தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Archana Chandhoke: அப்பாவுக்கு கொடுத்த சத்தியம்.. வீடியோவில் ஆனந்த கண்ணீர்.. பென்ஸ் காரை வாங்க 25 வருஷம் ஆச்சா?

Archana Chandhoke: அப்பாவுக்கு கொடுத்த சத்தியம்.. வீடியோவில் ஆனந்த கண்ணீர்.. பென்ஸ் காரை வாங்க 25 வருஷம் ஆச்சா?

Kalyani Pandiyan S HT Tamil
Apr 11, 2024 06:47 AM IST

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அர்ச்சனா பேட்டி ஒன்றில் வினித்தை தான் விவாகரத்து செய்ய முடிவெடுத்ததாக கூறினார். அதற்கு காரணமாக அவர் சொன்னது என்னவென்றால், பெரும்பாலும் அவர் வெளிநாடுகளிலேயே இருக்கிறார் எப்போதாவது ஒரு 10 நாட்கள் வீட்டில் தங்கும் வகையில் வருகிறார்.

தொகுப்பாளினி அர்ச்சனா
தொகுப்பாளினி அர்ச்சனா

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா 75 லட்சம் ரூபாய் மதிப்பு  கொண்ட பென்ஸ் காரை வாங்கி இருக்கிறார். இது தன் தந்தையின் கனவு என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது சிறு வயதில் அவரது தந்தை அவரிடம் நன்றாக வளர்ந்து, சம்பாதித்து, தன்னை ஒரு பென்ஸ் காரில் கூட்டிச் செல்ல வேண்டும் கூடியிருக்கிறார். அவரது கனவைத்தான் தற்போது அர்ச்சனா நிறைவேற்றி இருக்கிறார். 

1999 ஆங்கில செய்தி வாசிப்பாளராக தன்னுடைய கேரியரை தொடங்கிய அர்ச்சனா, அதன் பின்னர் சன் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலம் அடைந்தார். இவருக்கு 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரோடு திருமணம் நடந்தது. அவர்  கப்பற்படையில் ஆஃபிஸராக பணியாற்றி வருகிறார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அர்ச்சனா பேட்டி ஒன்றில் வினித்தை தான் விவாகரத்து செய்ய முடிவெடுத்ததாக கூறினார். அதற்கு காரணமாக அவர் சொன்னது என்னவென்றால், பெரும்பாலும் அவர் வெளிநாடுகளிலேயே இருக்கிறார் எப்போதாவது ஒரு 10 நாட்கள் வீட்டில் தங்கும் வகையில் வருகிறார். 

19 வருடங்களுக்கு இப்படியே ஓடிவிட்டன. இப்படி ஒரு வாழ்க்கை தனக்குத் தேவையா என்று தனக்கு தோன்றியதாகவும், அதன் காரணமாகவே அவர் அந்த முடிவை எடுத்ததாகவும் கூறினார். அந்த சமயத்தில் அவருடைய மகள் ஸாராதான் அவருக்கு புத்திமதி சொல்லி,  அவரை நல்வழிப்படுத்தி இருக்கிறார்.

இந்த நிலையில் தான் வினித்திடம் இருந்து ஒரு போன் கால் வருகிறது. அந்த போன் காலில் அவர் தன்னை விசாகப்பட்டினத்திற்கு பணியிட மாற்றம் செய்து விட்டதாகவும், இனிமேல் இந்தியாவிற்கு உள்ளேயேதான் இருக்கப்போவதாகவும் கூறியிருக்கிறார். இதைக்கேட்ட உடன் குடும்பம் மகிழ்ச்சியாக மாறியிருக்கிறது. 

அர்ச்சனாவை பல பேர் விமர்சனம் செய்கிறார்கள். அதைப்பற்றி அவர் பேசும் பொழுது, அதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலையே இல்லை. நான் சரியாக இருக்கிறேன். நேர்மையாக இருக்கிறேன் என்று கூறுகிறார். அதற்கு சாட்சி தான் அவர் இந்த பென்ஸ் காரை வாங்குவதற்கு தனக்கு 25 வருடங்கள் ஆகி இருக்கிறது என்று கூறியிருப்பது. 

பிக் பாஸ் சீசன் 4 -ல் வொயில்டு கார்டு போட்டியாளராக அர்ச்சனா உள்ளே நுழைந்தார்.  உள்ளே சென்றவர் அன்பு தான் உலகம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். இதனையடுத்து அவரை பூமர் ஆண்ட்டி உள்ளிட்ட பல வார்த்தைகளால் அவமானபடுத்தினார். 

இதனையடுத்து ஆதரவு குறைவு காரணமாக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். வெளியே வந்தும் அவர் அன்பை பற்றி பேசிக்கொண்டு இருந்ததால், நெட்டிசன்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்தனர். இந்த நிலையில் தான் அவருடைய மகள் ஸாரா அதற்கு பதில் கொடுத்தார். அந்த வீடியோ மிகவும் வைரலாக பரவியது” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்