Shruti haasan: கமல் கொடுத்த சுதந்திரம்.. குடி குடி குடி..?லிவிங் டு கெதர் வாழ்க்கை! - ஸ்ருதி வாழ்க்கையில் நடப்பது என்ன?
அவர் பேசும்பொழுது நான் குழந்தைகளை ஆண், பெண் என்று பிரித்து பார்ப்பதில்லை; அவர்களுக்கான முழு சுதந்திரத்தையும் நான் கொடுத்திருக்கிறேன். இன்னும் ஒரு படி மேலே சென்று செல்ல வேண்டுமென்றால் அவர்களை நான் பெண் பிள்ளைகளாக பார்க்கவில்லை என்றார்.

கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் அண்மையில் தான் குடிப்பழக்கத்தை விட்டு விட்டதாக பேசி இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஸ்ருதி ஹாசன் குறித்து ஆகாயம் தமிழ் சேனலுக்கு செய்யாறு பாலு பேசி இருக்கிறார்.
அவர் பேசும் போது, “ஸ்ருதிஹாசன் அவ்வளவு ஓப்பனாக தன்னுடைய பர்சனல் சார்ந்த விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். எனக்கு இந்த இடத்தில், கமல் ஒரு முறை தன்னுடைய பிள்ளைகள் குறித்து பேசியது தான் ஞாபகத்திற்கு வருகிறது;
அவர் பேசும்பொழுது நான் குழந்தைகளை ஆண், பெண் என்று பிரித்து பார்ப்பதில்லை; அவர்களுக்கான முழு சுதந்திரத்தையும் நான் கொடுத்திருக்கிறேன். இன்னும் ஒரு படி மேலே சென்று செல்ல வேண்டுமென்றால் அவர்களை நான் பெண் பிள்ளைகளாக பார்க்கவில்லை என்றார்.
இன்னொரு சம்பவமும் ஞாபகம் வருகிறது. பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் படங்கள் வெளியான சமயத்தில் கமல்ஹாசன் சிம்ரனுடன் லிவிங் டு கெதர்- ல் இருப்பதாக கூறி ஒரு பிரபல பத்திரிக்கையானது எழுதியது. இதைப் பார்த்து கோபம் அடைந்த கமல்ஹாசன், இன்னொரு பத்திரிக்கையில், என்னுடைய படுக்கை அறையின் ஜன்னலை எட்டிப் பார்க்கிறாயா? என்ற ரீதியில் காரசாரமாக பேட்டி கொடுத்தார்.
அந்த அளவுக்கு போல்டாக பேட்டி கொடுப்பவர் தான் கமல். அவரை ஜெராக்ஸ் எடுத்தது போல இருப்பவர்தான் ஸ்ருதிஹாசன். ஸ்ருதிஹாசனிடம் இன்னொரு குவாலிட்டி இருக்கிறது. அது என்னவென்றால் என்னைப் பற்றி என்ன விமர்சனம் வேண்டுமானாலும் வையுங்கள். ஆனால் அதை பற்றி கவலைப்பட மாட்டேன் என்று இருப்பது. அதுதான் அவரை இப்படியான ஒரு பேட்டியை கொடுக்க வைத்திருக்கிறது” என்று பேசினார்.

டாபிக்ஸ்