார். அதில் ஆரம்பித்த விவாதங்களும்,பிரச்சினைகளும்தான் ஐஸ்வர்யா மற்றும் தனுசுக்கு இடையேயான விவாகரத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது .
அந்த வீட்டை பாதி கட்டி கொண்டிருக்கும் போதே, தனுஷூற்கு பண நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இதனையடுத்து ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்திடம், நான் உங்களுக்கு ஆறு படங்களுக்கான கால்ஷீட்டை கொடுக்கிறேன். எனக்கு நீங்கள் அதற்காக, ஒரு மிகப்பெரிய தொகையை, ஒரே சம்பளமாக தாருங்கள் என்று கேட்டதாகவும், அதனை தயாரிப்பு நிறுவனம் ஒத்துக்கொண்டு கொடுத்ததாகவும் பேசப்படுகிறது.
எப்போதுமே ஒரு வீட்டில் மூத்த பிள்ளை மீது அப்பா, அம்மாவிற்கு அதிக பாசம் இருப்பது வழக்கமான ஒன்றுதான். அதே மாதிரி தான் ஐஸ்வர்யா பிறந்த பொழுதும், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அம்மா ஜாடையிலேயே, ஒருவர் பிறந்திருப்பதாகவும், தன்னுடைய அம்மா தான் தனக்கு குழந்தையாக வந்திருப்பதாகவும் பேட்டி கொடுத்தார். அந்த அன்பு எப்பொழுது அதிகமானது என்றால், ராணா படத்தின் பொழுது ரஜினிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் வீட்டிற்கு வந்தார்.
வீட்டிற்கு வந்த பின்னரும் வாந்தி எடுத்தார். அதனை தொடர்ந்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஏதோ வயிறு கோளாறு என்ற ரீதியில் அவர்கள் சொல்லிவிட, ரஜினி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் நடுராத்திரி அவருக்கு மீண்டும் வாந்தி வந்தது. இதனையடுத்து காவேரி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்கிறார்கள்.
அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள், உடலில் நிறைய பிரச்சினை இருக்கிறது என்று சொல்லி, ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். ராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்ட உடன், அவரைப் பற்றிய தேவையில்லாத வதந்திகள் அனைத்தும் வெளியே பரவ ஆரம்பித்துவிட்டன. மீடியாவும், ரசிகர்களும் மருத்துவமனையின் முன் குவிந்து விட்டார்கள்.அப்போது ரஜினியின் பக்கத்தில் ஒரு மகன் போல இருந்து அவரை பாதுகாத்தது ஐஸ்வர்யாதான். அந்த அளவுக்கு ஐஸ்வர்யா அப்பாவின் மீது பாசம் வைத்தார்.
வதந்திகளை புறந்தள்ள அவரை ஒரு ஆடியோவில் நன்றாக இருக்கிறேன் என்று சொல்ல வைத்து வெளிவிட்டதும் ஐஸ்வர்யாதான். இதையடுத்து அவர் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றவர் திரும்பி வரும் பொழுது, போயஸ் கார்டனில் அவருக்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு தான் முதலில் செல்ல வேண்டும் என்று சொல்லி, அங்கு தான் சென்றார்.
ரஜினி, தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு, ஐஸ்வர்யா வீட்டில் மன அழுத்தத்தோடு உட்கார்ந்திருந்த பொழுது, நீ படம் செய் என்று சொல்லி உத்வேகப்படுத்தி, லால் சலாம் படத்தை எடுக்க வைத்தார். இதனைத் தொடர்ந்துதான் தனுஷின் வீட்டை விட, ஒரு நல்ல வீட்டை நான் கட்டி, அதில் உங்கள் இருவரையும் அமர வைக்கிறேன் என்று சொன்னார். தற்போது அந்த வீட்டை கட்டி இருக்கிறார்” என்று பேசினார்.
டாபிக்ஸ்