Tamil News  /  Entertainment  /  Cheyyar Balu Latest Interview Devayani Director Rajakumaran Untold Love Story

Devayani Rajakumaran: அடிதடி.. சேஸிங்.. ஆட்களோடு வந்த அம்மா.. முடித்து வைத்த விக்ரமன் தேவயாணி - ராஜகுமாரன் காதல் கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 11, 2024 07:01 AM IST

விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் விக்ரமும் சரத்குமாரும் இணைந்து நடித்திருந்தார்கள். இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து காலையில் இருந்து மதியம் வரை காத்திருந்தார்கள். ஆனால் ராஜகுமாரன் அழைக்கவே இல்லை

தேவயாணி காதல்!
தேவயாணி காதல்!

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “ தேவயாணியை இயக்குநர் ராஜகுமாரன் கல்யாணம் செய்து கொள்ளும் பொழுது, தேவயாணி அழகு எங்கே? இவரின் அழகு எங்கே என்ற பேச்சு திரைத்துறையில் பரபரப்பாக பேசப்பட்டது. 

எப்போதுமே நடிகைகளை கலைஞர்கள், நடிகர்கள் வேறுவிதமான பார்வையில் பார்க்கும் பொழுது, ராஜகுமாரன் அதிலிருந்து முற்றிலுமாக விலகி நின்றார். ஆனாலும் ராஜகுமாரனுக்கு தேவயாணி மீது ஒரு தலை காதல் இருந்தது. 

விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் விக்ரமும் சரத்குமாரும் இணைந்து நடித்திருந்தார்கள். இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து காலையில் இருந்து மதியம் வரை காத்திருந்தார்கள். ஆனால் ராஜகுமாரன் அழைக்கவே இல்லை 

என்னவென்று பார்த்தால் அவர் தேவயாணிக்கு ஷாட் வைத்து எடுத்துக்கொண்டிருந்தார். இதில் டென்ஷனான சரத்குமார் அவரை அடித்து விட்டார். இறுதியில் பெரிய அடிதடி ஆகிவிட்டது. தேவயாணிதான் அவர்களை தடுத்து ராஜகுமாரனை காப்பாற்றினார். 

இதனையடுத்து அந்த படம் ட்ராப்பானது. அதனை தொடர்ந்து மீண்டும் அந்தப்படம் தொடங்கியது. இறுதியில் அந்தப்படம் தோல்வி படமாக மாறியது. அதன் பின்னர்தான் ராஜகுமாரன் தேவயாணியை ஒருதலையாக காதலித்ததும், அந்த காதலை தேவயாணி ஒத்துக் கொண்டதும் தெரியவந்தது. இதனை தேவயாணி வீட்டில் சொன்ன பொழுது, தேவயாணி வீட்டில் மிகப் பெரிய எதிர்ப்பு வந்தது. 

காரணம் தேவயாணி அப்போது முன்னணி ஹீரோயின்களின் பட்டியலில் இருந்தார். ஆனாலும் எதிர்ப்பை மீறி வீட்டிலிருந்து ஏறி குதித்து, தேவயாணி ராஜகுமாரனை திருத்தணியில் வைத்து கல்யாணம் செய்து கொண்டார். அதற்கு சிங்கமுத்துதான் சாட்சி கையெழுத்து  போட்டார். 

இது தேவயாணி அம்மாவிற்கு தெரிந்து அவர் ஆட்களை செட் செய்து, மிகப் பெரிய பிரச்சனைக்கு வழி வகுத்தார். இதனையடுத்து தேவயாணியும் ராஜகுமாரனும் இயக்குனர் விக்ரமின் வீட்டிற்கு சென்று உதவி கேட்டனர். விக்ரம் பஞ்சாயத்து செய்து வைக்க, பிரச்சினை முடிவுக்கு வந்து இன்று வரை அவர்கள் நன்றாக வாழ்ந்து வருகிறார்கள்” என்று பேசினார்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.