Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

Aarthi Balaji HT Tamil
May 20, 2024 09:35 AM IST

Vijay: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி பிரிவு என்பது கடந்த 7 மாதங்கள் முன்பில் இருந்து நடக்கிறது. இந்த விஷயம் விஜய்க்கு தெரியவந்தது. அவரும் அழைத்து பஞ்சாயத்து செய்து இருக்கிறார் என சினிமா விமர்சகர் செய்யாறு பாலு கூறினார்.

குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டு கொள்ளாத ஜிவி பிரகாஷ்
குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டு கொள்ளாத ஜிவி பிரகாஷ்

பஞ்சாயத்து செய்த விஜய்

இதனிடையே இவர்களின் பிரிவு தொடர்பாக பேசிய செய்யாறு பாலு, ” ஜி.வி.பிரகாஷ், சைந்தவி பிரிவு என்பது கடந்த 7 மாதங்கள் முன்பில் இருந்து நடக்கிறது. இந்த விஷயம் விஜய்க்கு தெரியவந்தது. அவரும் அழைத்து பஞ்சாயத்து செய்து இருக்கிறார்.

தலைவா படம் முன்பில் இருந்தே ஜி.வி. பிரகாஷும், விஜய்யும் மிக சிறந்த நண்பர்கள், அவர் சொன்னால் கேட்பார் என்பதால், விஜய் அழைத்து பேசினார். ஆனால் ஒன்றும் சரி வரவில்லை.

இந்த நடிகை காரணமா

ஜி. வி. பிரகாஷ் நடித்த படங்களில் தொடர்ந்து கயல் ஆனந்தி நடித்த சமயத்தில் பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்தது. அவர்களும் இந்த விஷயத்தில் ஒன்றும் இல்லை என சொல்லியவுடன் அந்த காம்போ உடைந்து விட்டது. கயல் ஆனந்தி தற்போது திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

அது போல பேச்சுலர் படத்தில் ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து நடித்த திவ்ய பாராதியுடன் பலரும் கிசுகிசுக்கள் பேசினார்கள். இந்த படத்தில் இருவர் கெமிஸ்ட்ரியும் மிக அருமையாக வொர்க் அவுட் ஆகியது இதற்கு முக்கிய காரணமாக அமைந்து இருந்தது.

சைந்தவி மேல் தவறு உண்டா

அதெல்லாம் இவர்களது பிரிவுக்கு காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்று தான் சொல்ல வேண்டும். எனக்கு தெரிந்த வரை பாடகி சைந்தவி தன் பிறந்த வீட்டை பெரிதாக மதித்து தான் சம்பாதித்த பணத்தை முழுவதும் அவர்களுக்கு கொடுத்து இருக்கிறார். அது மட்டுமில்லாமல் கணவர் சம்பாதிக்கும் பணமும் அங்கு செல்கிறது. புகுந்த வீட்டாரை கவனிக்காமல் விட்டுவிட்டார் என சொல்லப்படுகிரது.

இந்த செய்தி எந்த அளவு உண்மை என எனக்கு தெரிவில்லை “ என்றார். 

இசை அமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார், தனது பள்ளித் தோழியான சைந்தவியை காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு, ஜூன் 27 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் அன்வி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில், ஜி.வி.பிரகாஷுக்கும் சைந்தவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 6 மாதமாக பிரிந்து வாழ்வதாகக் கூறப்பட்டது. இவர்கள் இருவரும் அதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இருவரும் பரஸ்பரம் ஒப்பு கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் இன்னும் சொல்லவில்லை.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.