தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Cheyyar Balu Latest Interview About Tamil Director Cinematographer Kv Anand Actor Surya Sivakumar Conflict

KV Anand Surya conflict: முதல் மகள் கல்யாணத்திற்கு ஏன் வரல? சூர்யா - கே.வி.ஆனந்த் மோதல்! - பின்னணி இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 12, 2024 12:41 PM IST

மாற்றான் திரை படத்தில் கே வி ஆனந்திற்கும் சூர்யாவிற்கும் இடையே சில கசப்பான சம்பவங்கள் நடந்தது.

நடிகர் சூர்யா கே.வி.ஆனந்த்!
நடிகர் சூர்யா கே.வி.ஆனந்த்!

ட்ரெண்டிங் செய்திகள்

 

இதற்கு முன்னதாக நடைபெற்ற கே.வி.ஆனந்தின் மூத்த மகள் சாதனா கல்யாணத்தில் சூர்யா கலந்து கொள்ள வில்லை. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை பெற்றது. அந்த விமர்சனத்தையும், அதன் பின்னணி குறித்து செய்யாறு பாலு ஆகாயம் தமிழ் சேனலுக்கு பேசி இருந்தார்.  அந்த பேட்டி இங்கே!

அவர் பேசும் போது, “நடிகர் சிவகுமார் பத்திரிகையாளர்கள் உட்பட பிரபலங்கள் யாராக இருந்தாலும் அவர்களது வீட்டு விசேஷங்களுக்கு செல்வார். அதை அவர் ஒரு பழக்கமாகவே வைத்திருந்தார். சூர்யாவும் அதை கடைப்பிடித்து வந்தார்.

ஆனால் இப்போது பல நடிகர்கள் தங்களுடைய படங்கள் உட்பட எந்த நிகழ்வுக்கும் பெரிதாக வருவது கிடையாது. அது ஒரு பேஷனாக மாறி இருக்கிறது. அதைத்தான், சூர்யாவும் தற்போது கையில் எடுத்திருக்கிறார். புகைப்படக் கலைஞர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் என மூன்று கட்டங்களிலும் திறமையானவராக இருந்தார் கே வி ஆனந்த். சூர்யாவை வைத்து கேவி ஆனந்த் 3 படங்களை இயக்கினார்.

மாற்றான் திரை படத்தில் கே வி ஆனந்திற்கும் சூர்யாவிற்கும் இடையே சில கசப்பான சம்பவங்கள் நடந்தது. ஆனால், அதன் பின்னர், அவர்கள் இருவரும் சமாதானம் ஆகிவிட்டார்கள். இந்நிலையில் தான், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கே வி ஆனந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அகால மரணம் அடைந்தார்.

இதனையடுத்து, கே வி ஆனந்த் மகளுக்கு திருமணம் நடந்தது. கேவி ஆனந்தின் நண்பர்கள் தனித்தனியாக தங்களை பிரித்துக் கொண்டு, பத்திரிகைகளை கொடுக்கச் சென்றனர். இதில் சிவகுமார் குடும்பத்திற்கு மட்டும் கேவி ஆனந்தின் மனைவியே சென்று கொடுப்பதாக சொல்லிவிட்டார். அதன்படி அவர் சிவகுமாரிடம் கொண்டு பத்திரிகையை கொடுத்திருக்கிறார்.

சிவகுமாரோ பல்வேறு காரணங்களைச் சொல்லி, அந்த சமயத்தில் வர முடியாது என்று சொன்னதாக சொல்லப்படுகிறது. சரி அன்று செல்ல முடியவில்லை; ஆனால் கல்யாணம் முடிந்து இவ்வளவு நாட்கள் ஆன பின்னர் கூட அங்கு இவர்கள் செல்லவில்லை. சூர்யா கூட அவர்களது வீட்டிற்குச் சென்று மணமக்களை வாழ்த்த வில்லை; அப்படி வாழ்த்தியிருந்தால் நிச்சயமாக கேவி ஆனந்தின் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும்.” என்று பேசினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.